கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
00:00

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பதிப்பு 4 னைப் பயன்படுத்தி வருகிறேன். தாங்கள் சென்ற வாரங்களில் பயர்பாக்ஸ் 5 பதிப்பிற்கு மாறிக் கொள்வது குறித்து எழுதி இருந்தீர்கள். கட்டாயம் மாற வேண்டுமா?
-சி. கந்தசாமி, மதுரை.
பதில்: ஆம், மாறிக் கொள்வது நல்லது. அப்படித்தான், பயர்பாக்ஸ் தொகுப்பைத் தரும் மொஸில்லா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பெல்லாம் புதிய பதிப்பு ஒன்று வந்த பின்னர், அதில் பிரச்னைகள் இருந்தால், அதற்கான பேட்ச் அப்டேட் பைல் வெளியிடப்படும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தே அடுத்த பிரவுசர் பதிப்பு வெளியிடப்படும். ஆனால், பிரவுசர்களுக்கிடையே உள்ள போட்டியில், நான்கு மாதங்களுக்கு ஒரு புதிய பதிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.அப்படி வெளியிடப்படுகையில், முந்தைய பதிப்பிற்கான சப்போர்ட்டினை மொஸில்லா வழங்காது. அதாவது பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், புதிய அம்சங்கள் சிலவற்றையும் சேர்த்து இனி புதிய பதிப்புகளே வெளிவரும் எனத் தெரிகிறது. அந்த வகையில் வந்துள்ளதே பயர்பாக்ஸ் 5. எனவே பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும், இனி வரும் புதிய பதிப்புகளுக்கு மாறிக் கொள்வதே நல்லது.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன். குயிக் லாஞ்ச் டூல் பாரில் எப்படி புரோகிராம்களைச் சேர்ப்பது என்று தெரியவில்லை. தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-எஸ். சூசை மரியராஜ், புதுச்சேரி.
பதில்: பலரின் இந்த சந்தேகத்தை கேள்வியாக் கியமைக்கு நன்றி. நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை, தாமதமின்றி இயக்க, குயிக் லாஞ்ச் டூல்பார், விண்டோஸ் தரும் ஒரு சிறந்த வசதியாகும். இதில் புரோகிராம்களைச் சேர்ப்பது அதிர்ஷ்டவசமாக மிக மிக எளிதான ஒன்றாகும். நீங்கள் இணைக்க விரும்பும் புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, குயிக் லாஞ்ச் டூல் பாரில் விட்டுவிடவும். ஸ்டார்ட் சென்று, பின்னர் ஆல் புரோகிராம்ஸ் திறந்து, அதில் காட்டப்படும் புரோகிராம் பட்டியலில், நீங்கள் விரும்பும் புரோகிராம்களின் ஐகானில் கிளிக் செய்து இழுத்துப் போடலாம்.
இவ்வாறு குயிக் லாஞ்ச் பாரில் போட்ட பின்னர், சில புரோகிராம்கள் தேவைப்படாமல் போகலாம். அப்போது, அந்த புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் டெலீட் பட்டனை அழுத்தி நீக்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிஷன் வைத்துள்ளேன். என் ஸ்டார்ட் மெனுவில் இருந்த சர்ச் பிரிவு திடீரென காணாமல் போய்விட்டது. நானாக நீக்கினேனா அல்லது தானாகப்போய்விட்டதா என்று தெரியவில்லை. இதனை எப்படி மீண்டும் பெறுவது என அவசியம் கற்றுத் தரவும்.
-சி.உமாராணி, கோவை.
பதில்: சூப்பர் கேள்வி, உமா. நன்றி. மீட்புப் பணிக்குச் செல்வோமா! டாஸ்க்பாரில் எங்காவது கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். டாஸ்க் பார், ஸ்டார்ட் மெனு, ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மேலாக உள்ள ஸ்டார்ட் மெனு டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் கஸ்டமைஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து கஸ்டமைஸ் ஸ்டார்ட் மெனு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் மேலாக உள்ள அட்வான்ஸ்டு டேப்பினைக் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள ஸ்டார்ட் மெனு லிஸ்ட்டில் ஸ்குரோல் செய்து போகவும். இதில் சர்ச் என்னும் இடத்திற்கு எதிரே டிக் அடையாளம் ஏற்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். இந்த பட்டியலில் கீழாக சர்ச் பிரிவு இருக்கும். டிக் அடையாளம் இல்லை எனில், ஏற்படுத்தவும். பின்னர் இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில், சர்ச் பிரிவு இருக்கும்.

