கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
00:00

கேள்வி: வேர்டில் டைப் செய்கையில், ஆங்கில மொழிச் சொற்களுக்கு, அதே பொருள் தரும் மற்ற சொற்களைத் தேடிப் பெறும் வழி எது? எந்த மெனுவில் கிடைக்கும்?
-சா. பாஸ்கரன், திருவண்ணாமலை.
பதில்: நாம் எழுதுவதன் தரத்தை உயர்த்த, வேர்ட் தரும் அருமையான வசதி தெசாரஸ் (Thesaurus). இதனை இயக்கினால், நீங்கள் தரும் சொற்கள் சார்ந்த, அதே பொருளைத் தரக்கூடிய சொற்களின் பட்டியலைப் பெறலாம். பட்டியலில் உள்ள சொற்கள் உங்களுக்கு நிறைவினை அளிக்க வில்லை என்றால், மேலும் தேடிப் பெறக் கூடிய இடங்கள் எவை என்பதையும் சுட்டிக் காட்டி, அதிலிருந்தும் எடுத்துத் தரும். இதனைப் பயன்படுத்த, ஷிப்ட்+எப்7 (Shift+F7) கீகளை அழுத்த வேண்டும். உடனே, வலது பக்கத்தில் தெசாரஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.இதில் சொல்லை டைப் செய்தால், கீழாக Meanings என்ற பிரிவில் இணைச் சொற்கள் கிடைக்கும். நாம் அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது Tools மெனு சென்று, அதில் Language தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் இந்த மெனுவில் Thesaurus என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், மேலே விளக்கப் பட்டுள்ள தெசாரஸ் கட்டம் கிடைக்கும்.

கேள்வி: ஜிமெயில் பகுதி யில் ஆயிரக்கணக்கான மெயில்கள் பெட்டியில் உள்ளன. இவற்றில் படிக்காத மெயில்களை மட்டும் தனியே ஒதுக்கிப் படிக்க முடியுமா? ஜிமெயில் லேப்ஸில் இதற்கான செட்டிங்ஸ் இல்லை. வழி தரவும்.
-சி. ஈஸ்வரன், கம்பம்.
பதில்: நீங்கள் கூறுவது சரியே. ஜிமெயில் லேப்ஸ் பிரிவில் இதற்கான வழி இல்லை. ஆனால், சுருக்கு வழி ஒன்றின் மூலம் இதனைத் தனியே பெறலாம். சர்ச் பீல்டில் is:unread என டைப் செய்து Search Mail என்பதில் என்டர் தட்டவும் . இப்போது உங்கள் இன்பாக்ஸ் நீங்கள் படிக்காத மெயில்களை மட்டும் காட்டும். அதில் முக்கியமானதை படித்துவிட்டு, உங்கள் பணியைத் தொடரலாம்.

கேள்வி: என் மின்னஞ்சலில் படங்களை கடிதத்தின் செய்தியிலேயே ஒட்டி அனுப்ப விரும்புகிறேன். அட்டாச்மெண்ட் ஆக அல்ல. இதற்கான வழி ஜிமெயிலில் உள்ளதா?
-சி. கணேஷ் ராஜ், கோவை.
பதில்: போட்டோ, ஸ்கிரீன் ஷாட், படம் என எதனையாவது உங்கள் மின்னஞ்சல் செய்தியுடன் அனுப்ப வேண்டும் என்றால், அதனை அட்டாச் செய்து தான் அனுப்புகிறீர்கள். அப்படி இல்லாமல், உங்கள் அஞ்சல் செய்தியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு படம் இடம் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் என்ன செய்யலாம்? உங்களின் இந்தக் கேள்வியுடன் டூல்பார் அனைத்தையும் ஒரு பார்வையிட்டேன். இதற்கான ஆப்ஷன் எதுவும் தெரிய வில்லை.
இருப்பினும் ஜிமெயில் லேப்ஸ் பிரிவில் இதற்கான வசதி உள்ளதா எனப் பார்க்கையில், ஆப்ஷன் கிடைத்தது. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கான பக்கம் செல்லவும். அங்கு லேப்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும். "Insert Images feature" என்ற பிரிவில் இதற்கான ஆப்ஷனைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுத் தவுடன், ஜிமெயிலின் கம்போஸ் மெயில் பகுதியில், ஒரு புதிய பட்டன் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், படம் அல்லது போட்டோவினை அப்லோட் செய்திடும் வசதி கிடைக்கும். அல்லது படத்திற்கான இணைய தள லிங்க் ஒன்றை கர்சர் இருக்கும் இடத்தில் அமைக்கும் வசதி தரப்படும்.
நீங்கள் இமேஜ் தேர்ந்தெடுத்த பின்னர் Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன் ஜிமெயில் உங்கள் இமெயிலில் கர்சர் இருக்கும் இடத்தில் படத்தை ஒட்டும். படம் ஒட்டப்பட்டதனை நீங்கள் பார்க்கலாம். இந்த படத்தின் முனைகளில் காட்டப்படும் ஹேண்டில்களைப் பயன் படுத்தி, அதன் அளவை மாற்றி அமைக்கலாம். அல்லது என நான்கு அளவுகளில் அமைக்க ஆப்ஷன் கிடைக்கும். தேவையான பிரிவில் கிளிக் செய்து படத்தினை அமைக்கலாம்.
ஆனால், இந்த படம் பதிக்கப்பட்ட இமெயிலினைப் பெறுபவர் பழைய இமெயில் கிளையண்ட் வைத்திருந்தால், படம் காட்டப்பட மாட்டாது. எச்.டி.எம்.எல். வழி பார்ப்பது இயக்கப் பட்டிருக்கும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில் மட்டுமே படம் காட்டப்படும். மற்றவற்றில் இது அட்டாச்மெண்ட் ஆக மட்டுமே இருக்கும்.

