ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2011
00:00

ஹார்ட் டிஸ்க் ஜாதகம் எனப் படித்தவுடன், நீங்களும் கம்ப்யூட்டரை ஜாதகம் பார்க்கச் சொல்வதில் இறங்கிவிட்டீர்களா என்று எண்ணினேன். உள்ளே தகவல்களைப் படிக்கையில் பயனுள்ள டவுண்லோட் புரோகிராம் குறித்து அறிந்தது மனதிற்கு உற்சாகமாக இருந்தது.
-நே.கதிரவன், விழுப்புரம்.

பயர்பாக்ஸ் பிரவுசர் 5 குறித்து மிக ஆழமான தகவல்களை முதன் முதலாகத் தந்து, தினமலர் எதிலும் முதல் மலர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். தகவல்களும் முத்து முத்தாக இருக்கின்றன.
-டாக்டர் என்.கே. ஸ்ரீதர், மதுரை.

கூகுள் மொழி பெயர்க்கும் தளம் சென்று பயன் படுத்திப் பார்த்தேன். பல வகையான வாக்கியங் களைக் கொடுத்துச் சோதனை செய்தேன். நேரடியான வாக்கியங்களை மிகச் சரியாகவே மொழி பெயர்க்கிறது. ஆச்சரியம் தான்.
-பேரா. செ.மிருணாளினி, சென்னை.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் மீண்டும் இன்ஸ்டால் செய்திடும் இந் நாளில், நீங்கள் தந்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நல்ல அறிவுரையாகும். இவற்றைப் பின்பற்றினால், பின்னாளில் கவலையுடன் இருக்க வேண்டியதில்லை.
-சி.எல். தங்கராஜ், புதுச்சேரி.

இலவச போட்டோ தொகுப்பு தளத்தில் கிடைக்கும் படங்கள் எல்லாமே அற்புதம். மாணவர்களுக்கான பிரசன்டேஷன் ஸ்லைடுகளில் இவற்றை நன்கு பயன்படுத்துகிறேன். தகவலுக்கு நன்றி.
-ஜி.எஸ்.ஆராவமுதன், ஆசிரியர், தாம்பரம்.

ஹார்ட்வேர் டிப்ஸ் என நீங்கள் கொடுத் தது எல்லாம், நாங்கள் அவ்வப்போது சந்திக்கும் பிரச்னைகள் சார்ந்தே உள்ளன. தெளிவான விளக்கங்களைப் படித்த பின்னர், எங்களின் பயம் கலைந்தது. தொடர்ந்து இது போன்ற டிப்ஸ்களை அளிக்கவும்.
-என். மணியன், திண்டிவனம்.

மொபைல் உயிரைப் பறிக்குமா? செய்தி படித்து வியப்பும் வேதனையும் அடைந்தேன். எச்சரிக்கை தகவலாக எடுத்துக் கொண்டேன்.
-டி.பரமசிவம், தேனி.

என் கேள்விக்கு தாங்கள் பதிலில் தந்த சயின்ஸ் டெய்லி இணைய தளம் எனக்கும், சக ஆசிரியை களுக்கும், முக்கியமாக மாணவர் களுக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. சாதாரண கேள்வி தானே என அலட்சியப்படுத்தாமல் பதில் அளித்தமைக்கு நன்றி.
-டி.கிறிஸ்டோபல் சிந்தியா, காரைக்கால்.

பயர்பாக்ஸ் பிரவுசருக்கு நீங்கள் குறிப்பிட்ட ஸ்பீட் டயல் ஆட் ஆன் தொகுப்பு அருமையான பயன் தருகிறது. நான் தினந்தோறும் பார்த்தே ஆக வேண்டிய தளங்களை எல்லாம் இதில் போட்டுப் பெறுகிறேன். வேலை எளிதாகிறது.
-சி.அன்புராணி, ஹாஸ்டல் வார்டன், செங்கல்பட்டு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X