ஆப்பிள் ஐ-பேட் 2 இந்தியாவில் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மே
2011
00:00

வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டு ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் அனைவரும், ஐ-பேட் 2 எப்போது அதிகார பூர்வமாக விற்பனைக்கு வரும் எனக் காத்திருந்தனர். சென்ற ஏப்ரல் 29 முதல் இந்தியாவில் இதனைக் கொண்டு வந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
ஐ-பேட் 2, 16, 32 மற்றும் 64 ஜிபி திறனுடன் முறையே ரூ.29,500, ரூ.34,500 மற்றும் ரூ. 39,500 அதிக பட்ச விலையாக, வரியுடன், கிடைக்கின்றன.
வை-பி மற்றும் 3ஜி வசதிகள் கொண்ட ஐ-பேட் 2 சாதனத்தின் 16 ஜிபி வகை ரூ. 36,900க்கும், 32 ஜிபி வகை ரூ.41,900 மற்றும் 64 ஜிபி வகை ரூ. 46,900க்கும் கிடைக்கின்றன.
இரண்டாவது பதிப்பு ஐ-பேட், முதலில் வந்ததைக் காட்டிலும் 33% தடிமன் குறைவாக உள்ளது. எடையும் 15% குறைந்துள்ளது. திரை அதே 9.7 அங்குல அளவில் உள்ளது. எல்.இ.டி. பேக் லைட் எல்.சி.டி திரை தரப்பட்டுள்ளது.
ஐ-பேட் குறித்து ஏற்கனவே, விரிவாக கம்ப்யூட்டர் மலரில் தகவல்கள் தரப்பட்டது. மேலும் தகவல்கள் வேண்டுவோர், http://www.apple.com/in/ipad/?cid=CDMEU3252&cp=em-P0010451172160&sr=e m&Email_PageName=P001 0451172160&Email_OID=799cd952b 3083c274d1179cda87c8956 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X