வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2011
00:00

அதிகம் பயன்படுத்தாத ஷார்ட்கட் வழிகள்
வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பல வழிகளைப் பயன்படுத்து கிறோம். இதில் நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் வேர்ட் தொகுப்பில் வழி உள்ளது. பொதுவாக டாகுமெண்ட் ஒன்றை முழுமையாக, பத்தியாக அல்லது வரிகளாகத்தான் செலக்ட் செய்வோம். ஷிப்ட் மற்றும் ஆரோ கீகளை இதற்குப் பயன்படுத்துவோம். நெட்டு வாக்கில் தேர்ந்தெடுக்க என்ன அவசியம் ஏற்படும்? எனக் கேள்வி எழலாம். சில பட்டியல்களில் நெட்டு வரிசைகளில் உள்ள டேட்டா மட்டும் நமக்குத் தேவையாய் இருக்கும். அப்போது, மற்ற நெட்டு வரிசைகளைத் தவிர்த்து அவற்றை மட்டும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த வேளையில் தேர்வினை மேற்கொள்ள, ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸ் கர்சரினால், எந்த நெட்டு வரிசை டெக்ஸ்ட் வேண்டுமோ, அதனைச் சுற்றிக் கர்சரைக் கொண்டு சென்றால், டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த வகை தேர்வினை மேற்கொள்கையில், சில வேளைகளில் வேர்ட் ரிசர்ச் கட்டத்தை வலது புறம் காட்டும். இது நாம் கர்சரையும் கீ போர்டையும் கையாள்வதில் ஏற்படும் தவறினால் ஏற்படுகிறது.
டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், மவுஸ் பட்டனை விட்டுவிடும் முன், ஆல்ட் கீயை அழுத்தியிருப்பதை விட வேண்டும். ஆனால் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், கம்ப்யூட்டர் இந்த கீ அழுத்தலை ஆல்ட்+கிளிக் என எடுத்துக் கொண்டு ரிசர்ச் பேன் என்ற கட்டத்தைக் காட்டும்.

விருப்பப்படி புல்லட் எண்கள்
நம் வேர்ட் டாகுமெண்ட்கள் சிறப்பாக வடிவமைப்பு பெற்றிட, நாம் புல்லட் எண்களைப் பயன்படுத்துகிறோம். வேர்ட் தொகுப்பில் கிடைக்கும் ஆப்ஷன்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அமைக்கிறோம். இருப்பினும் பல வேளைகளில், இவை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறோம். நம் விருப்பப்படி இந்த புல்லட் எண்களை அமைக்கலாம் என்பதனை அறியாமல் இருக்கிறோம். நம்மால் இந்த புல்லட் எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். கீழே குறிப்பிட்டுள்ள செட்டிங்ஸ் மாற்றங்கள் வழியாக அவற்றை மேற்கொள்ளலாம்.
முதலில் Format மெனு செல்லவும். அதன் பின் Bullets and Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திறக்கப்பட்டவுடன் அதில் காட்டப்படும் பலவகை எண் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த எண்களுக்கான ஸ்டைலை மாற்ற கஸ்டமைஸ் விண்டோவினைத் திறக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு நம்பர் விண்டோவினைத் திறக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் Customize பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இந்த விண்டோவில் உங்கள் விருப்பத்திற்கான அனைத்து செட்டிங் வசதிகளையும் காணலாம். மேலே இருக்கும் Number format என்ற பிரிவின் மூலம் உங்கள் பாண்ட், நம்பர் ஸ்டைல், எங்கு இந்த எண்கள் அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். Number position என்ற பிரிவில் எப்படி எண்கள் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அலைன் (இடது, வலது அல்லது நடுப்புறமாக) செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். Text position பிரிவு நம்பர் பட்டியலுடன் டெக்ஸ்ட் எங்கு அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். டேப் ஸ்பேஸ் எவ்வளவு தூரத்தில் எண்கள் அ அடுத்து டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனை அமைக்கிறது. அனைத்தும் உங்கள் விருப்பப்படி செட் செய்த பிறகு OK கிளிக் செய்து பின் மீண்டும் Bullets and Numbering விண்டோவிற்குச் செல்லுங்கள். இங்கு நீங்கள் செட் செய்த அமைப்பு நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு விண்டோவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மீண்டும் ஓகே கிளிக் செய்து உங்கள் டாகுமெண்ட்டிற்குத் திரும்புங்கள். இனி நீங்கள் விரும்பிய படி ஆட்டோமேடிக் எண்கள் அமையும்.

