அமெரிக்காவை பார்க்கலாம் இந்தியாவில் வாழலாம்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஏப்
2011
00:00

"துளித்துளியாய் விழும் பனி, தூரிகையால் எழுதியது போன்ற தெருக்கள், தூசு இல்லாத ஊர், செழுமையான வாழ்க்கை, என்று அமெரிக்கா அற்புதமாகத்தான் இருக்கிறது என்றாலும், அமெரிக்காவை பார்க்கலாம், ரசிக்கலாம்; ஆனால், இந்தியாவில் மட்டுமே வாழலாம்!' - இப்படி சொல்பவர், அடிக்கடி அமெரிக்கா போகிறவர் இல்லை.
உலகின் நம்பர் ஒன் கல்லூரியான, அமெரிக்காவில், வெர்ஜினியா நகரில், உள்ள மேரி பால்டிவின் பெண்கள் கல்லூரியால் அழைக்கப்பட்டு, 150 நாட்கள் அமெரிக்காவை அங்குலம், அங்குலமாக சுற்றிப் பார்த்து விட்டு திரும்பிய, மதுரை மாணவி பாரதிதான் சொல்கிறார்.
யார் இந்த பாரதி?
மதுரை லேடிடோக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவி.
பள்ளி நாட்களில் இருந்தே நீச்சல், கராத்தே போன்ற பல போட்டிகளில் சாதனை படைத்து, அகில இந்திய அளவில் பல பதக்கங்களை குவித்து வருபவர்.
இதற்கெல்லாம் மேலாக, தேசிய மாணவர் படை (என்.சி.சி.,)யில் யாரும் எட்ட முடியாத அளவு பல, பல சாதனைகளை நிகழ்த்தியவர்.
இப்படி சென்ற இடமெல்லாம் தனக்கு மட்டுமில்லாமல், தான் படித்த கல்லூரிக்கும் சிறப்பு சேர்த்த பாரதியை, அமெரிக்காவில் உள்ள மேரி பால்டிவின் கல்லூரி, அகில இந்திய அளவில் தேர்வு செய்து, ஒரு செமஸ்டர் அங்கு வந்து படிக்குமாறு அழைப்பு விடுத்தது.
அழைப்பை ஏற்று அங்கு சென்றவருக்கு, அடுத்தடுத்து பல சிறப்புகள் காத்திருந்தன. ரிச்மண்டு நகர கவர்னர் பரேடில் பங்கேற்கவும், ராணுவம் பற்றி படிக்கவும் சிறப்பு அனுமதி கிடைத்தது. இதில் எல்லாம் நன்கு தேறி, வெளிநாட்டு முக்கிய விருந்தினர்களுக்கு மட்டுமே தரக்கூடிய கவுரவ பதக்கத்தையும் பெற்று வந்துள்ளார்.
அமெரிக்கா அழகாக இருக்கிறது; ஆனால், பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. "டீன்-ஏஜ்'ஜில் இருப்பவர்கள், அதிக சுதந்திரத்தை பெறுகின்றனர் என்பதை விட, நிறைய இழக்கின்றனர். பொறுப்பு குறைவு; படிப்பில் அக்கறையும் கிடையாது. பணம் இருப்பவர்களுக்கான உலகம் அது.
இங்கே அம்மாவின் பாசம், அப்பாவின் பரிவு, அக்கம்பக்கத்தாரின் நேசம், உறவினர், நண்பர்களின் அன்பு, அக்கறை, இருப்பவரும், இல்லாதவரும் கூட வாழக்கூடிய சூழல், கடும் உழைப்பு, இதெல்லாம் நம் இந்தியாவின் ஸ்பெஷாலிட்டி.
"மாணவர்கள், இங்கே படித்துவிட்டு, வெளிநாட்டில் போய் உழைத்து, அறிவை அவர்களுக்கு செலவிடுவதை விட, வெளிநாட்டில் படித்து, இங்கே வந்து, நம் மக்களுக்காக, நாட்டிற்காக அறிவை, ஆற்றலை செலவழியுங்களேன்...' என்று, மாணவர்களை கேட்டுக் கொண்டார் அப்துல் கலாம். அவரது விருப்பப்படி, நான், நம் நாட்டு மக்களுக்காக உழைக்கவே விரும்புகிறேன்.
"மேலும், தேசிய மாணவர் படைக்காக நான் போட்டுக் கொண்ட காக்கி உடையின் மீது, எனக்கு ஏற்பட்ட பாசம், தேசத்தின் மீதான நேசமாக மாறியுள்ளது. என்.சி.சி., சாதனை காரணமாக நேரடியாக வந்து, ஆர்மி ஆபிசர் டிரெய்னிங்கில் சேரும்படி டில்லியில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. இப்போதைய என் இளநிலை படிப்பு முடிந்ததும், ராணுவத்தில் சேரும் அந்த நல்ல நாளுக்காக காத்திருக்கிறேன்...' என்கிறார் பாரதி. அவரது குரலில் கலந்து இருந்தது நாட்டுக்காக உழைக்கப் போகும் பெருமை மட்டுமல்ல, நாட்டை அபரிமிதமாக நேசிக்கும் கம்பீரமும்தான்.
***

- எல். முருகராஜ்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ப தமிழ்மணி - திருநெல்வேலி,ஜார்ஜியா
15-ஏப்-201123:24:40 IST Report Abuse
ப தமிழ்மணி நூறுக்கு நூறு உண்மை.
Rate this:
Share this comment
Cancel
சாம் - வாஷிங்டன்,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201120:25:19 IST Report Abuse
சாம் நீ நல்ல திறமை சாலியாக இருக்கலாம். ஓரளவு நீ சொன்னது உண்மை. ஆனால், இப்போது இருக்கும் இந்தியாவிலேயே வாழலாம் என்கிராகா? அது போதுமா? அமெரிக்காவை பார்த்த பின்புமா அப்படி சொல்கிறாய்? உலகின் அதிக வளர்ச்சி கொண்ட நாடு என்பதால் தான் உன்னை இங்கே அனுப்பி இருக்கிறார்கள். எனவே அதற்க்கு என்ன காரணம் என்று அறியாமல் சென்று விட்டாயே. நல்ல ஆரோக்கியமான சூழலும் நல்ல அடிப்படை வசதிகளும், இயற்கை உருவாக்கி தந்ததல்ல. கடினமாக உழைத்து அறிவை உபயோகித்து உருவாக்கி கொண்டது. நாமும் காலையில் எழுந்து நேர்மையாக உழைத்தால் தான் நமது வீதிகளும் கட்டிடங்களும் பளிச்சிடும். இல்லையென்றால், வெறும் டிவி சினிமாவில் தான் பார்க்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
soundari V G - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201110:33:08 IST Report Abuse
soundari V G Well said. God bless you.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X