பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2011
00:00

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியாவில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறுவனம் அண்மையில் மூன்று புதிய “Me” டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.14,990 லிருந்து ரூ.32,990 வரை உள்ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப்ளட் பிசி இருப்பதால், இதனை வாங்கிப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்த எண்ணுபவர்கள் தயக்கமின்றி வாங்க எண்ணுவார்கள்.
இவற்றில் விலை குறைந்தது HCL Me AE7A1 என்ற டேப்ளட் பிசி ஆகும். ஏழு அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், 800 x 480 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. இதன் பிளாஷ் மெமரி 2 ஜிபி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.எஸ். ரிசீவர், 2400 mAh திறன் உள்ள பேட்டரி. 3.5 மிமீ ஆடியோ ஸ்டீரீயோ ஜாக் ஆகியன உள்ளன. மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் எடை 400 கிராம் மட்டுமே.
மேலே சொல்லப்பட்ட மூன்றில், சிறந்தது எனப் பலராலும் கருதப்படுவது HCL Me AM7A1 டேப்ளட் பிசியாகும். கேலக்ஸி டேப் டேப்ளட் பிசியின் விலையை ஒட்டி ரூ.22,990 என இது விலையிடப்பட்டுள்ளது. ஏழு அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 1024 x 600 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள் ளது. 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் செயல்படுகிறது. இதன் உள் நினைவகம் 512 எம்பி ராம். 8 ஜிபி கொள்ளளவு உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 இயங்குகிறது. ஹை டெபனிஷன் வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது. இதன் பேட்டரி திறன் 4200 mAh.
HCL Me AP10A1 டேப்ளட் பிசி, இந்த மூன்றில் விலை கூடுதலானதும், பெரிய அளவிலானதுமாகும். 10 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை உள்ளது. இதில் இயங்கும் Cortex A9 ப்ராசசர் 1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல் படுகிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. உள் கொள்ளளவும் 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் சப்போர்ட்டும் கிடைக் கிறது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 3650 mAh திறன் உள்ள பேட்டரி அதிக நேரம் பவர் தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ. இதன் அதிக பட்ச விலை ரூ.32,990. இவற்றை http://www.hclstore.in/ME_tablet என்ற முகவரியில் இயங்கும் இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X