கூகுள் நேயர்கள் விபரம் தரப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
00:00

நமக்கு ஒரு தகவல் தேவைப்படும்போது, கூகுள் தேடல் சாதனைத்தைப் பயன்படுத்துகிறோம். நம்மைப் பற்றிய தகவல் தேவைப்படுகையில், கூகுளைத் தொடர்பு கொண்டு பெற முடியுமா? எல்லாரும் பெற முடியாது. அரசு மற்றும் பொது நிறுவனங்கள் பெற முடியும். இவை வைத்திடும் அனைத்து வேண்டுகோள் களையும் விண்ணப்பங்களையும் கூகுள் நிறைவேற்றும் என்றும் சொல்ல முடியாது.
இந்த வகையில் அமெரிக்கா மற்றும் பிரேசில் அரசுகளே, கூகுளிடம் தகவல் கேட்டவகையில் முதல் இடத்தில் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்ற 2010 ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 3,000 பேர் குறித்த தகவல்களை, இந்திய அரசு கேட்டதாகவும், கூகுள் சிலவற்றைத் தவிர்த்து மற்றவற்றைத் தந்ததாகவும் கூறப்படுகிறது. சில மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் குறித்த வீடியோ பதிவுகளை நீக்குமாறு இந்தியா சார்பில் வேண்டுகோள்கள் வைக்கப்பட்ட போது, கூகுள் மறுத்துவிட்டது. இது போல ஆண்டுக்கு 100 வேண்டுகோள்களை இந்தியா கூகுள் நிறுவனத்திடம் கொண்டு செல்கிறது.
பெரும்பாலும் கூகுள் இமெயில் சேவை வழியே சென்ற தகவல்களை அரசு மற்றும் சட்டத்தினை அமல்படுத்தும் துறைகள் கேட்கின்றன. மேலும் கூகுள் வசதிகளைப் பயன்படுத்தி, இணையத்தில் தேடும் தகவல்கள் குறித்தும் இவை விசாரிப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.
சென்ற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், இந்திய அரசாங்கம் மற்றும் புலனாய்வுத் துறை, 1,699 வேண்டுகோள் கடிதங்களை அனுப்பியதாகவும், அதற்கு முந்தைய ஆறு மாத காலத்தில் இது 1,430 ஆக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் இவற்றில் 79% விண்ணப்பங் களுக்கான தகவல்களைத் தந்து உதவியுள்ளது. பல வேண்டுகோள்களைப் பொறுத்தவரை அனைத்து தகவல்களையும் தராமல், குறிப்பிட்ட அளவிலான தகவல்களை மட்டுமே தந்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலை சங்கர் - tirunelveli,இந்தியா
19-ஜூலை-201122:50:59 IST Report Abuse
சுடலை சங்கர் இந்த தளத்தில் தரபடுகின்ற அனைத்து தகவல்களும் பயனுள்ளதாக இருக்கின்றன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X