இந்திய இணையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2011
00:00

மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது. மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன.
காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். யு-ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன.
பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர்.
இந்த கணக்கினை வெளியிட்ட காம் ஸ்கோர் நிறுவனம், இந்திய ரசிகர்கள் வீடியோ பார்ப்பது குறைவு தான் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரில் 80% பேர் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
பிராட்பேண்ட் இணைப்பினை அதிகம் வழங்க அரசு எடுக்கும் நடவடிக்கை களினாலும், 3ஜி சேவை வேகமாக வளர்ந்து வருவதனாலும், வீடியோ பார்ப்பது இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர்.
ஆய்வில் எடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில், 2015 ஆம் ஆண்டில், இந்திய ஜனத்தொகையில் 30% பேர் 3ஜி சேவையில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆண்டுக்குள்ளாக, 3ஜி சேவை மூன்று மடங்கு அதிகரிக்கும். இவற்றில் 80% 3ஜி இணைப்பு ஜி.எஸ்.எம். வகையாகவும், 20% சி.டி.எம்.ஏ. வகையினதாகவும் இருக்கும். சி.டி.எம்.ஏ. வகை 3ஜி தொடர்புகளில் ரிலையன்ஸ் 39 சதவிகிதத்தினையும், டாட்ட டெலிசர்வீசஸ் 15% கொண்டிருக்கும்.
மொத்த 3ஜி சேவையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 18%, ரிலையன்ஸ் 15% கொண்டிருக்கும். பி.எஸ்.என்.எல். பங்கு 13% ஆக இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balajisundar - tirunelveli,இந்தியா
25-ஏப்-201114:02:01 IST Report Abuse
balajisundar எந்த ஒரு நிறுவனமும் நல்ல ஸ்பீட் தருவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X