எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
00:00

எக்ஸெல் : கணக்கிடும் வழி எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் டேட்டாவினை நாம் எதிர்பார்க்கும் வழியில் கணக்கிட்டு முடிவுகளைப் பெற பார்முலாக் களை அமைக்கிறோம். இந்த பார்முலாக் களை எக்ஸெல் எப்படி கையாள்கிறது என்பது நம் அடி மனதில் எழும் கேள்வியாக இருந்தாலும், விடை ஒழுங்காகக் கிடைத்தால் சரி என்று இருந்து விடுகிறோம். ஆனால் ஒரு பார்முலா எப்படி இயங்குகிறது என்பதனையும் நாம் அந்த ஒர்க்ஷீட்டின் மூலமே காணலாம் என்பதுதான் வியத்தகு தகவல். அதனை இங்கு பார்க்கலாம்.
பார்முலா ஒன்றில் பல்வேறு கணக்கீடு களையும் எண்களையும் பல அடைப்புக் குறிக்குள் கொடுக்கிறீர்கள். அதில் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அனைத்தும் உள்ளன. மேலும் சில சிறப்பு கணக்கீடுகளும் உள்ளதாக வைத்துக் கொள்வோம். இவற்றை எந்த வரிசையில் எக்ஸெல் எடுத்துக் கொள்கிறது என்று அதனை இயக்கு கையிலேயே நாம் கண்டறிந்து கொள்ள முடியும்.
இதனை அறிய, பார்முலா உள்ள செல் ஒன்றை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் Tools மெனு செல்லுங்கள். அதில் உள்ள Formula Auditing என்னும் துணை மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அல்லது பார்முலா ஆடிட்டிங் என்னும் டூல் பார் திறந்திருந்தால் Evaluate Formula button என்பதனைப் பயன்படுத்துங்கள். முதலில் Evaluate button கீழ்ப்பாகத்தில் திறக்கப்படும். ஒவ்வொரு முறை நீங்கள் Evaluate button ஐக் கிளிக் செய்யும் போதும் நீங்கள் கொடுத்துள்ள பார்முலாவில் உள்ள கணக்குகள் செயல்படுத்தப்படும். எக்ஸெல் ஒவ்வொன்றாக நீங்கள் கொடுத்துள்ள கணக்கினை எடுத்துக் கொள்வதனைப் பார்க்கலாம். அப்போது எக்ஸெல் எதனை முதலில் மேற்கொள்கிறது; எதனை இரண்டாவதாக மேற்கொள்கிறது என்பதனை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒன்றைச் செயல் படுத்துகையில் எதில் அடிக்கோடு உள்ளதோ அது அடுத்ததாக எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்பதனையும் அறியலாம். பார்முலாவில் செல்களுக்கான ரெபரன்ஸ் குறிக்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டுக் காட்டப்படும். பார்த்தது போதும் என்று உணர்ந்தாலோ அல்லது கடைசி கணக்கு போடப் பட்டுவிட்டாலோ Close button அழுத்தி வெளியேறலாம். எக்ஸெல் எப்படி பார்முலா கணக்கீடுகளை மேற்கொள் கிறது

ஒர்க்புக்கில் பக்க எண் செட்டிங்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை அச்சடித்து எடுக்கையில், அது பல பக்கங்களை உடையதாக இருந்தால், அதில் பக்க எண்கள் இருந்தால், அச்சடித்து எடுத்த ஷீட்களைக் கையாள்வது எளிதாக இருக்கும். வேர்ட் தொகுப்பில் இருப்பது போலவே எக்ஸெல் தொகுப்பிலும் அச்சடித்து எடுக்கும் பக்கங்களுக்கு எண்களை அமைக்கலாம். ஒர்க் ஷீட்டைத் திறந்து கொண்டு “View” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கீழ் விரியும் மெனுவில் “Header and Footer” என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். “Page Setup” என்னும் பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் விரியும். இதில் “Header / Footer” என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் மெனுவில் நீங்கள் அமைக்க விரும்பும் பக்க எண் மேலாக இருக்க வேண்டும் “Header” என்றால் என்ற பிரிவினையும் கீழாக இருக்க வேண்டும் என்றால் “Footer” என்ற பிரிவினையும் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகும் ஒரு வசதி இங்கு கிடைக்கிறது. அச்சடித்து எடுக்கும் பக்கங்கள் மொத்தத்தில் ஒவ்வொரு பக்கமும் எத்தனாவது பக்கம் எனத் தெரிந்து கொள்ள விரும்பினால் “Page 1 of ?” என்பதனைத் தேர்ந்தெடுங்கள். வெறும் பக்க எண் மட்டுமே வேண்டும் என விரும்பினால் “Page 1” என்பதனைத் தேர்ந்தெடுங்கள். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள்.

எக்ஸெல் + ஷிப்ட் கீ
எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டனை ஷிப்ட் கீயுடன் அழுத்தினால் அது டபுள் அன்டர்லைனாக மாறும். இதே போல Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

பல செல்களுக்கு ஒரே பார்முலா
எக்ஸெல் தொகுப்பில், ஒரு பார்முலாவினை குறிப்பிட்ட வரிசையில் உள்ள அனைத்து செல்களிலும் அமல்படுத்த விரும்புவோம். ஒரே பார்முலாவினை இவ்வாறு இயக்க, ஒவ்வொரு வரிசையாகச் சென்று அந்த செல்களில் அமைப்பது வீண் வேலை தான். ஆனால் இது நடக்க வேண்டுமே? அதற்கு எக்ஸெல் ஓர் எளிய மூன்று ஸ்டெப் வழி தருகிறது. அதனை இங்கு ஓர் எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.
உங்கள் ஒர்க் ஷீட்டில் நெட்டு வரிசை-Aல் 100 பொருட்களை வரிசையாக அமைத்திருக்கிறீர்கள். நெட்டு வரிசை- Bல் அதனுடைய மொத்தவிலையை தந்திருக்கிறீர்கள். இப்போது ஒவ்வொரு பொருளுக்குமான சில்லரை விலையை நெட்டு வரிசை - Cல் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செல்லாக 100 பொருளுக்கும் சென்று அமைப்பதென்பது நேரத்தை வீணடிக்கும் வேலை அல்லவா? கீழ்க்குறிப்பிட்டபடி செயல்படவும்.
C2-ல் கிளிக் செய்து =B2*300% என்ற பார்முலாவினை அமைக்கவும். அடுத்து [Ctrl][Enter] என்ற பட்டன்களை அழுத்தவும். இப்போது அதனை செலக்ட் செய்து பில் ஹேண்டிலில் டபுள் கிளிக் செய்திடவும். (இது செல்லின் வலது ஓரத்தில் கீழாகத் தெரியும்) இப்போது எக்ஸெல் Bல் காலி செல் வரும் வரை இதில் பார்முலாவினை அமைத்திடும். பார்முலா சரியாகத்தான் அமைக்கப் பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்திட C1-ல் கிளிக் செய்து [Ctrl][Shift][End] என அழுத்தவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X