அறிவியல் தகவல்களுக்கு ஒரு தேடுதளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 மே
2011
00:00

தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus)'. இயங்கும் முகவரி http://www.scirus.com. கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டுள்ள http://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் பக்கத்தில் காணவும்.
இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில், ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும்போது, முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி, பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.
இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து, அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.
இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும், 1) அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.
2)அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.
3)ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக, அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி, கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படை யிலும் தேடலை மேற்கொள்ளலாம்.
தளங்கள் மட்டுமின்றி, பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளியான கோடிக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தாங்கியுள்ள தளங்களையும், இந்த தேடல் தளம் நமக்குக் காட்டுகிறது.
அறிவியல் அடிப்படையில் இயங்கும் இன்றைய உலகில் நாம் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம் இது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Vijayarangan - Dubai,இந்தியா
17-மே-201111:43:59 IST Report Abuse
Mohan Vijayarangan My kind request, even though you give useful website links, all of your hyperlinks for the websites given with fault, why don't you correct it before uploading? This type of mistake is there in every weekly computer malar.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X