அறிமுகமாக இருக்கும் மொபைல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2011
00:00

வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரபலத்தி னால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன்களை உடனேயே இந்தியாவிற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல்களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற்பனை மையங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. எல்.ஜி. சி320 - இன் டச் லேடி: 106 கிராம் எடையில் அமைந்த அருமையான ஸ்லைடர் போன். 91 x 63 x 16.4 மிமீ என்ற அளவுகளில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் தொடர்ந்து இதனைப் பேச பயன்படுத்தலாம். நான்கு அலைவரிசை களில் இயங்கும் இந்த போனில் 2.4 அங்குல வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. இதன் மெமரி 60 எம்பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். கருப்பு, வெள்ளை, இளஞ்சிகப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ணங் களில் இது வெளியாகியுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா தரப்பட்டுள்ளது. வீடியோ பதிந்து இயக்கலாம். ஒரு சிம் மட்டுமே பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் உண்டு. எம்பி 3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ கிடைக்கின்றன.
A2DP இணைந்த புளுடூத் கொண்ட இந்த மொபைலில், ஓரளவிற்கு 3ஜி டேட்டா பெறலாம். அக்ஸிலரோ மீட்டர் சென்சார் வசதி இணைக்கப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,000 வரை இருக்கலாம்.
2. நோக்கியா அஸ்டவுண்ட் (Nokia Astound): இது ஒரு டச் பார் 3ஜி போனாக, 117.3 x 56.8 x 10.5 மிமீ என்ற அளவுகளில், கிராம் எடையில் அமைக்கப் பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 9.5 மணி நேரம் வரை பேசலாம். நான்கு அலைவரிசைகளில் செயல்படுகிறது. AMOLED ஸ்கிரீன். 3.5 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. டூயல் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட, 8 எம்பி திறனுடன் (3264 x 2448 பிக்ஸெல்கள்) கூடிய, டிஜிட்டல் ஸூம் கொண்ட பின்புறக் கேமராவும், முன் புறத்தில் 0.3 எம்பி திறனுடன் கூடிய வீடியோ கால் கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் நினைவகம் 350 எம்பி. இதனை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஒரே ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். போட்டோ மற்றும் வீடியோ பதிந்து இயக்க முடியும் . நேரடியாக டிவியுடன் இணைத்துப் பார்க்கலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இன்ஸ்டன்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி 3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை-பி ஆகியவை உள்ளன. ஓவி மேப் 3 மற்றும் ஜி.பி.எஸ். வசதிகள் இணைந்து தரப்படுகின்றன.
இதன் அதிக பட்ச விலை ரூ. 20,000 ஆக இருக்கலாம்.
3. சாம்சங் காலக்ஸி ஜியோ எஸ் 5660: இது ஒரு பார் டைப் போன். 110.5 x 57.5 x 12.2 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. ஒரே ஒரு சிம் மட்டுமே இயக்க முடியும். 3.2 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ், டிஜிட்டல் ஸூம், எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 3.14 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப் பட்டுள்ளது. போன் மெமரி 158 எம்.பி. இதனை 16ஜிபி வரை உயர்த்தலாம். கருப்பு வண்ணத்தில் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம், போட்டோ, வீடியோ பதிவு மற்றும் இயக்கம் தரும் 3.15 எம்பி திறன் கொண்ட கேமரா ஒன்று இணைக்கப் பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். எம்பி 3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3ஜி டேட்டா, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதில் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 சிஸ்டம் இயங்குகிறது. அக்ஸிலரோ மீட்டர், டச் சென்சார், ஜி.பி.எஸ். ஆகிய வசதிகளும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,300 ஆக இருக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X