அகாய் பட்ஜெட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2011
00:00

மொபைல் போன் விற்பனையில் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிகளை எடுத்து வரும் அகாய் நிறுவனம், அண்மையில் அகாய் நிஞ்சா ப்ளஸ் என்ற பார் டைப் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள் ளது. இரண்டு பேண்ட் அலை வரிசையில் இயங்கும் இந்த போன், 1.8 அங்குல வண்ணத்திரையைக் கொண்டுள்ளது. இதன் அட்ரஸ் புக்கில் 500 முகவரிகளைத் தேக்கி வைக்கலாம். இதன் மெமரி ஸ்லாட் மூலம், நினைவகத்தின் திறனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். இரண்டு சிம் இயக்க போனாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மாடல் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதில் கேமரா தரப்படவில்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பிப் பெறலாம். எம்.பி.3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. எல்.இ.டி. டார்ச் ஒன்று இணைக்கப் பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,250 எனக் குறிக்கப்பட்டுள்ளது.

வீடியோகான் மியூசிக் போன்
பல்வேறு மாடல்களில் போன் களையும், சேவைக் கட்டணத் திட்டங்களையும் கொண்டு, மொபைல் மார்க்கட்டைக் கலக்கி வரும் வீடியோகான் நிறுவனம், அண்மையில் இசைப் பிரியர்களுக்கான பட்ஜெட் போன் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. வி 1425 க்யூ. ஆர். யு.எஸ்., என அழைக்கப்படும் இந்த போன், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களில் இயங்கும். இதன் அதிக பட்ச மியூசிக் அவுட்புட் 100 மெகா வாட் என்பது இதன் சிறப்பு. இதன் பேட்டரி 1200 எம்.ஏ.எச். திறன் கொண்டது. இதனால், 480 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், பத்து நாட்கள் தாக்குப் பிடிக்கிறது.
இதன் அட்ரஸ் புக் 1000 முகவரிகளைக் கொள்கிறது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம் மெமரி யினை 4 ஜிபி வரை உயர்த்தலாம். கருப்பு வண்ணத்தில் பார் டைப் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வி.ஜி.ஏ. கேமரா தரப்பட்டுள்ளது. வீடியோ இயக்கமும் உண்டு. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப முடியும். எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ உள்ளது. அசைத்து இயக்கும் ஷேக் சென்சார் இயங்குகிறது. இதன் பரிமாணம் 108 x 47.5 x 17.5 மிமீ . இதன் அதிக பட்ச விலை ரூ.2,308 மட்டுமே.

ஜனவரியில் 1.37 கோடி ஜி.எஸ்.எம். இணைப்பு
சென்ற ஜனவரி மாதம், ஜி.எஸ்.எம். மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், ஒரு கோடியே 37 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி யுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி ஏர்டெல் 33 லட்சம், வோடபோன் எஸ்ஸார் 31 லட்சம், பி.எஸ்.என்.எல். 22 லட்சம், ஐடியா செல்லுலர் 25 லட்சம் இணைப்புகளைத் தந்துள்ளன.
ஜி.எஸ். எம். சேவை தருவதில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு கோடியே 55 லட்சம் சந்தாதாரர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. வோடபோன் நிறுவனத்திடம் 12 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். புதிய நிறுவனங்களில், யூனிநார் 17.9 லட்சம் பேருக்கு புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. மொத்தம் 2 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X