ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
00:00

விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்வது என்பது படு ரிஸ்க்கான விஷயம் என்று பயந்திருந்தேன். மிக எளிமையாக, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கியுள்ளீர்கள்.
-தமிழ்மணி, திண்டுக்கல்.
ஒவ்வொரு கம்ப்யூட்டருக்குமான, ஒரிஜினல் ட்ரைவர் சிடிக்களை வைத்திருக்க வேண்டும் என்ற ஆலோசனை மிக முக்கியமானது. நான் பலமுறை இதனைப் பின்பற்றாமல், அவதிப்பட்டி ருக்கிறேன். எடுத்துச் சொன்னது பலருக்கு வழி காட்டும்.
-ஏ.எம். இப்ராஹிம், அவனியாபுரம்.
நீரோ போன்ற பிரபலமான சிடி பர்னர் சாப்ட்வேர் இல்லாமல், மற்ற இலவச ஆனால் திறன் கொண்ட சிடி பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகள் குறித்து எழுதவும்.
-கா. ருக்மாங்கதன், மூலக்கடை, சென்னை.
நாமே ஷார்ட்கட் கீகளை உருவாக்கி, பயன்படுத்தி அனுபவிப்பது மகிழ்ச்சி தரக் கூடிய விஷயமாகும். இதற்கு வழி காட்டிய தங்கள் கட்டுரை அருமை. நன்றி.
-சொ. மஹேந்திரன், மதுரை.
கவிதை நடையில் தலைப்பு கொடுத்து, போட்டோக்களை எப்படி எல்லாம், சீரமைக்கலாம் எனக் குறிப்புகள் தந்த கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு எங்கள் வணக்கங்களும் பாராட்டும்.
-வானவில் வீடியோஸ், விருதுநகர்.
இ-ரீடர் சாதனங்களை எந்த எந்த வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; குறிப்பாக மாணவர்களுக்கு எப்படி பயன்படும்; எவ்வளவு நேரம் மிச்சமாகும், கூடுதல் பலன்கள் என்ன என்று விரிவாகக் கட்டுரை ஒன்று தரவும்.
-டி. ஆர். பத்ரிநாத், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர், ஸ்ரீபெரும்புதூர்.
சுனாமி தாக்கியவுடன் கூகுள் செய்த உதவி, தொழில் நுட்பம் மனிதனுக்கு ஆபத்தினையும், அதே நேரத்தில் அபார உதவியையும் தருகிறது என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. அறிவியலை ஆக்கத்திற்கு அல்லது அழிவிற்குப் பயன்படுத்துவது மனிதனின் கைகளில் தான் உள்ளது.
-டி. எஸ்தர் ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
ரெப்ரெஷ் ரேட் குறித்த கேள்விக்கு அளித்த பதில், இதுவரை தவறாக எண்ணியிருந்த பல சந்தேகங்களைத் தெளிவு படுத்தியது. குறிப்பாக மாணவர்களுக்கு, தொழில் நுட்ப ரீதியாக நல்ல விளக்கத்தைத் தருகிறது.
-பேரா. என். சிவகைலாசம், மதுரை.
என்ட் கீயைப் பற்றிச் சிறிய குறிப்பு பத்தாது சார். ஒவ்வொரு புரோகிராமிலும், இதன் பயன்பாடு குறித்து தகவல்கள் தரலாமே!
-ஆர். சின்னபாபு, ராஜபாளையம்.
பாராக்களை வரிசைப்படுத்த நீங்கள் தந்துள்ள உங்கள் சொந்த ட்ரிக் அருமையான வழி. இதனை எந்த டெக்ஸ்ட்டுக்கு, டேட்டாவிற்கும் பயன்படுத்தும் விதமாய்த் தந்துள்ளீர்கள். நன்றி.
-இர. திருமாவளவன், திருப்பூர்.
மொபைல் போன் கதிர்வீச்சு குறித்த எச்சரிக்கை தேவையான ஒன்று. ஹெல்மட் போடுவது போல இதனையும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து இது போல பல வெளியிடும் உங்கள் சமூகப் பொறுப்புள்ள பணிக்கு எங்களின் சல்யூட்.
-க.நரேந்திரன், மானாமதுரை

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X