நான் தாத்தா செல்லம் | குமுதம் | Kumutham | tamil weekly supplements
நான் தாத்தா செல்லம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

08 மே
2011
00:00

போட்டியே வேண்டாம் போதும்டா சாமி என்று வைகோ ஒதுங்கினாலும் அவரது வாரிசு விடுவதாக இல்லை. ஜெயித்து காட்டுவேன் என்று வைகோவின் பேரன் வருண் பெரம்பலூரில் களமிறங்க அவருக்கு இணையாக துரை வையாபுரி, மருமகள் கீதா மற்றும் பேத்தி வானதிரேனு என குடும்பமே முகாமிட்டிருந்தது. அதற்கு காரணம் கடந்த ஒரு வாரமாக கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் வைகோவின் பேரன் வருண் கலந்து கொண்டு விளையாடி வருவது தான்.
ஐந்து வயதிலிருந்தே வருண் டென்னிஸில் ஆர்வமாக விளையாடுறான். இப்போ பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டிக்கு வந்திருக்கான். என்றபடி மகன் வருணை பேச அழைக்கிறார் துரை வையாபுரி.
எங்க தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் தாத்தா செல்லம். உலக தலைவர்களை பற்றிய புத்தகங்களை படிக்க சொல்வார். காலையில கூட போன் பண்ணி இப்ப யாரு உன் கூட விளையாடுறது. நீ எப்படி ஜெயிச்சனு வைகோ தாத்தாவும் பாட்டியும் போன் பண்ணி கேட்டாங்க. நான் பைனல்ஸ் வந்ததும் பெரம்பலூர் வரேன்னு சொல்லிருக்கார். அவர் வரணுங்கிறதுக்காவே நல்லா விளையாடிட்டு இருக்கேன். என்றபடி களத்தில் இறங்கும் வருணை வைகோவின் குடும்பமே குதூகலமாக கைதட்டி உற்சாகப்படுத்தியது.
ஆடுகளத்தில் சாமானிய மக்களோடு மக்களாக களத்திலே கலந்து நின்ற வைகோவின் மகன் துரைவையாபரியை பார்த்ததும் வைகோவின் அரசியல் தூய்மை தான் நினைவுக்கு வந்தது.
-இரா.கார்த்திகேயன்

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X