லட்சுமி - குபேர பூஜை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 நவ
2018
00:00

தீபாவளியன்று மட்டும் குபேர பூஜை செய்து வழிபடுவது ஏன்?
எல்லாரும் புத்தாடை அணிந்து, இனிப்பு, பலகாரங்கள் சுவைத்து, எங்கு பார்த்தாலும் தீபங்கள் சுடர் விடும் மங்களகரமான நேரத்தில், குபேர பூஜை செய்தால், இரட்டிப்பான பலன்களை தரும். மேலும், சிவபெருமான், தன்னிடமிருந்த நிதி குவியல்களை குபேரனிடம் கொடுத்து, நிதிகளின் தலைவனாக பதவி ஏற்க செய்தது, தீபாவளி திருநாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. தீபாவளி அன்று மாலை வேளையில், குபேர பூஜை செய்வர்.
மனை பலகையில், தாமரை கோலமிட்டு, வாழை இலையில் பச்சரிசியை போட்டு, அதன் மேல் சிவப்பு நிற பட்டு துணி கட்டிய கலசத்தை வைக்கவும். கலசத்தின் இரு பக்கமும், 'சுபம் - லாபம்' என எழுதி, வலம்புரி சங்குகள் இருந்தால், அதில் நீர் ஊற்றி வைக்கவும். பின், மலர், சந்தனம், குங்குமம் மாவிலை கொத்தால் கலசத்தை அலங்கரியுங்கள்.
கலசத்தை சுற்றி, நவரத்தினங்கள் மற்றும் நவதானியங்களை தொன்னையில் இட்டு வரிசையாக வைக்கவும். பூஜை பொருட்களுடன் பிரசாதமாக, லட்டு, தேங்காய், பழம் மற்றும் தாம்பூலம் வைத்து, முதலில் விநாயகரை அருகம்புல்லால், 'ஓம் கணபதியே நம...' என்று, 11 முறை கூறி வழிபடுங்கள். பின், அன்றைய திதி, நாள், நட்சத்திரம் கூறி, 'குபேர பூஜாம் கரிஷ்யே' என, கூறுங்கள்.
பிறகு, 'ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாைஸ நம...' என்று சுற்றிலும் உள்ள நவதானியங்களில் மலர் இடவும்.
மலர் மற்றும் மஞ்சள் அரிசியை கையில் எடுத்து, 'கலச ரூபே ஓம் ஸ்வாகதம் ஸ்வாகதம் லக்ஷ்மி குபேராய நம...' என்று மூன்று முறை சொல்லி, கலசத்தின் மேல் போட்டு, மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
அடுத்து, 'சிவபெருமானின் தோழனாக விளங்கும் தாங்கள் எனக்கு, பொன், பொருள் அருள வேண்டுகிறேன்...' என்று கூறி, புஷ்பாஞ்சலி செய்து, விழுந்து வணங்கி, மங்கள ஆரத்தி எடுங்கள்.
மூன்று பெண்களை அமர வைத்து, தாம்பூலம் மற்றும் பிரசாதங்களை கொடுக்கவும்.
அவர்கள் சென்றதும், குபேரனது பிரசாதங்களை எடுத்து வைத்து, கலச நீரை, வீட்டின் எல்லா பகுதிகளிலும் தெளிக்கலாம்.
தீபாவளி அன்று, குபேர பூஜையை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், சிவ - விஷ்ணு கோவில்களில், லக்ஷ்மி தேவியை தரிசிக்கலாம்.
தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமையும், மாலை, 5:00 மணி முதல் 7:00 மணி வரை, குபேர காலம் தான். அந்த சமயத்திலும் குபேர வழிபாடு செய்யலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
04-நவ-201803:58:02 IST Report Abuse
Manian எப்படியும் பணக்காரனாக வேண்டும் என்று குபேர பூஜெய் செய்வது "அவரவர் செய்த முன் வினை பயன்" என்பதை மற்ற முயற்சிப்பதாகாதா? அன்று ஒருநாளாவது முதியோர்கள், ஏழைகளுக்கு நல்ல உயன்வருந்த கொடுத்தாலே, கடவுள் மகிழ மாட்டாரா? ஏழைகளும் அவரின் குஸ்ந்தைகள்- நம் சொந்தங்கள் தானே ழிஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கு உதவி செய்வதே தீப ஒளி ஏற்றும். இது நாத்திகம் இல்லை. இதை இருவ அரை முடிந்த அளவு நான் செய்து வளர்க்கிறேன். இதை சொல்லிக்கொள்வது சரி இல்லை என்பதும் தெரியும். பொதுவிவகா உதவி செய்ய முடியவில்லை என்ற்றால், பொதுவாக எந்த பண்டிகையும் கொடாடுவதில்லை. சுத்தமான மனது இல்லாதவர்கள், சமூக சேவை செய்யாதவர்கள் இந்துக்கள் என்று சொல்லி திரிவது கடவுளுக்கும் தெறியும். குபேரன் வரமாட்ட்டான். லஞ்சம் வாங்கும் அரசாங்க அதிகாரிகளே வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X