ஸ்லீப் மோடிலிருந்து தானாக எழ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மே
2011
00:00

கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், சிறிது நிமிடங்கள் வெளியே சென்று வேறு ஒரு அவசரப் பணியை முடிக்க வேண்டும் என்றால், நாம் அதனை ஸ்லீப் மோடில் வைத்துவிட்டுச் செல்லலாம். பின்னர், வேக் அப் பட்டனைத் தட்டினால், கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர் எத்தனை புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருந்தார் என்று காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த புரோகிராம்கள், அவற்றின் பைல்களுடன் நமக்குக் காட்டப்படும். வேறு எங்கும் செல்லாமல், ஐந்து நிமிடங்கள், ஓய்வு எடுக்க வேண்டும்; கம்ப்யூட்டர் தானாக ஐந்து நிமிடங்கள் கழித்து, புரோகிராம் களைத் திறந்து பைல்களைக் காட்ட வேண்டும் எனத் திட்டமிட எண்ணினால், என்ன செய்யலாம்?
இதற்கான வழி விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ஆகிய தொகுப்பு களில் உள்ளது. முதலில் Start, All Programs, Accessories, System Tools, Task Scheduler எனச் செல்லவும். அல்லது Start, search பாக்ஸில் Task Scheduler என டைப் செய்திடவும். பின்னர் இதில் கிடைக்கும் Task Scheduler லிங்க்கில் கிளிக் செய்திடவும். இப்போது Create Task டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் General டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உள்ள Name and Description பீல்டில் தேவையானதை நிரப்பவும். அத்துடன் Run with highest privileges என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
இங்கு உள்ள Triggers டேப்பில், New என்பதில் கிளிக் செய்தால் இன்னொரு விண்டோ திறக்கப்படும். இதில் “One time” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தினந்தோறும் இது நடைபெற வேண்டும் என எண்ணினால், Daily என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து எந்த நாளில், எந்த நேரத்தில் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்லீப் மோடில் இருந்து தானாக, எழுந்து இயங்க வேண்டும் என்பதனை Date and Time என்ற இடத்தில் நிரப்பவும். இனி Actions என்ற டேப்பின் கீழாக, என்ன வேலை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வரையறை செய்திட வேண்டும். அடுத்து கிடைக்கும் ஆப்ஷன்களில், (Action as: Start a program) நீங்கள் விரும்பும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகளை நிரப்பலாம்.
இவற்றை முடித்துவிட்டு, Conditions என்ற டேப்பின் கீழாக, Wake the computer to run this task என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்து, டாஸ்க் ஷெட்யூலரை விட்டு வெளியேறவும்.
இனி, நீங்கள் செட் செய்த படி ஸ்லீப் மோட் மற்றும் செயல்பாடுகள் நடக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X