சி கிளீனர் புதிய பதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2011
00:00

விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் பன்னாட் டளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை (பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. http://www.piriform.com/ccleaner/ என்ற முகவரியில் உள்ள இதன் இணைய தளத்திலிருந்து இந்த புரோகிராம் பைலை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
புதிய பதிப்பில் மேலும் 20 வெவ்வேறு வகையான புரோகிராம் களுக்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது. இவை கேம்ஸ் புரோகிராம் முதல் வாய்ஸ் கம்யூனிகேஷன் புரோகிராம் வரை அடங்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள், தங்கள் பயன்பாடு குறித்து இந்த பிரவுசர் தயாரித்து வைக்கும் தகவல்களை நீக்கலாம். ஐ-ட்யூன்ஸ் குக்கிகள், பழைய விண்டோஸ் பயர்வால் விதிமுறைகள் ஆகியவற்றை புதிய பதிப்பு கவனித்துக் கொள்கிறது. ரெஜிஸ்ட்ரி கிளீனர் பகுதியில், பழைய பயன்படுத்தாத விண்டோஸ் புரோகிராம்களுக்கான குறியீட்டு வரிகளை நீக்க வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, பயர்பாக்ஸ் 4, ஐ ட்யூன்ஸ், ஆப்பரா பிரவுசர், பயர்பாக்ஸ்/மொஸில்லா பாஸ்வேர்ட் பதிவுகள், ஆகியவை தற்போதைய பதிப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்திடும் அனைத்து புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படுகிறது.
இந்த புதிய சிகிளீனர், விண்டோஸ் எக்ஸ்பி (32 மற்றும் 64 பிட் புரோகிராம்) விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இயங்குகிறது. இவற்றின் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Powerthazan - Jaffna,இலங்கை
27-ஏப்-201105:49:55 IST Report Abuse
Powerthazan இப்பொழுது அட்வான்ஸ் சிஸ்டம் கேர் ( Advance System Care) என்ற program பீட்டா 2.௦ எதை விட சிறப்பான வசதிகளை கொண்ட இலவச சாப்ட்வேர் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X