மகிழ்வான வேட்டைக்காரர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
00:00

வேற வேற வேற வேட்டைக்காரன்!
சிலந்திகளின் பல வகைகள், தன் இரையை பிரத்யேக இழையின் உதவியின்றியே பிடிக்கும். அப்படிப்பட்ட சிலந்திகள் வேட்டைக்கார சிலந்திகள் எனப்படும். இவற்றில் சிலவோ தன்னுடைய பகுதியை காவல் காக்கும். ஏதாவது பூச்சி சிக்காதா என காத்து கிடக்கும். வலை பின்னும் சிலந்திகளை விட இந்த வேட்டைக்கார சிலந்திகளுக்கு வலிமைமிக்க தாவும் கால்களும், மிக கூர்மையான பார்வையும் உண்டு. இவற்றின் உதவியால் தன் இரையை எளிதில் அடையாளம் காணும்.
ஒரு வேட்டைக்கார சிலந்திக்கு அதன் தலையின் முன்புறம் எட்டு கண்கள் இருக்கும். இக்கண்கள் மிகச் சிறியது. அதனால் மிக அரிதாகவே சிலந்தி திரும்ப வேண்டி இருக்கும். அந்தளவுக்கு இந்த எட்டு கண்கள் உதவுகின்றது.
இது உலகின் மிகப் பெரிய வேட்டைக்கார சிலந்தி வகைகளில் ஒன்றான "சிலியன் சிவப்புகால் சிலந்தி'. காலிலிருந்து காலிற்கான இடைவெளி 13 செ.மீட்டர். இரவில் வேட்டையாடும் இவைகளில் இரை லிஸ்ட்டில் சிறிய பறவைகளும் சுண்டெலி களும் உண்டு.
சிலந்தி உடலில் உள்ள முடிகள் சிறந்த உணர்வுள்ளவை. மிக நுண்ணிய இரையின் அசைவை கூட உணரக் கூடியவை.
வளையை தோண்ட மிக வலிமையான கால்கள் உள்ளது.

வளை வாசலிலேயே மம்மு!
இதுதான் அடிமர கண்ணி கதவு சிலந்தி. அடிமரத்தில் வசிக்கும். தன் வளையின் முன் கண்ணி கதவு அமைத்து இரையை தந்திரமாக பிடிப்பதால், "இவ்ளோ' நீட்டு பெயர். இந்த சிலந்திக்கு தன் மிக வலிமையான தாடை எலும்பால் பாதுகாப்பான வளை தோண்டுவதோடு, அந்த வளையின் முன் இரைக்கான கண்ணி கதவையும் ஏற்படுத்திவிடும். இங்கே படத்தில் பாருங்கள். பொறி கதவை! பார்க்க முடியாதபடி மறைந்து பொறி கதவை பார்த்தபடி சிலந்தி காத்திருக்கும். பொறி கதவருகே வரும் இரையை ஊர்ந்து சென்று பிடிக்கும்.

தாவிக்கொண்டே அளப்பேன்
வேட்டைக்கார சிலந்திகளுக்கு நல்ல கண் பார்வை வேண்டும். அப்போதுதானே தன் இரையை தேடி, துரத்தி பிடிக்க முடியும். இதன் கண் பார்வை எந்த அளவு துல்லியமாக இருக்கு மென்றால் இந்த சிலந்தி ஒடி கொண்டே இரையை தாவும் தொலைவையும் கிரகித்து விடும்.

ரெடி ஸ்டார்ட் கோ கேட்ச்!
ஓநாய் சிலந்தி பகலில் வேட்டையாடும். இதோ இது ஆஸ்திரேலிய ஓநாய் சிலந்தி. தன் இரையை கண்டவுடன் மிக விரைவாக ஓடி பிடிக்க, தன் பட்டு இழைகளால் அமைக்கப்பட்ட வளையின் முன் காத்திருக்கிறது.

சாப்பிடணும்னா துப்பு!
துப்பும், உமிழும் சிலந்திகள் பசிக்கும்போது உமிழும். இரையை பார்த்தவுடன் தன் ஒவ்வொரு பல்லிலிருந்தும் அருவியாய் உமிழும். இது இரை மேல் பசை போல் ஒட்டி சிலந்தி வந்து இரையை பிடிக்கும் வரை தப்ப விடாமல் செய்து விடுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X