மதுரை மணப்பட்டி மட்டன் பிரியாணி!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 நவ
2018
00:00

மதுரையில் இருந்து, 60 கி.மீ., துாரத்தில் உள்ள ஊர் மணப்பட்டி. இந்த ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் சமையல் தொழில் செய்பவர்கள். சமையல் என்றால் ஓட்டல்களில் இல்லை. திருமணம், காது குத்து என்ற விசேஷங்களுக்கும் விழாக்களுக்கும் சமையல் செய்பவர்கள். 1,000, 2,000 பேருக்கு எல்லாம் சமைக்க மாட்டார்கள். குறைந்தது, 10 ஆயிரம் பேருக்கு சமைப்பவர்கள். ஒரு சமையல்காரருக்கு உதவியாக, 150 உதவி சமையல்காரர்கள் இருப்பர். 50 ஆடு, 300 கோழி என்ற ரேஞ்சில் தான் வெட்டப்படும். ஆட்டின் தலைக்கறி, ரத்தம், ஈரல் என்று எந்த உடல் பாகத்தையும் வீணாக்காமல் எல்லாம் ஒரு டிஷ்ஷாக மணக்கும்.
மணப்பட்டியைச் சேர்ந்த, என்.தொந்தி, ஊர் வழக்கப்படி, 16 வயதில் சமையல் கற்க ஆரம்பித்து, அடுத்த எட்டு ஆண்டுகளில் தேர்ந்த சமையல்காரராகி, தற்போது, 60 ஆண்டுகளாக தன் கை மணத்தை பரப்பி வருகிறார்.
மணப்பட்டி சமையலில் என்ன விசேஷம்?
சென்னை, மாப்ள அசைவ உணவகத்தின் விற்பனை மேலாளர், வினுவின் விளக்கம்.
மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, தால் சாவா, நாட்டுக் கோழி குழம்பு, மணப்பட்டி பிரியாணி விறகடுப்பில் மட்டுமே சமைக்கிறார். இஞ்சி, பூண்டு, மற்ற மசாலா அயிட்டங்கள் அனைத்தும் கையில் இடித்தே போடுகிறார். விறகடுப்பில் மெல்லிய தீயில் மெதுவாக சமைப்பதால், நீர்பிரியாமல், எண்ணெயில் வேகிறது. வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்திருக்கிறதா என்று பார்ப்பதற்குள், அதில் இடித்த இஞ்சி, பூண்டை போட்டு விடுகிறார். தேங்காயிலும் நேரடியாகவும் நிறைய முந்திரி பருப்புகளை சேர்க்கிறார். பிரியாணியில் எலும்போடு சேர்ந்த மட்டனை போடுகிறார். மட்டன் வேக வைத்த தண்ணீரை எடுத்து செய்யும் ரசம் அலாதியான ருசி. தனியாக சூப்பாகவும் குடிக்கலாம். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆடு தேர்வு செய்வது முக்கியம். வெறும் புல்லை மட்டுமே சாப்பிடும், வெஜிடேரியன் ஆடு, அதிகபட்சம் 7 கிலோ இருக்க வேண்டும். சமையலுக்கு சுத்தமான பசு நெய், செக்கில் ஆட்டிய எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறார்.
சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி. முழு முந்திரி, முந்திரி பேஸ்ட் நிறைய சேர்ப்பதால், நாம் வழக்கமாக சாப்பிடும் பிரியாணி போல இல்லாமல், மசாலா மிகக் குறைவாக இருக்கும். தொந்தியிடம் பயிற்சி பெற்ற சமையல்காரர்கள் இங்கு வந்து சமைத்துக் காட்டினர்.
சென்னை மாப்ள (தென்னகத்தின் சுவை) அசைவ உணவகத்தில் நவம்பர் 30ம் தேதி வரை, தமிழக உணவு திருவிழாவில் மணப்பட்டி ஸ்பெஷல் அயிட்டங்கள் ஐந்தையும் ருசிக்கலாம்.

திருமணம், காது குத்து என்ற விசேஷங்களுக்கும் விழாக்களுக்கும் சமையல் செய்பவர்கள். 1,000, 2,000 பேருக்கு எல்லாம் சமைக்க மாட்டார்கள். குறைந்தது, 10 ஆயிரம் பேருக்கு சமைப்பவர்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X