அசதியை போக்கும் 'அத்திப்பழம்' | ருசி | Rusi | tamil weekly supplements
அசதியை போக்கும் 'அத்திப்பழம்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:00

அத்திப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் உள்ள அத்திப்பழத்தை, உடல் பலவீனமானவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. தினசரி, 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பலம் பெறும். மலச்சிக்கலை நீக்க, உணவுக்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க, 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கிறது. புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஆய்வுகள் கூறுகின்றன. இதைத் தவிர, வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X