விண்டோஸ் 8 - கேள்விகளும் பதில்களும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2011
00:00

சென்ற இதழில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, மைக்ரோசாப்ட் கருத்தரங்கில் தெரிவித்த தகவல்களைத் தந்திருந்தோம். பல வாசகர்கள், இந்த தகவல்களை முதன் முதலாகத் தந்தமைக்குப் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அதிகமான எண்ணிக்கையில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கேள்விகளையும் அனுப்பி விளக்கமும் பதிலும் தரும்படி கேட்டுள்ளனர். அவற்றில் சில முக்கிய வினாக்களுக்கான பதில்கள் இங்கே தரப்படுகின்றன.
இன்னும் விண்டோஸ் 8 சிஸ்டம் வராத நிலையில், கீழே தரப்பட்டுள்ளவை அனைத்தும், மைக்ரோசாப்ட் இது குறித்துத் தந்துள்ள தகவல்களின் அடிப்படையிலும், பிற தொழில் நுட்ப வல்லுநர்கள் கொடுத்த விபரங்களின் துணையுடன் இவை இங்கே தரப்படுகின்றன.

கேள்வி: மைக்ரோசாப்ட் இந்த சிஸ்டம் குறித்துக் காட்டிய சரியான விளக்கக் காட்சிகள் எவை?
பதில்: வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், டேப்ளட் பி.சி.க்களிலும், விண்டோஸ் 8 சிஸ்டம் எப்படி செயல்படும் என மைக்ரோசாப்ட் காட்டியது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் திரை முழுவதும், தொட்டு இயக்கக் கூடிய பெரிய முகப்புப் பேழைகளாகவே இருந்தன. இவை அனைத்தும் விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில் உள்ளவை போலக் காட்டப்பட்டன. ஆனால் இவற்றின் கீழாகப் பழைய விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ளது போல, டாஸ்க் பார், பைல் மேனேஜர், அப்ளிகேஷன் ஐகான்கள் என அனைத்தும் தரப்பட்டிருந்தன.

கேள்வி: தொடு திரை இதில் எப்படி செயல்படுகிறது?
பதில்: ஸ்டார்ட் மெனு தொடங்கியவுடன், அடிப்படை தகவல்களான, நேரம் மற்றும் உங்களுடைய எத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் இருந்தன என்று காட்டப் படுகின்றன. அடுத்துக் காட்டப்படும் அப்ளிகேஷன் பேனல்களில், முகப்புக் கற்கள் போல இரண்டு இடங்கள் காட்டப்படுகின்றன. நாம் அப்ளிகேஷன் களைப் பெற, இந்த முகப்புகள் மேல் கிளிக் செய்திட வேண்டியதில்லை. இந்த இடது மற்றும் வலது முகப்புக் கற்கள் போலத் தோற்றமளிக்கும் இடத்தில் விரலால் இழுத்தால் போதும். விருப்பப்படும் அப்ளிகேஷன்களை, இழுத்து வந்து அருகருகே வைத்து இயக்கலாம். இதனால், இரண்டு அப்ளிகேஷன்கள் இயங்குவதை ஒரே நேரத்தில் கவனிக்கலாம். இந்த செயல்பாடு, இதுவரை எந்த டேப்ளட் பி.சி.க்களிலும் காட்டப்படவில்லை.

கேள்வி: ஏ.ஆர்.எம். சிப்களின் தனித்தன்மை என்ன? விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் அதற்கும் என்ன தொடர்பு?
பதில்: விண்டோஸ் 8 சிஸ்டம் கருத்தரங்கில், மைக்ரோசாப்ட் விளக்கக் காட்சியைக் காட்டிய போது, சில நிறுவனங்கள் தங்கள் டேப்ளட் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 இயக்கிக் காட்டி, அதில் வழக்கமான ஆபீஸ் தொகுப்பு போன்ற புரோகிராம்களையும் இயக்கிக் காட்டினார்கள். ஏ.ஆர்.எம். சிப்கள், உலகில் இயங்கும் 99% மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பிற மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஏனென்றால், இந்த ஏ.ஆர்.எம். சிப், மிகக் குறைந்த அளவிலேயே மின் சக்தியைப் பயன்படுத்துகிறது. டெஸ்க்டாப் மற்றும் பிற மொபைல் சாதனங்களின் இயக்கத்தினை ஒருங்கிணைக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏ.ஆர்.எம். சிப் வழி இயங்கும் சிஸ்டத்தை வடிவமைத் துள்ளது.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அப்ளிகேஷன்கள் இயங்குவதில் ஏதேனும் புதுமை உள்ளதா?
பதில்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், HTML5 மற்றும் Javascript பயன்படுத்தி ஒரு புதுவிதமான அப்ளிகேஷனை உருவாக்கி யுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித் துள்ளது. டேப்ளட் பி.சி. ஒன்றில் நாம் எதிர்பார்க்கும் விதமாக இது அமைக்கப் பட்டுள்ளது. மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ம் தொடுதிரை மூலம் பயன்படுத்தும்படி அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், இதனை மைக்ரோசாப்ட் தன் ஸ்டோர் மூலம் வழங்கலாம். இது குறித்து கூடுதல் தகவல் எதுவும் இல்லை.

