எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மே
2011
00:00

இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்
சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றின் இரண்டு பகுதிகளில், ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டிய திருக்கும். ஒவ்வொரு முறையும் அங்கும் இங்குமாகச் சென்று பணியாற்றுவது சற்று சிரமமான காரியம். கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ள செயலும் கூட. ஆனால், விண்டோஸ் இதற்கு ஒரு நல்ல வழி தருகிறது. இரண்டு விண்டோக் களில் ஒரே ஒர்க்புக்கினைத் திறந்து நாம் விரும்பும் இடங்களில் செயல்பட வாய்ப்பு உள்ளது. இது எக்ஸெல் 97 முதல் இன்றைய எக்ஸெல் 2007 வரை கொண்டிருக்கும் ஒரு வசதி ஆகும்.
முதலில் ஒரு விண்டோவில் குறிப்பிட்ட ஒர்க்புக்கினைத் திறந்து செயல்படவும். இதற்கு Window மெனுவில் New Window என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 என்றால், ரிப்பனில் வியூ டேப் திறந்து அதில் விண்டோ குரூப் என்பதில் நியூ விண்டோ தேர்ந்தெடுக்கவும்.
எக்ஸெல் இந்த கட்டளைகளுக்கு, புதிய விண்டோ ஒன்றினைத் திறக்கும். நீங்கள் இரண்டு விண்டோக்களிலும், ஒரே ஒர்க்புக்கின் இரு வேறு இடங்களில் உங்கள் எடிட்டிங் வேலையை மேற்கொள்ளலாம்.
இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். ஒவ்வொரு விண்டோவின் டைட்டில் பாரிலும், ஒர்க்புக்கின் பெயருடன், விண்டோவின் எண்ணும் காட்டப்படும். Book1:1 மற்றும் Book1:2 என அவை இருக்கும். இதே முறையில் தான் விண்டோவின் மெனு மற்றும் டாஸ்க் பாரில் காட்டப்படும்.
ஒவ்வொரு விண்டோவும், அதே ஒர்க்புக்கின் இரு வேறு தோற்றங்களைக் காட்டுகின்றன. ஒன்றில் ஏற்படுத்தப்படும் மாற்றம் அடுத்த விண்டோவிலும் ஏற்படுத்தப்படும். எனவே மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை இரண்டிலும் ஏற்படுத்திப் பின்னர், சேவ் செய்து ஒரே ஒர்க்புக்காகப் பார்க்கலாம்.

எண் - கோடு பிரிண்ட் செய்திட
எக்ஸெல் ஒர்க்ஷீட்டினைப் பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளில் தரப்பட்டுள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காகச் செல்லும் கோடுகளையும் சேர்த்து பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்குமே என்று பிரியப்படுகிறீர்களா! தாராளமாக இவற்றையும் அச்சிடலாம். அதற்கான செட்டிங்ஸ் வழிமுறைகளைப் பார்ப் போம்.
மிகப் பெரிய ஒர்க்ஷீட்டுகளில் தேர்ந்தெடுத்து பிரிண்ட் செய்கையில் இது மிகவும் உதவியாக இருக்கும். மேலும் வரிசைகளுக்கு நாம் பெயர் கொடுக்காமல் இருந்தாலும் இந்த ஏற்பாடு நமக்கு உதவிடும்.
இதற்கு முதலில் File மெனுவில் பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்க வேண்டும். Page Setup விண்டோ திறக்கப்பட்டவுடன் Sheet என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் நடுவே உள்ள Print என்னும் பிரிவில் Gridlines மற்றும் Row and Column Headings என வரிகள் செக்பாக்ஸுடன் இருக்கும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இதில் எது தேவையோ அதில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்த முறை பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளுக்கான தலைப்பு / எழுத்து / எண் மற்றும் கோடுகள் அச்சிடப்படும்.

அனைத்தும் ஒரே கிளிக்கில்
எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில் டேட்டாவை அமைத்துக் கொண்டிருக் கிறீர்கள். அதில் மாற்றங்கள் அல்லது புதிய டேட்டாக்கள் அனைத்து ஷீட்களிலும் அல்லது தேர்ந்தெடுக்கப் பட்ட ஒர்க்ஷீட்களில் அவை அப்படியே அமைக்கப்பட வேண்டும் என விரும்பு கிறீர்கள்.
எடுத்துக்காட்டாக பலவகையான தகவல்கள் இருந்தாலும், டிஸ்கவுண்ட் சதவிகிதம் ஒன்றினை ஒரு குறிப்பிட்ட எண் செல்லில் போட்டிருக்கலாம். இது அனைத்து ஒர்க் ஷீட்களிலும் இருக்க வேண்டும் என விரும்பினால் ஒவ்வொரு ஷீட்டாகத் தேடித்தேடி டைப் செய்திட வேண்டாம். ஒரு ஷீட்டில் செய்தாலே மற்றவற்றிலும் அது அமைக்கப்படும். இதற்கான வழி: எந்த ஷீட்டில் தகவலை அமைக்கப் போகிறீர்களோ அதனைத் திறந்து கர்சரை அங்கு நிறுத்துங்கள். பின் ஷிப்டை அழுத்திக் கொண்டு ஒவ்வொரு ஷீட்டாகத் தேர்ந்தெடுக்கவும். மாற வேண்டிய ஷீட்கள் அடுத்தடுத்து இல்லாமல் இருந்தால் கண்ட்ரோல் அழுத்தி ஷீட்களைத் தேர்ந்தெடுக்கவும். இனி டேட்டா டைப் செய்திடவும். தேவையான செல்களில் டேட்டா அமைத்தபின் மவுஸைக் கிளிக் செய்திடவும். நீங்கள் முதலில் ஷீட்களைத் தேர்ந்தெடுக்கையில் கீழாக உள்ள பட்டன்கள் ஹைலைட் ஆகியிருக்கும். இப்போது டேட்டா அமைத்து கிளிக் செய்தவுடன் ஹைலைட் மறைந்திருக்கும். அந்த ஷீட்களில் சென்று பார்த்தால் புதியதாக அமைக்கப்பட்ட தகவல்கள் அங்கும் அதே செல்களில் பதிவாகி இருப்பதைப் பார்க்கலாம். அந்த செல்களை இணைத்து மற்ற செல்களில் ஏதேனும் பார்முலாக்கள் அமைத்திருந்தால் டேட்டாவுக் கேற்றபடி பார்முலாக்கள் இயக்கப்பட்டிருப்பதனையும் காணலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X