மூன்று சிம் போன் ஐ க்யூப் ஐ700
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2010
00:00

இரண்டு சிம் இயக்கத்தில் மொபைல் போன்கள் உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது மூன்று சிம்கள் கொண்ட போன்கள் வரத் தொடங்கி உள்ளன. இந்த வரிசையில் வந்துள்ள ஐ க்யூப் ஐ700, மொபைல் போனுக்கான அனைத்து வசதிகளையும் தருவதுடன், சிறந்த செயல்பாட்டினையும் வழங்குகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களையும், ஒரு சி.டி.எம்.ஏ. சிம்மினையும் இணைத்து இயக்கலாம். இதன் பரிமாணங்கள் 118.8 – 46–14.5 மிமீ அளவில் உள்ளன. எடை 100 கிராம். இரண்டு அங்குல திரை தரப்பட்டுள்ளது. 3 மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கான திறன் தரும் வகையில் 1000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட கேமரா வீடியோ ரெகார்டிங் செய்கிறது. 3GP, AVI, MPEG4, MP4  ஆகிய பார்மட் வீடியோ பைல்களைக் கையாள்கிறது. MP3, MIDI, AMR, AWB, WAV ஆகிய பார்மட்டுகளில் உள்ள பைல்களை இயக்கும் வகையில் இதன் ஆடியோ பிளேயர் உள்ளது. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. ஜிபிஆர் எஸ், புளுடூத், யு.எஸ்.பி. மற்றும் வாப் தொழில் நுட்பங்கள் டேட்டா இணைப்பிற்கு வழி அமைக்கின்றன. ஜி.எஸ்.எம். இணைப்பிற்கு 32 எம்பி மெமரியும், சி.டி.எம்.ஏ. வுக்கு 16 எம்பி மெமரியும் தரப்பட்டுள்ளன. 500 முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ்புக், 200 எஸ்.எம்.எஸ்.கள் கொள்ளும் இடம், 4 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவை உள்ளன. வழக்கமான கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக், அலாரம், இ–புக் ரீடர், காலண்டர், கரன்சி கன்வர்டர், டார்ச் லைட் போன்றவையும் உள்ளன. இந்த மொபைல் போனின் குறியீட்டு விலை ரூ.4,999.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X