கேள்வி: நான் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துகிறேன். இதில் ஹைபர்னேஷன் என்ற இயக்கத்திற்கான ஆப்ஷன் கிடைப்பதில்லை. சிஸ்டமே அவ்வாறு உள்ளதா? அல்லது செட்டிங்ஸ் மாற்ற வேண்டுமா?
-ஜே. தனிநாயகம், புதுச்சேரி.
பதில்: ஹைபர்னேஷன் அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் உண்டு. எனக்குப் பிடித்த வசதியும் அதுவே. ஏனென்றால், கம்ப்யூட்டரை கிட்டத்தட்ட அணைத்துவிட்ட (Off) நிலைக்குக் கொண்டு சென்றாலும், அதன் செட்டிங்ஸ், திறந்து வைக்கப்பட்ட விண்டோக்கள் அனைத்தும் அப்படியே இருக்கும். மீண்டும் உயிர்ப்பிக்கும் போது அவை அப்படியே இயக்கப்பட்டு கிடைக்கும். நானும் விஸ்டா பயன்படுத்து கையில், இந்த ஹைபர்னேஷன் வசதி அடிக்கடி மறையும். ஆனால், அதனை எப்படித் திரும்பக் கொண்டு வருவது என்ற வழியை நான் அறிந்திருந்தேன். அநேகமாக டிஸ்க் கிளீன் அப் விஸார்ட் பயன்படுத்துகையில், தவறுதலாக இதனை நீக்கியிருப்பீர்கள்.
இதனைத் திரும்பப் பெற, ஸ்டார்ட் அழுத்தி, “command” என டைப் செய்திடவும். இப்போது கிடைக்கும் பட்டியலில், கமாண்ட் ப்ராம்ப்ட் பிரிவைப் பார்த்து, அதன் மீது, ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் உள்ள மெனுவில், ‘Run as Administrator’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கமாண்ட் ப்ராம்ப்ட் திறக்கப்படும். இங்கு கிடைக்கும் துடிக்கும் கட்டளைப் புள்ளி அருகே, “powercfg/hibernate on” என டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து மீண்டும் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், உங்களுக்கு ஹைபர்னேஷன் ஆப்ஷன் கிடைக்கும். சந்தோஷமா தனிநாயகம்.

கேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் கம்ப்ரஸ்ஸன் வசதி பயன்படுத்தி நான் சில பைல்களை இணைத்து ஸிப் பைலை உருவாக்குகிறேன். ஆனால் நான் விரும்பும் வகையில் அந்த பைலின் பெயர் உருவாவதில்லை. விண்டோஸ் அதன் போக்கில் ஸிப் பைலை உருவாக்குகிறது. இதனை எப்படி தீர்ப்பது?
-சி. வெங்கட் அருண், சிவகாசி.
பதில்: நல்ல தகவலுடன் ஒரு கேள்வி. பலருக்கு விண்டோஸ் சிஸ்டத்தில் ஒரு கம்ப்ரஸ்ஸன் வசதி உள்ளது என்று தெரியாது. அதனை முதலில் விளக்குகிறேன். நீங்கள் கம்ப்ரஸ் செய்ய வேண்டிய, அதாவது சுருக்கி அமைக்க வேண்டிய பைல்களைத் தேர்வு செய்து, பின்னர் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Send To என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின் Compresse (Zipped) Folder என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ரொம்ப ஈஸியா! இனி உங்க பிரச்னைக்கு வருவோம். விண்டோஸ் அது பாட்டுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களிலிருந்து ஒரு பைலைத் தேர்ந்தெடுத்து, கம்ப்ரஸ் செய்த பைலுக்கு பெயர் சூட்டுகிறது. நீங்கள் விரும்பும் பைலின் பெயரைச் சுருக்கப்படும் பைலுக்கு வைத்திட விரும்பினால், நீங்கள் அந்த பைலின் பெயரில் ரைட் கிளிக் செய்திட வேண்டும். எனவே Send To மெனுவில், எந்த பைலின் பெயர் மீது கர்சரைக் கொண்டு சென்று, இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக் கிறீர்களோ, அந்த பைலின் பெயர் சுருக்கப் படும் பைலுக்குப் பெயராக விண்டோஸ் அமைத்துக் கொள்ளும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் வரப்போவதாக தகவல்கள் வருகின்றன. தற்போது பயன்படுத்தும் கம்ப்யூட்டரே போதுமா? அல்லது ஹார்ட்வேர் புதியதாக தேவைப்படுமா?
