குறைவான எடையில் அழகான போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2011
00:00

கைகளில் எளிதாக எடுத்துச் செல்லவும், கைப்பைக்குள் அடங்கும் வகையிலும் மொபைல் போன்கள் உள்ளனவா என்று விரும்பும் மக்களுக்கு ஏற்ற் வகையில், பல நிறுவனங்கள் சில மாடல் போன்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், மொபைல் சந்தையில் அண்மையில் பார்த்த எடை குறைந்த, பட்ஜெட் விலையிலான சில போன்களை இங்கு காணலாம்.
1. மைக்ரோமாக்ஸ் எக்ஸ் 266: 86.7 கிராம் எடையில் கைக்கு அடக்கமான இரண்டு சிம் இயக்க மொபைல் போன் ஒன்றை, எக்ஸ் 266 என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு இந்த மாதத் தொடக்கத்தில் கொண்டு வந்தது. இதன் பரிமாணம் 115.5 x 50.4 x 11.45 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 6 மணி நேரம் பேசத் திறன் தரும் 1100 எம்.ஏ.எச். பேட்டரி தரப்பட்டுள்ளது. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனின் திரை 2.2 அங்குலத்தில் உள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் கேமரா கொண்டுள்ளது. இதன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், நினைவகத்தினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், யமஹா ஆம்பிளிபையர், நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத், ஷேக் சென்சார், ஆப்பரா மினி பிரவுசர், சவுண்ட் ரெகார்டர், டூயல் எல்.இ.டி. டார்ச் லைட், ஆகிய வசதிகளும் இந்த போனில் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.2,644 மட்டுமே.
2. பிளை எம்.வி. 115: பிளை நிறுவனம் வழங்கும் எம்.வி. 115 எடை குறைவானது என்று சொல்ல முடியாவிட்டாலும், கைக்கு அடக்கமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. தோற்றம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இது ஒரு பார் டைப் போன். இதன் பரிமாணம் 111.18 x 47.5 x 15.25 மிமீ. இரண்டு அலைவரிசை களில் இயங்குகிறது. 5.6 செமீ அகலத்தில் இதன் திரை தரப்பட்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் நினைவகம் 69.5 கேபி. மைக்ரோ எஸ். டி. கார்ட் மூலம், இதனை 8 ஜிபி வரை உயர்த்தலாம். கருப்பும் சிகப்பும் கலந்த வண்ணத்தில் இதன் தோற்றம் கண்களைக் கவர்கிறது. இரண்டு சிம்களை இயக்குகிறது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதி உண்டு. எம்பி3 பிளேயர் மற்றும் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,404.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X