ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2011
00:00

நீங்கள் கொடுத்துள்ள ஆபீஸ் ஆட்டோ ரெகவர் குறிப்பு பயனுள்ளதாக இருக்கிறது. முழுமையாக டேட்டா நமக்குக் கிடைக்கும் வாய்ப்புஇல்லை என்றாலும், சற்று நம்பிக்கையுடன் பணியாற்ற முடிகிறது.
-ச.மு.பாரி, பொள்ளாச்சி.

""அபாய வழிகள்'' என நாம் எப்படி தவறு செய்கிறோம் எனச் சுட்டிக் காட்டியுள்ளீர் கள். இன்னும் பல வழிகளில் நமக்கு நாமே வினை தேடிக் கொள்கிறோம். தொடர்ந்து இது போல எச்சரிக்கை தகவல்களைத் தரவும்.
-என். சத்தியமூர்த்தி, விருதுநகர்.

இலவச இணைய தளப் பட்டியலில் மிகவும் பயனுள்ளதாக பிரீவேர் கலக்ஷனைச் சொல்லலாம். தேடி எடுத்து விளக்கங்களோடு பட்டியல் தந்த உங்கள் துணை ஆசிரியருக்கு நன்றி.
-சீ. உலகநாதன், சென்னை.

கையில் இருக்கிறதைக் கொண்டு என்ன உணவுப் பண்டம் செய்திடலாம் என்ற புதிய வழியில் ரெசிபி கொடுக்கும் தளம் அருமை. நம் தென்னிந்திய உணவுக்கு மட்டும் ஒரு தளம் யாராவது அமைக்கலாம்.
-என்.கலைச் செல்வி, சின்னமனூர்.

மொபைல் குறித்த பொது விபரங்களைத் தந்தமைக்கு நன்றி. தண்ணீரில் மொபைல் போனை விடுவது அடிக்கடி நடக்கும் சமாச்சாரம். இதற்கான தீர்வுகளை ஒரு ஆசிரியரைப் போல விளக்கியுள்ளீர்கள்.
-டி.முஸ்தபா, கோவை.

புதிய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இருந்ததால், வேறு வழியின்றி பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் தந்துள்ள பைல் நிர்வாக டிப்ஸ் மிக மிக உபயோகமாயுள்ளது. தொடர்ந்து விண்டோஸ் 7 டிப்ஸ் வாராவாராம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-என். தர்மராஜன், விழுப்புரம்.

எக்ஸெல் பில் ஹேண்டில் சாதாரண டூல் என எண்ணி வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்று விவரமாகக் காட்டியுள்ளீர்கள். எக்ஸெல் வேலையை எளிதாக்க தொடர்ந்து உதவவும்.
-ஐ. பொன்மலர், அருப்புக் கோட்டை.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் டேப் பிரிவியூ காட்சி நிறுத்தும் ஐடியா, எனக்கும் உதவியது. நன்றி. கேள்விக் கான பதில்கள் அனைத்தும் சிறிய கட்டுரைகளைப் போலத் தெளிவாகத் தரும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
-கி. பரந்தாமன், ஓய்வு பெற்ற ஆசிரியர், மதுரை.

மொபைல் மலர் என்று போட்டுவிட்டு குறைந்த அளவே எழுதுகிறீர்கள். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புதிய அம்சத்துடன் வரும் மொபைல் போன் குறித்து இன்னும் அதிகம் எழுதலாமே!
-எஸ். ஹேமா மூர்த்தி, சென்னை.

உங்களுடைய விண்டோஸ் 7 டிப்ஸ் படித்த பின்னரே, அதில் உள்ள பைல் லைப்ரேரியின் முழு பயனையும் தெரிந்து கொண்டேன். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு பயன்பாட்டிலும் நமக்கு கூடுதல் வசதிகளைத் தான் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த ஓ.எஸ். குறித்து நிறைய பிரசுரிக்கவும்.
-பேரா. ஆர்.கே. கிருஷ்ணன், கோயமுத்தூர்.

நாங்கள் தினந்தோறும் இமெயில் பயன் படுத்துகிறோம். இமெயில் அனுப்புவது, பெறுவது மற்றும் அந்த வேலையைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்த டிப்ஸ் நிறைய வழங்கவும்.
-எஸ். சஞ்சய் விஜயன், தேனி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prem - coimbatore,இந்தியா
05-மே-201100:52:57 IST Report Abuse
prem ஒரு computer -இல் 2 OS போடலாமா சார் ..
Rate this:
Share this comment
Cancel
பி எம் ஜவஹர் - ஜல்கான்மகாராஷ்டிரா,இந்தியா
04-மே-201122:06:44 IST Report Abuse
பி எம்  ஜவஹர் கம்ப்யூட்டர் மலரை நான் 5 ஆண்டுகளாக தொடர்ந்து படித்து வருகிறேன். மிகமிக அருமை.ஒஸ் குறிப்புகள்,ஷர்ட் கட் கீகளும் நல்ல பயன் தருகிறது நன்றி. நான் என்னுடைய கேள்விகளை எவ்வாறு தங்களுக்கு அனுப்புவது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X