கேள்வி: தற்போது புழக்கத்தில் உள்ள ஆபீஸ், போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன்களின் கதி என்ன?
பதில்: அவை இன்னும் இயக்கப்படும் வகையில் இருக்கும். இவற்றில் எதனை இயக்கினாலும், ஏற்கனவே நாம் பழகிய விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துவது போலவே காட்டப்படும். புதிய விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களுடன், பழைய அப்ளிகேஷன் புரோகிராம்களும் இயக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் எப்படி ஏ.ஆர். எம். சிப்களில் இயங்கும்?
பதில்: ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கும் விண்டோஸ் சாதனங்கள் தொடு திரை பயன்பாடுகளில் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மைக்ரோசாப்ட் இது குறித்து இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை. இன்டெல் நிறுவன வல்லுநர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஏ.ஆர்.எம். ப்ராசசர்களுக் கான விண்டோஸ் சிஸ்டம், குறைந்தது நான்கு வகையினதாக இருக்கும் என்றார். அவற்றில் எதுவும் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகியவற்றின் அப்ளிகேஷன்களுடன் இணைந்து செயல்படுவதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார். ஆனால் மைக்ரோசாப்ட், இது போன்ற அறிவிப்புகள் அடிப்படை இல்லாதவை என்று சொல்லியுள்ளது. இன்டெல் எழுப்பியுள்ள சந்தேகங்கள் இன்னும் மைக்ரோசாப்ட் குழுவினரால், பதில் அளிக்கப்படாமலேயே உள்ளன.

கேள்வி: ஏ.ஆர்.எம். சிப்களைப் பயன்படுத்து வதால் என்ன என்ன நன்மைகளையும் அனுகூலங்களையும் நாம் பெறலாம்?
பதில்: மிகக் குறைவாகவே மின்சக்தியை இந்த சிப்கள் எடுத்துக் கொள்வது பெரிய நன்மையாகும். இதனால், தொடர்ந்து 10 மணி நேரம் வரை கம்ப்யூட்டரை அடுத்த மின் இணைப்பின்றி இயக்க முடியும். இதுவரை இந்த ப்ராசசர் சிப் மார்க்கட்டில், இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. (Intel & AMD) நிறுவனங்களே, ராஜாக்களாக இயங்கி வந்தன. ஆனால் ரெபரென்ஸ் டிசைன்களை வடிவமைத்துத் தரும் நிறுவனம், இந்த ஏ.ஆர்.எம். சிப்களின் பின்னணியில் உள்ளது. டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், என் விடியா போன்ற நிறுவனங்கள் ஏ.ஆர்.எம் .சிப்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன. எனவே ஓரிரு நிறுவனங்களின் சிப்களுக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. பல நிறுவனங்கள் ஏ.எம்.டி. ப்ராசசர் சிப்களைத் தயாரிக்கும் என்பதால், இவற்றின் விலை குறைவாக இருக்கும்.
சில பாதகங்களும் கிடைக்கலாம். ஏ.ஆர்.எம். சிப்கள், சிப்களில் சிஸ்டம் SystemonaChip (SoC) என்ற வகையில் உருவாக்கப் படுபவை. இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. x86 சிப் போல, இவை முழுமையான சிலிகான் சி.பி.யு.க்களாக இருக்காது. இருப்பினும் இதனால் ஏற்படும் பிரச்னைகள் தீர்க்கப்படும் வகையிலேயே விண்டோஸ் 8 இருக்கும்.

கேள்வி: இதுவரை பயன்படுத்தப்பட்ட து86 வகை சிப்களுக்கும் ஏ.எம்.டி. சிப்களுக்க்கும், அவற்றின் இயக்கத்தில் வேறுபாடு உண்டா? அப்படி என்றால், மைக்ரோசாப்ட் எவ்வாறு பழைய கம்ப்யூட்டர் இயக்கத்திற்கும் விண்டோஸ் 8 சிப் இயக்கத்திற்கும் பாலம் அமைக்கும்?
பதில்: மைக்ரோசாப்ட் இரண்டையும் இணைக்கும் ஒரு படிமத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிப்களில் இப்போது இயக்கப்படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை, ஏ.ஆர்.எம். சிப்கள் மூலமும் இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று வெளியாகும்? (நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களின் கடிதங்களில் இந்த கேள்வி இருந்தது)
பதில்: மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டீவ் பால்மர், இதற்கான பதிலைத் தருகையில், விண்டோஸ் 8 அடுத்த 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். வரும் செப்டம்பர் மாதத்தில், விண்டோஸ் சிஸ்டத்தின் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிப்பாளர்களுக்கான கருத்தரங்கில் இதற்கான சரியான பதிலை எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinothaa - Dindigul,இந்தியா
20-ஜூன்-201116:09:39 IST Report Abuse
Vinothaa வாரம் ஒரு எச்செல் பங்ஷன் பற்றி சொல்லுங்களேன்
Rate this:
Share this comment
Cancel
ரகு குமார் - Doha,கத்தார்
20-ஜூன்-201113:03:07 IST Report Abuse
ரகு குமார் கம்ப்யூட்டர் மலர் செய்திகள் பயனுள்ளவையாக உள்ளன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X