டெலீட் செய்வதில் சில வழிகள்
* வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்கி விட்டு, எடிட் செய்கையில், நிறைய சொற்கள், வாக்கியங்கள், பாராக்கள் ஆகியவற்றை டெலீட் செய்திட வேண்டியதிருக்கும். இதற்கு நாம் பல வழிகளைக் கையாள்கிறோம்.
* ஒரு சிலர் டெக்ஸ்ட்டை செலக்ட் செய்துவிட்டு டெலீட் கீயினை அழுத்தி அழிக்கின்றனர். வேறு சிலர் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை அவர்களுக்குத் தேவையில்லாத சொற்கள் அல்லது வரிகள் அழியும் வரை தொடர்ந்து அழுத்தி அழிக்கின்றனர். இவ்வாறு இந்த கீகளில் ஒன்றைத் தொடர்ந்து அழுத்தி எடிட் செய்பவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் வேர்ட் தந்திருக்கும் ஷார்ட் கட் கீகளை அறிந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த அழித்தல் வேலையின் போது கண்ட்ரோல் கீயினை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். கண்ட்ரோல் அழுத்தி டெலீட் அழுத்தினால் உங்கள் கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அடுத்த சொல்லின் இறுதி வரை அழிக்கப்படும். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடுத்து வலது பக்கமாக உள்ள நான்கு சொற்களை அழிக்க வேண்டும் என விரும்பினால் கண்ட்ரோல் அழுத்தி டெலீட் கீயினை நான்கு முறை அழுத்தவும். சரி, இடது புறம் உள்ள சொற்களை அழிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும். கண்ட்ரோல் கீயினை அழுத்தி பேக் ஸ்பேஸ் கீயினை எத்தனை சொற்களை வலது புறமாக அழிக்க வேண்டுமோ அத்தனை முறை தட்ட வேண்டும்.
* இந்த முறையில் ஒரு வசதியான வழியையும் இங்கு நாம் பார்ப்போம். இது எடிட்டிங் போது உதவும். எடுத்துக் காட்டாக “sidestep” என்ற சொல்லுக்குப் பதிலாக “sideways” என்ற சொல்லை அமைக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம்? “step” என்பதை அழித்து அந்த இடத்தில் “ways” என டைப் செய்வோம். இதற்கு டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை நான்கு முறை தொடர்ந்து அழுத்த வேண்டும். இதற்குப் பதிலாக “step” என்ற சொல்லின் முன் கர்சரை வைத்து கண்ட்ரோல் + டெலீட் அழுத்திப் பின் “ways” என டைப் செய்திடலாம்.

டேபிள் டெக்ஸ்ட் ட்யூனிங்
வேர்ட் டாகுமெண்ட் ஊடாக, டேபிள் ஒன்றை அமைத்து, அதில் டெக்ஸ்ட் டைப் செய்கையில், செல் அகலத்திற்குச் சற்று நீளமாக இருந்தால், அந்த சொல் அப்படியே எடுக்கப்பட்டு அடுத்த வரிக்கு வருகிறது.
இதனால் நீங்கள் எதிர்பார்த்து அமைத்த நீளத்திற்கும் சற்று அதிகமான உயரத்தினை செல் அமைத்துக் கொள்கிறது. மற்ற செல்களோடு ஒப்பிடுகையில் இது சற்று வித்தியாசமாகத் தெரிவதால் இதனை மாற்ற எண்ணுகிறோம். உடனே எழுத்துக்களைச் சற்று சிறியதாக்கி அடுத்த வரி சொல்லை மேலே இருக்கும் வரியில் அமைக்கிறோம். ஆனாலும் மற்ற செல்களில் உள்ளதைக் காட்டிலும் எழுத்துக்கள் சிறியதாக இருக்கும். இதுவும் நமக்கு வித்தியாசமாகத் தோன்றும்.
எழுத்தும் சிறியதாகக் கூடாது; ஆனால் வரிகளும் அதிகமாகக் கூடாது என்று விரும்புபவர்களுக்கு என்றே வேர்ட் ஒரு வழி தருகிறது. எழுத்தின் அளவை மாற்றாமல் அதன் உயரத்தை மாற்றாமல் அகலத்தை மட்டும் குறைக்கிறது. இதனால் எந்த வித்தியாசமும் தெரியாது. அதே நேரத்தில் வரிகளின் எண்ணிக்கையும் கூடுதலாவதில்லை. இதற்கு Tools பாரில் Table கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Table Properties தேர்ந்தெடுங்கள். இதில் Cell என்னும் டேபில் கிளிக் செய்தால் Cell Options என்ற பிரிவு கிடைக்கும். இந்த விண்டோவில் கீழாக Options என்பதன் கீழ் Wrap text மற்றும் Fit text என்ற இரு பிரிவுகள் இருக்கும். இதில் Fit text என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி நீங்கள் டேபிள் செல்களில் டெக்ஸ்ட் அமைக்கையில் கூடுமானவரை எழுத்துக்களின் அகலத்தைக் குறைத்து டெக்ஸ்ட்டை அமைக்க வேர்ட் டேபிள் முயற்சி செய்திடும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X