-சி. அன்புச் செல்வி, கோவை.
பதில்: இந்த விஷயத்தில் மைக்ரோசாப்ட் மிகத் தெளிவாக, விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர், விண்டோஸ் 8 இயங்கப் போதும் என அறிவித்துள்ளது. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் நீங்கள் என்ன சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்று எழுத வில்லையே! விண்டோஸ் 7 இயங்கத் தேவையான குறைந்த பட்ச ஹார்ட்வேர் சாதனங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.
1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சி.பி.யு.
1 ஜிபி ராம் மெமரி (32 பிட்) அல்லது 2 ஜிபி ராம் மெமரி (64 பிட்), 16 ஜிபி ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் (32 பிட்) அல்லது 20 ஜிபி ஹார்ட் டிஸ்க் (84 பிட்), டைரக்ட் எக்ஸ் 9 கிராபிக்ஸ் சாதனம் WDDM 1.0 அல்லது அதற்கும் மேலாகத் திறன் கொண்ட ட்ரைவர்.

கேள்வி: இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில், திடீரென உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. அதனால் மிகவும் மெதுவாக இயங்குகிறது. சரி செய்திட இந்த இடத்தில் கிளிக் செய்திடவும் என எச்சரிக்கை செய்தி, மைக்ரோசாப்ட் நிறுவனச் செய்தியாக வருகிறது. என்ன செய்யலாம்?
-கா. பொன்ராஜ், மதுரை.
பதில்: நல்ல வேளை, செய்தி காட்டிய இடத்தில் கிளிக் செய்திடவில்லை. இந்த எச்சரிக்கைச் செய்தி உங்களைப் பயமுறுத்தித் தங்கள் வலையில் விழ வைத்து, உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மால்வேர் புரோகிராமின் வேலைதான் இது. இது போன்ற எச்சரிக்கை செய்தியைக் கண்டால், கர்சரை அதன் பக்கமே கொண்டு செல்ல வேண்டாம். செய்தியை நன்கு கவனியுங்கள். சில சொற்களில், ஏன் மைக்ரோசாப்ட் என்ற பெயரில் கூட எழுத்துப் பிழை இருக்கும். நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் அனுப்பும் செய்தியில் எழுத்துப் பிழை இருக்காது. நம் வாசகர்கள் அனுப்பிய இது போன்ற செய்தியில் “Secyrity” என்ற பிழை உள்ள சொல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனவே, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், எத்தகைய எச்சரிக்கை செய்தி வந்தாலும், அது குறித்துக் கலவரம் அடையாமல், அது பொய்யானது என்ற முடிவிற்கே வரவும்.
எடுத்துக்காட்டுக்கு இங்கு ஒரு கட்டம் தந்துள்ளேன்.
இந்த செய்தி வந்தால், “Alt” key மற்றும் “F4” கீகளை அழுத்தவும். செய்தி உள்ள கட்டம் மூடப்படும். நீங்கள் தொடர்ந்து பிரவுஸ் செய்திடலாம். இந்த கீகளுக்கு அந்த செய்தி கட்டம் மூடப்படவில்லை என்றால், “Ctrl”, “Alt” மற்றும் “Delete” கீகளை அழுத்தி விண்டோஸ் டாஸ்க் மானேஜர் விண்டோவினைப் பெறவும். “Applications” டேப்பில் இடது கிளிக் ஏற்படுத்தவும். அடுத்து, உங்கள் பிரவுசர் புரோகிராம் அல்லது உங்களுக்குப் பிரச்னை தரும் புரோகிராம் என நீங்கள் சந்தேகப்படும் புரோகிராம் மீது, இடது கிளிக் ஏற்படுத்தி, பின்னர் “End task” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
ஆனால், இதனை ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள இயலாது. கம்ப்யூட்டரில் இன்னொரு ஆண்ட்டி மால்வேர் புரோகிராம் ஒன்றையும் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்டர்நெட்டில் நிறைய இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. நானறிந்த வரையில் Malwarebytes Anti Malware என்ற புரோகிராம் நன்றாக வேலை செய்கிறது. இதனை http://malwarebytes.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srishanmuga - madurai,இந்தியா
22-ஜூலை-201109:14:27 IST Report Abuse
srishanmuga டிராபிக் எப்படி செய்வது சற்று விளக்கம் தாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X