மூன்று புதிய எல்.ஜி. மொபைல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2011
00:00

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழைக்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம்.

1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இணைத்து தரப்படுகின்றன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளிகேஷன்கள் திரையில் காட்டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடைமுகத்துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த புளுடூத் 2.0, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,999.

2. LG P520: மேலே தரப்பட்டுள்ள மொபைல் போலவே அம்சங்களை உடையது இந்த போன். இதில் ட்விட்டர் மற்றும் ஆர்குட் விட்ஜெட்டுகள் ஹோம்ஸ்கிரீனில் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இந்த தளங்களுக்கு எளிதாகச் செல்லலாம். இது ஒரு இரண்டு சிம் இயக்க போன். 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த புளுடூத் 2.0, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதிகள் தரப்பட் டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999.

3. LG T325: இது ஒரு 3ஜி போன். முன்பக்கமாக கேமராவுடன், எல்ஜி மொபி காமிக்ஸ் மற்றும் ஸேப் பாக்ஸ் (Zap Box) தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடல் களை டவுண்லோட் செய்வது எளிது. இதில் விண்டோஸ் லைவ் மற்றும் யாஹூ மெசஞ்சர் அப்ளிகேஷன் கள் தரப்பட்டுள்ளன. 2.8 அங்குல தொடுதிரை, 3ஜி மற்றும் வை-பி, புளுடூத், முன்புறம் வைக்கப்பட்டுள்ள 2 மெகா பிக்ஸெல் கேமரா, 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியன உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X