டிப்ஸ்.... டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2011
00:00

ப்ளக் இன் கவனம்
இணையத்தில் உலா வருகையிலும் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சாதனங்களை இணைக்கையிலும் நாம் அடிக்கடி கேட்கும் பெயர் ப்ளக் - இன் என்பதாகும். இது எதனைக் குறிக்கிறது? என்று அறியாமல் அதனை நாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது என்னவென்று பார்ப்போமா?
ப்ளக் - இன் என்பது குறிப்பிட்ட சில வகை இணைய தகவல் வடிவத்தைக் காட்டுவதற் கென நம் பிரவுசர் தொகுப்புடன் இணைந்து பணியாற்றும் புரோகிராம் ஆகும். எடுத்துக்காட்டாக சில இணைய தளங்கள் ஷாக் வேவ் என்னும் விளையாட்டு சாப்ட்வேர் தொகுப்பு களைப் பயன்படுத்தி விளையாட அனுமதிக்கும். இதற்கு ஷாக்வேர் ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படும். இதனை அந்த தளமே உங்கள் கம்ப்யூட்டரில் முதலில் பதித்து உங்களை விளையாட வைத்திடும். சரி எந்த ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப் படும்? எவையெல்லாம் நம்மிடம் இருக்கின்றன என்று நமக்கு எப்படித் தெரியும் என்றெல்லாம் கவலைப் படாதீர்கள். அதனை நீங்கள் பார்க்கும் இணையதளமே கவனித்துக் கொள்ளும். தேவையான ப்ளக் இன் புரோகிராம்கள் இல்லை யெனில் அவற்றைப் பதியும். இருந்தால் தேடி எடுத்து இயக்கி வழி வகுக்கும். அதே போல் ப்ளக் இன் புரோகிராம்களிலும் புதிய பதிப்புகள் கூடுதல் வசதிகளோடு உருவாக்கப் படுகின்றன. இணையதளங்களே அவற்றைக் கண்டறிந்து புதுப்பித்துக் கொண்டு உங்களுக்கு உதவிடுகின்றன.
ஆனால் தற்போது இந்த வகையில் பெரும் ஆபத்து கம்ப்யூட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. நாம் பதிந்து வைத்த ப்ளக் இன் புரோகிராம்களுக்கு அப்டேட் உள்ளதாகத் திடீரென ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். நாமும் அந்த புரோகிராமின் நவீன வசதிகளைப் பெற உடனே யெஸ் அழுத்துவோம். இந்த போர்வையில் ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் திருட்டுத்தனமாகப் பதிந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரின் செயல்பாட்டினையும் முடக்குவார்கள். எனவே ப்ளக் இன் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

நம் விருப்பபடி வேர்டை இயக்க
வேர்ட் செயல்படும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதன் ஸ்பெல்லிங், ஆட்டோ கரெக்ட், தோற்றம் என ஒரு சில விஷயங்கள் சிலருக்கு, சில காரணங்களால் தேவைப்படாமல் இருக்கலாம். எப்படி இந்த தொகுப்பை நம் வசப்படுத்துவது என சிந்திக்கிறீர்களா? உங்கள் விருப்பப்படி வேர்ட் தொகுப்பை வளைக்க அதனை செட் செய்திடலாம். பலவகையான செட்டிங்குகள் Tools மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகையான செயல்பாட்டிற்கென இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பதனைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல் பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதிரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்து விட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என்னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும். View மெனு வேர்ட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.

ஷிப்ட் கீ:
சில செயல்பாடுகளை ஷிப்ட் கீயுடன் (Shift) மேற்கொண்டால் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்துக் காட்டாகப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல்பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும். ஆனால் ஷிப்ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன்பாட்டுக் கட்டங்கள் கிடைக்கும். சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல்பாடுகள் மாறுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக் கோடிடும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட்டனாக மாறும். Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

டூல் பார் விளக்கம்
அப்ளிகேஷன் புரோகிராம்களில் பல டூல் பார்கள் தரப்படுகின்றன. எந்த டூல் பார் என்ன வேலையை மேற்கொள்ளக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் இருக்கலாம்; அல்லது நினைவிற்கு வர மறுக்கலாம். இதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. மவுஸைக் கொண்டு போய் அந்த டூல்பாரின் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் காட்டப்படும். எதற்காக அந்த டூல் பார் என்பதுவும் தெரிய வரும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X