அல்லி ராணி!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
00:00

அமேசான் நீர் அல்லி

ஆங்கிலப் பெயர்: 'அமேசான் வாட்டர் லில்லி' (Amazon Water Lily)
தாவரவியல் பெயர்: விக்டோரியா அமேசானிகா (Victoria amazonica)

அமேசான் நீர் அல்லி, 'நிம்பேயேசியே' (Nymphaeaceae) எனப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் இருக்கும் அல்லிகளில் மிகப்பெரியது இதுதான். இதன் தாயகம், தென் அமெரிக்கா. அமேசான் நதியில் காணப்படுகிறது. 40 முதல் 50 இலைகளுடன், 12 மீட்டர் அகலத்துக்கு வளரும். அருகில் வேறு தாவரங்களை வளர விடாது. மிக அகன்ற இலைகள் சூரிய ஒளியைத் தடுப்பதால், இதன் அடியில் நீர்ப்பாசிகள்கூட வளர்வதில்லை.
இலைகள் 3 மீட்டர் அகலம் கொண்டவை. வட்டவடிவிலான இலையின் ஓரங்கள் மடங்கி, பெரிய தட்டு போல இருக்கும். இலைகளின் அடிப்பகுதியில், கூரிய இளஞ்சிவப்பு நிற முட்கள் இருக்கும். இலைகளைத் தாங்கும் தண்டு உறுதியானது. 8 மீ. நீளம் உடையது. இந்த இலைகள், 30 கிலோ வரை எடை தாங்கும். குழந்தைகள் அமர்ந்தாலும் இலை நீரில் மூழ்காது.
இதன் மலர், 40 செ.மீ. நீளம் இருக்கும். இரவில் நறுமணத்துடன் பூக்கும். இரண்டு நாட்களில் வாடிவிடும். முதல் நாள் வெள்ளை நிறத்தில் இருக்கும். வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை முடிந்த அடுத்த நாளில் இளஞ்சிவப்பாக மாறிவிடும்.
பூக்களின் உள்ளிருக்கும் கதகதப்பால், வண்டுகள் இரவு முழுவதும் பூவுக்குள்ளேயே தங்கிவிடும். அடுத்த நாள், உடல் முழுதும் மகரந்தத்தை பூசியபடி, வேறு மலருக்குச் செல்லும்.
மாறிய பெயர்
இந்த அல்லியை, 'டாடியாஸ் ஹீன்கி' (Tadeas Haenke) என்பவர் 1801இல் கண்டறிந்தார். அப்போது, 'யூர்யேல் அமேசானிகா' (Euryale amazonica) எனப் பெயர் சூட்டினார். 1849இல் இம்மலர், 'ஜோசப் பாக்ஸ்டன்' (Joseph Paxton) என்பவரால் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் முதல் மலர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
விக்டோரியா மகாராணியைக் கௌரவிக்கும் விதமாக, இதன் தாவரவியல் பெயர் 'விக்டோரியா ரிஜியா' (Victoria regia) என மாற்றப்பட்டது.
- அ.லோகமாதேவி

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X