கேள்வி: இன்னொரு நாடு அல்லது நகரத்தில் அப்போதைய நேரம் உடனே தெரிய வேண்டும் என்றால், சுருக்க வழி இணையத்தில் உள்ளதா? விளக்கவும்.
-சா. நீதி ராஜன், கம்பம்.
பதில்: இதற்கெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை. கூகுள் சர்ச் தளம் செல்லுங்கள். அதன் தேடல் கட்டத்தில் What time is it in என்று டைப் செய்து தொடர்ந்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் ஊரின் பெயரை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக டோக்யோ நகரில் அப்போது நேரம் என்ன என்று அறிய What time is it in Tokyo என்று டைப் செய்திடவும். உடனே உங்களுக்கு நேரம் என்ன என்று காட்டப்படும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் 3.6 பயன்படுத்தி வருகிறேன். பல வேளைகளில் டவுண்லோட் செய்திட்ட புரோகிராம் எங்கு சேவ் செய்யப் பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் டவுண்லோட் விண்டோ கிடைக்கிறது. எந்த ட்ரைவில் போல்டரில் உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது?
-க.லீலா ராணி, மதுரை.
பதில்: Tool>Downloads எனச் செல்லவும். பின்னர், டவுண்லோட் செய்யப்பட்ட எந்த புரோகிராம் குறித்து அறிய வேண்டுமோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Open Containing Folder என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து நீங்கள் அந்த பைல் எந்த போல்டரில் உள்ளதோ, அங்கு நிற்பீர்கள்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கை யில், நாம் தனியே எடுத்துக் காட்ட விரும்பும் சொற்களை ஹைலைட் செய்து தனிக் கலரில் காட்டலாம் என்று சொல்கின்றனர். இதனை எப்படி செயல்படுத்துவது?
-டி.சொக்கலிங்கம், திருமங்கலம்.
பதில்: நீங்கள் தயாரித்துள்ள வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். திரையின் மேலாக உள்ள மெனு பாரில், ab என்ற சிறிய எழுத்துக்களுடன் உள்ள ஒரு பகுதியைப் பார்க்கலாம். இதுதான் ஹைலைட்டிங் டூல். இதன் ஒரு பக்கத்தில் அம்புக் குறி ஒன்று தலைகீழாகக் காணப்படும். இதில் கிளிக் செய்தால், ஹைலைட் செய்வதற்குரிய வண்ணத் தினைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் கிளிக் செய்தவுடன் ஹைலைட்டர் பேனா போல ஒரு கர்சர் கிடைக்கும். இது கூடுதல் கர்சராகும்.
வழக்கமான கர்சரும் அதன் இடத்தில் இருக்கும். இப்போது ஹைலைட் கர்சரைக் கொண்டு, எந்த சொற்களை ஹைலைட் செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அவை ஹைலைட் செய்யப்படும். இந்த ஹைலைட் டூலை ஆப் செய்திட, எஸ்கேப் கீ அழுத்தலாம். அல்லது ab கட்டத்தில் மீண்டும் கிளிக் செய்திடலாம்.
ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் திரையில் தோன்றும் காட்சியில் மட்டும் இருக்காது. இந்த டாகுமெண்ட் டை அச்சடிக்கக் கொடுத்தால், உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால், இதே கலரில் சொற்கள் ஹைலைட் செய்யப்பட்டு அச்சாகும். கருப்பு வண்ண பிரிண்டர் எனில், ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் கிரே கலரில் வெளிறிப் போய் இருக்கும். எனவே நீங்கள் கருப்பு வெள்ளை பிரிண்டரைப் பயன் படுத்துவதாக இருந்தால், இந்த ஹைலைட் செய்த பகுதிகளை நீக்கிவிடுவது நல்லது. இதற்கு ஹைலைட் செய்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, முன்பு சொல்லப்பட்ட அந்த ab கட்டத்தில் கிளிக் செய்தால் போதும்.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் சில பிரச்னைகளைச் சந்தித்த போது, என் நண்பர், அதனை சேப் மோடில் இயக்கிப் பார்க்கச் சொன்னார். சிஸ்டத்தினை சேப் மோடில் இயக்கலாம். ஒரு புரோகிராமினை எப்படி சேப் மோடில் இயக்குவது?
-திலகராஜ், சாத்தூர்.
பதில்: ஒரு தனி புரோகிராமினை சேப் மோடில் இயக்கலாம். சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் புரோகிராமினை இயங்க வைக்க இதுவும் ஒரு வழிதான். Start மெனுவில் இருந்து Run ஆப்ஷன் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் ரன் டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த பாக்ஸில் எக்ஸெல் புரோகிராம் உள்ள இடத்திற்கான வழி காட்டப்பட வேண்டும். இதனையே path எனக் கூறுவார்கள். எடுத்துக்காட்டாக, இது கீழ்க்கண்டவாறு அமையலாம். “c:\program files\ microsoftoffice \office\excel.exe” /s இதில் மேலே காட்டியுள்ளபடி வழியை அடுத்து /s என்ற ஸ்விட்ச் சேர்க்கப்பட வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். எக்ஸெல் பல கோப்புகளை விலக்கி இயங்கத் தொடங்கும். “Safe Mode” என்ற சொற்கள் டைட்டில் பாரில் காட்டப்படும். வழக்கமாக, எக்ஸெல் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். அதனை மூடி மீண்டும் திறக்கையில் வழக்கமாக அது திறக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X