இந்த வார டவுண்லோட் கீ பிரீஸ் - வேகத்தின் துணை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
00:00

வழக்கமாக அடிக்கடி திறக்கும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் இடத்தில் வைத்து கிளிக் செய்திடுவோம்; அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான்களை வைத்து, அதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இப்படி எத்தனை புரோகிராம்களை வைத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் செட் செய்யப் படாத புரோகிராம் தேவைப்பட்டால், ஸ்டார்ட் மெனு சென்று, ஆல் புரோகிராம்ஸ் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் பெரிய பட்டியல் மற்றும் அதன் பிரிவுகள் தரும் மெனுக்களில் இருந்து புரோகிராம்களை இயக்குவோம். இது அதிக நேரம் எடுக்கும் முயற்சியாகும். பல அப்ளிகேஷன் புரோகிராம் களில் எத்தனையோ ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த புரோகிராம் களைத் திறந்து இயக்குவதற்கும் ஷார்ட்கட் கீகளை அமைத்தால் என்ன என்று உங்களில் பலருக்கு நிச்சயம் ஓர் எண்ணம் தோன்றி இருக்கலாம். அப்படி ஒரு வசதியைத் தருகிறது கீ பிரீஸ் (Key Breeze) என்ற புரோகிராம்.
இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால், ஓரிரண்டு கீகளிலேயே நீங்கள் விரும்பும் புரோகிராம் களையும், போல்டர்களையும் திறந்து இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டராக இதனை இன்ஸ்டால் செய்திடவும். மற்ற வகை யூசராக இதனை இன்ஸ்டால் செய்திட முடியாது. அட்மினிஸ்ட் ரேட்டராக ஒரு நிமிடத்தில் இதனை இன்ஸ்டால் செய்திட முடிகிறது.
இன்ஸ்டால் செய்த பின்னர், இந்த புரோகிராமிற்கு என அமைக்கப்பட்ட ஹாட் கீ (;) யினைப் பயன்படுத்துங்கள். இந்த கீயினை அழுத்தியவுடன், ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் புரோகிராமின் பெயரை டைப் செய்து என்டர் செய்தால், அந்த புரோகிராம் உடன் இயங்கத் தொடங்கும்.
இன்னொரு வழியும் உள்ளது. நீங்களே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களுக்கு சுருக்குச் சொற்களை அமைக்கலாம். இந்த சொற்களைப் பயன் படுத்தி புரோகிராம்களைத் திறக்கலாம். இதே போல போல்டர்களுக்கும் சுருக்குச் சொற்களை செட் செய்து திறக்கலாம்.
கி பிரீஸ் புரோகிராமினை இயக்குகையில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் வகையில், அடிக்கடி கேட்கப் படும் கேள்விகள் பிரிவு ஒன்றும் தரப்பட்டுள்ளது.
சுருக்கமான கீகளைப் பயன்படுத்தி, நேரத்தை மிச்சப்படுத்தி, புரோகிராம்களை இயக்க விரும்புபவர்கள், இந்த புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற http://www.keybreeze.com/download/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும். பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்துவதற்கென தனியே ஒரு புரோகிராமினை இந்த தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ள லிங்க் தரப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. பதிப்பு என இது பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B .M .ஜவஹர் - ஜல்கான்,இந்தியா
30-ஜூலை-201108:07:13 IST Report Abuse
B .M .ஜவஹர்  ஆசிரியருக்கு வணக்கம். மிக மிக பயன் தருகிருது.கீ பிரஸ் சாப்ட்வேர். நன்றி வணக்கம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X