குறைந்த விலையில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
00:00

டச் ஸ்கிரீன் மொபைல்:
ஸ்பைஸ் நிறுவனத்தின் போன்கள் குறைந்த விலையில் கூடுதல் வசதிகள் தரும் சிறப்பிற்குப் பெயர் பெற்றவை. அந்த வகையில் மார்ச் மாதத்தில், டச் ஸ்கிரீன் கொண்ட மொபைல் ஒன்றை, ஸ்பைஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் எம்-7500 ப்ளோ என்பது இதன் பெயர். இளைஞர்களின் டச் ஸ்கிரீன் கனவு போனாக இது அமைந்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 3,699.
இந்த மொபைல் போனில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். 2.8 அங்குல வி.ஜி.ஏ. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ எடுக்க, 1.3 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இசை ரசிகர்களை மகிழ்விக்கும். புளுடூத், வாப் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். ஆகியவற்றின் மூலம் நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்தலாம். பேஸ்புக், நிம்பஸ் மற்றும் ஸ்நாப்டு ஆகிய சோஷியல் நெட்வொர்க் கிங் தள இணைப்பு டூல்கள் உள்ளன. இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகளையும் மேற்கொள்ளலாம். இதன் 1000 ட்அட திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 4 மணி நேரம் பேச மின்சக்தி வழங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.

டூயல் சிம் மொபைல்:
டெக் டாட் காம் நிறுவனம், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் மொபைல் போன் ஒன்றை ரூ.2,600 அதிக பட்ச விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. டி-60 (T60) என அழைக்கப்படும் இந்த போன், இசைப் பிரியர்களுக்கெனவே தயாரிக்கப் பட்டுள்ளது. யமஹா அமைத்த சிப் செட் ஒன்று இசைக்காகவே இதில் இணைக்கப்பட்டுள்ளது. இசையை இயக்கவெனத் தனி கீகள் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள 1500 ட்அட திறன் கொண்ட பேட்டரி, மூன்று மணி நேரம் ஓடும் மூவி ஒன்றை இடைவெளி இன்றி இயக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
வீடியோ, ஆடியோ பிளேயர், எல்.இ.டி. டார்ச், 2.4 அங்குல எல்.சி.டி. திரை, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 8 ஜிபி வரை மெமரி திறன் அதிகப்படுத்த வசதி, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை மற்ற சிறப்பு வசதிகளாகும்.
இந்தியாவிற்கேற்ற காலண்டர், கான்பரன்ஸ் அழைப்பு ஏற்படுத்தும் வசதி, ஸ்பீக்கர் போன், பெர்சனல் டேட்டா வினை பாஸ்வேர்ட் வைத்து காக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
இந்த வசதிகளுடன் அதிக பட்ச விலையாக ரூ.2,600 எனத் தரப்படும் இந்த மொபைல் போன், பட்ஜெட் விலையில் போன் வாங்க விரும்புபவர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X