குருபார்வை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2010
00:00

- ஜெனிபர், சென்னை
நான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். எங்களது கல்லூரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணி புரிய முடியுமா? வேறு என்ன செய்யலாம்? தயவு செய்து ஆலோசனை தரவும்.
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளின் பொதுவான தரம் என்ன என்பதை உங்களது கடிதம் தெளிவாகக் காட்டுகிறது. சட்டப்படிப்பிலும் திறனில்லாமல் வழக்கறிஞராகப் போகிறோம் என்பதால் வேறு எந்தத் திறனையும் பெறாமல் பெரும்பாலான தமிழ்நாட்டு சட்டக் கல்வி மாணவர்களின் தரம் கவலை தருவதாகவே இருக்கிறது. நால்ஸார் எனப்படும் தேசிய சட்டக் கல்லூரிகளில் படித்து வெளியே வருபவர்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றச் செல்கிறார்கள்.
வேறு பலரோ லீகல் அவுட் சோர்சிங் போன்ற நவீன சட்டப் பணிப் பிரிவுகளுக்குச் சென்று தங்களது சட்டத் திறனைக் கொண்டு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். நம் மாநிலத்தின் பெரும்பாலான சட்ட மாணவர்களோ அடிப்படை தகவல் தொடர்புத் திறனிலேயே கடுமையாக பின்தங்கியிருப்பதுடன் சட்டத் திறனும் இல்லாமல் 5 ஆண்டுகளை வீணாகச் செலவழித்து விட்டு வருகின்றனர்.
பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ., மட்டுமன்றி இன்று பி.இ., பி.டெக்., முடிப்பவர்கள் கூட நிர்வாகப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி பிற மாணவர்களுக்கு கடுமையான போட்டியைத் தருகிறார்கள். ஆனால் சட்டக் கல்லூரி மாணவர்களில் வெகு சிலர் மட்டுமே நல்ல சீனியர் வழக்கறிஞர்களிடம் சேர்ந்து அதிலும் ஒரு சிலர் மட்டுமே திறமையான வழக்கறிஞராக உருவாகிறார்கள். போட்டித் தேர்வுகள் எழுதி வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், தமிழக அரசுத் துறைகள் ஆகியவற்றில் பணிக்குச் செல்லும் பி.எல்., மாணவர்கள் வெகு சிலரே. எனவே உடனடியாக உங்களது அடிப்படைப் பொது அறிவு, பகுத்தாராயும் திறன், கணிதத் திறன், ஆங்கிலத் திறன், தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள உதவும் சிறப்புப் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து படிக்கத் தொடங்குங்கள். மேலும் உங்களது சட்டத் திறனையும் ஒரு சிறு குழுவாக உங்களது நண்பர்களை சேர்த்துக் கொண்டு வளர்க்க முயற்சியுங்கள். இல்லாத போது பொதுவாக பிற சட்டப் பட்டதாரிகள் போலவே நீங்களும் நிச்சயமில்லாத ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெற முடியும் என்பதை உணருங்கள்.
கடந்த வாரம் வெளியான உங்களது துறை சார்ந்த அறிவிப்பு ஒன்றை படித்திருப்பீர்கள் என நம்புகிறோம். அகில இந்திய அளவில் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வு மூலமாக மட்டுமே இனி ஒருவர் வழக்கறிஞராக முடியும் என்பதால் வெறும் படிப்போடு நின்றுவிடாமல் உங்களது துறை சார்ந்த திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.


- செந்தில்குமரன், புதுச்சேரி
தற்போது அதிகமாக பேசப்படும் சைபர் லா படிப்பு பற்றிக் கூறவும்.
இன்டர்நெட் இல்லாத எந்த வாணிபமும் இல்லை என்னும் அளவுக்கு இன்று தொழில்நுட்ப உதவியால் நாம் இகாமர்ஸ் செய்து கொண்டிருக்கிறோம். இது தவிர பாங்கிங், இன்சூரன்ஸ் என எந்தத் துறையை எடுத்தாலும் அதில் இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டரின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. இப்படி வேகமாக ஒரு துறை வளரும் போது அதோடு கூடவே ஏமாற்று வேலைகளும் வளர்ந்து விடுகின்றன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பது தான் சைபர் லா. இந்த சைபர் சட்டம் உலகம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
2000ம் ஆண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐ.டி. சட்டத்தின் ஒரு பகுதியாக சைபர் லா இருக்கிறது. ஹேக்கிங், கிரெடிட் கார்ட் மோசடி, பிளாக்மெயில், போர்னோகிராபி, காப்பிரைட், நெட்பாங்கிங் மோசடி மற்றும் அறிவுசார் காப்புரிமை மீறல் போன்ற குற்றங்களை பெருக விடாமல் தடுப்பது சைபர் லா தான். இதைப் படித்து இதில் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள் தனிநபர் சட்டம், டெலிகாம் சட்டம், கம்பெனி சட்டம் மற்றும் இன்டலக்சுவல் பிராபர்டி சட்டம் போன்றவற்றை நன்றாக அறிந்திருக்க வேண்டும். இப்பிரிவில் குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகள் நடத்தப்படுகின்றன. சட்டம் படித்திருப்பவர், வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், ஐ.டி. துறை நிபுணர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டன்டுகள்,பாங்கிங் மேலாளர்கள் என பலருக்கும் இத்துறை பலனளிக்கும்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X