ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2011
00:00

இன்டர்நெட் மைய விதிமுறைகளைக் கடுமையாக்கும் அரசின் நடவடிக்கைகள் கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும். சிறிய நகரங்களில் இவை கவனிக்கப் படுவதே இல்லை.
-தே. மான்சிங், கம்பம்.

ஐபேட் 2 குறித்த கட்டுரை நல்ல விளக்கத்துடன், தகவல்களைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் வருவதற்குள் மற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்கள் இங்கு இடம் பிடித்துவிடும். விலையும் அதிகமாக உள்ளது. இதனால் தான், ஆப்பிள் என்றுமே மேட்டுக் குடிமக்கள் சாதனமாகவே உள்ளது.
-இல. ரெங்கமூர்த்தி, மதுரை.

யு.எஸ்.பி.ட்ரைவ் இல்லாத டேப்ளட் பிசிக்களை ஆப்பிள் ஏன் வடிவமைக்கிறது. புளுடூத் வசதி மற்ற சாதனங்கள் அனைத்திலும் கிடைக்குமா?
-பிரேம்குமார், சென்னை.

புதிதாய்க் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்குபவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் உள்ளது உங்கள் கட்டுரை. இதில் சிஸ்டம் மாற்றி இருந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களைத் தனியே ஒரு கட்டுரையில் தரவும்.
-க.ரேணுகா பாலாஜி, கோயம்புத்தூர்.

செல்லுக்குள் சுருங்கும் எண்கள் குறித்த டிப்ஸ், மிகவும் உபயோகமாய் இருக்கிறது. அதேபோல பார்மட்டிங் மேற்கொள்ள தந்திருக்கும் வழிகளும் பயனுள்ளவை. அடிக்கடி பயன்படுத்தி, நேரத்தினை மிச்சம் செய்கிறோம்.
-டி.சாம் பீட்டர், தாம்பரம்.

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டின் தளம் சென்று, என் மாணவர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்று காட்டினேன். மிகவும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். சற்று வேகமாக இயங்குகிறது.
-பேரா. என்.சிவப்பிரகாசம், விருதுநகர்.

ஆங்கில மொழித் திறன் வளர்த்துக் கொள்ள நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் தளம், சோர்வே இல்லாமல் சொற்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு செயல்படுகிறது. இது போல சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பயன்படுத்தும் வகையில் வாரம் ஒரு இணைய தளம் குறித்து செய்திகள் வெளியிடவும்.
-தி. தேன்மொழி, மதுரை.

புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் இரண்டு அடுக்கு டேப் அமைக்கும் வழி அதிக தளங்களைத் திறந்து வைத்து இயக்குபவர்களுக்கு பயன் நிறைந்ததாக உள்ளது. தெளிவாக நம் தளங்களைக் குறிப்பிட்டுத் திறக்க முடிகிறது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
-ஆர். தினகரன், போடி.

சிஸ்டத்தில் நம்மைத் திணற வைக்கும் செய்தி டி.எல்.எல். பைல் இல்லாமைதான். சிஸ்டம் சிடியிலும் எளிதாகப் பெற முடியாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இணைய தளம் இந்த வகையில் நல்ல சேவை செய்கிறது. என்னைப் போல கம்ப்யூட்டர் டெக்னீஷியன்களுக்கு உதவுகிறது.
-தி.மருதமுத்து, கோவை.

பத்து ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். எம்.டி.ஏ. என்ற மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் குறித்து கவனத்திற்கு பகுதியில் நீங்கள் எழுதிய பின்னரே அது பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி.
-ஆர். அதியமான், திருப்பூர்.

மொபைல் மேட்டர் விளக்கம், டிப்ஸ் அவ்வளவாக வருவதில்லை. கொஞ்சம் கொஞ்சம் போடலாமே!
-கா. அன்பழகன், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X