வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2011
00:00

முதல் பக்கத்தில் பக்க எண்ணை மறைத்திட
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், முதல் பக்கத்தில் பக்க எண் காட்டப்படுவதையோ, அச்சிடப் படுவதையோ பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் பக்க எண் பார்மட் செய்யப் படுகையில் முதல் பக்கத்திலும் அது காட்டப்படும். இதனை மட்டும் எப்படி மறைக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண் காட்டப்படுவதை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம். வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 தொகுப்புகளில், டாகுமெண்ட் டைத் திறந்து, அதில் ஹெடர் அண்ட் புட்டர் என்னும் பிரிவில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், இந்த குழுவில், Page Number என்பதில் கிளிக் செய்து, அது தோன்றும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் 2003 தொகுப்பில், Header and Footer மீது டபுள் கிளிக் செய்திடவும். அல்லது View மெனு சென்று கிடைக்கும் மெனுவில் ஹெடர் அண்ட் புட்டர் தேர்ந்தெடுத்துப் பெறவும். இப்போது கிடைக்கும் ஹெடர் அண்ட் புட்டர் டூல் பாரில் Insert Page Number என்பதில் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் மற்ற டூல்களையும் பயன்படுத்தி இதனை ஒழுங்குபடுத்தலாம்.
இனி கீழ்க்கண்ட வழிகளில், முதல் பக்கத்தில் தோன்றும் எண்ணை நீக்கலாம். வேர்ட் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில், Page Lay Out டேப்பினைக் கிளிக் செய்திடவும். அடுத்து, வலது கீழாக உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து Page Set up குரூப் டயலாக் பாக்ஸினைக் கொண்டு வரவும். பின்னர் Lay Out டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Header and Footer பிரிவில் Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் 2003 தொகுப்பில், ஹெடர் அண்ட் புட்டர் டூல்பாரில், பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்கவும். இதில் லே அவுட் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி முதல் பக்கத்தில் பக்க எண் காட்டப்பட மாட்டாது.

டாகுமெண்ட் இடையே தொடர்பு
வேர்டில் பல டாகுமெண்ட்களை ஏற்படுத்துகிறோம். சில வேளைகளில் ஒன்றில் ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இன்னொரு கட்டுரையில் இதனைப் பற்றியும் ஒரு முக்கிய குறிப்பினை எழுதியுள்ளோமே என்று எண்ணலாம். இதனைப் படிக்கும்போது அதனையும் படித்து வைத்தால் நல்லது என்று திட்டமிடலாம். அல்லது ஒரு டாகுமெண்ட்டில் சொன்னதை ஏன் மறுபடியும் எழுத வேண்டும். படிப்பவர்கள் அங்கும் சென்று படித்துக் கொள்ளட்டும் என்றும் எண்ணலாம்.
இந்த எண்ணத்தைச் செயல்படுத்த வேர்ட் வசதி ஏற்படுத்தியுள்ளது. ஒரு டாகுமெண்ட்டுக்கும் இன்னொன்றுக்கு மான தொடர்பினை அந்த டாகுமெண்ட்டி லேயே ஏற்படுத்தலாம். இதனை ஹைபர் லிங்க் என்று சொல்கிறோம்.
இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். முதலில் நீங்கள் தொடர்பு படுத்த விரும்பும் இரு டாகுமெண்ட் களையும் திறந்து கொள்ளவும். பின் Window மெனு சென்று அதில் Arrange All என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். இப்போது அடுத்த அடுத்த விண்டோக்களில் இரண்டு டாகுமெண்ட்களும் திறக்கப்பட்டிருக்கும். இனி முதல் டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட பொருள் தொடர்புக்கான அடிப்படை சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின் இதனை ரைட் கிளிக் செய்து அடுத்த டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் வாசகர் முந்தைய டாகுமெண்ட்டினைத் தொடர்பு கொள்ள வேண்டுமோ அந்த வாக்கியத்தின் கடைசி சொல்லுக்குப் பக்கத்தில் விட்டுவிடவும். பின் இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Create Hyperlink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி வாசகர்கள் இரண்டா வது டாகுமெண்ட்டைப் படிக்கையில் இந்த இடத்திற்கு வந்தவுடன் அங்கு ஹைப்பர் லிங்க் இருப்பதற்கான அடையாளம் தெரியும். அந்த இடத்தில் கண்ட்ரோல் அழுத்தி கிளிக் செய்தால் உடனே முந்தைய டாகுமெண்ட் திறக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் கர்சர் நிற்கும். இந்த இரு டாகுமெண்ட்களையும் நீங்கள் இணைய தளத்தில் பதிக்க விரும்பினால் இரண்டும் ஒரே போல்டரில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிறிய கேபிடல் எழுத்து
ஆங்கிலத்தில் அமைக்கும் டாகுமெண்ட் களில், படிப்பவர்களின் கவனத்தைத் திருப்ப அல்லது தலைப்புகளில் பயன் படுத்த கேப்பிடல் எழுத்துக்களில் அந்த சொற்களை அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். வேர்ட் தொகுப்பில் இன்னொரு வழியும் தரப்படுகிறது. கேப்பிடல் எழுத்துக்களையே சிறிய அளவில் அமைக்கலாம். இதனை “Small Caps” என அழைக்கின்றனர்.
1. முதலில் எந்த எழுத்துக்களை சிறிய பெரிய எழுத்துக்களில் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2.பின் இதில் ரைட் கிளிக் செய்து “Font” தேர்ந்தெடுக்கவும்.
3. “Font” என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதிலும் “Font” என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Small Caps” என்ற இடத்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும்.
4. அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்துக்கள் சிறிய பெரிய எழுத்துக்களில் அமைந்திருக்கும். இப்போது பக்கத்தில் உள்ளதைத் தேர்ந் தெடுத்து அவற்றை வழக்கமான கேப்பிடல் எழுத்துக்களில் அமைத்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரிய வரும்.

மெனுவிலிருந்து வெளியே வர
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட் டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - பவானிசாகர்erode,இந்தியா
10-ஜூலை-201121:17:52 IST Report Abuse
mohankumar குட் computer டிப்ஸ் koduthathaku thanks
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X