ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
00:00

கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு, பயர்பாக்ஸ் நிறுவனத்தின் பழைய தொகுப்புகளுக்கு உதவி நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள், தொழில் நுட்ப உலகில் தேவையான வையாகும். என்னதான் வாடிக்கையாளர்கள் எஜமானர்களாக இருந்தாலும், நவீன தொழில் நுட்பத்திற்கு முன்னேறுகையில், இது போன்ற அதிரடிகள் தேவை தான்.
-டாக்டர் எஸ். ரவி மோகன், சென்னை.

130 ஆண்டுகளாக குவெர்ட்டி எனப்படும் ஒரே கீ போர்டினையே உலகெங்கும் பயன்படுத்தி வருகிறோம் என்ற செய்தி மிகவும் வியப்பாக இருக்கிறதே. பழகியதை மாற்ற, அதன் இடத்தில் புதியதை நிரப்ப யாருக்குமே மனதில்லை.
-சா. ஞானமணி, நிர்வாக அதிகாரி, திருப்பூர்.

நீங்கள் தந்த இ-புக் நூலகம் சென்று பதிந்து, நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தினேன். எனக்கு இதுவரை ஐந்து நூல்கள் டவுண்லோட் செய்திட அனுமதி கிடைத்துள்ளது. நூல்கள் சொல்லும் விஷயங்களும் முன்னேற்றத்திற்கானவை. நண்பர்களின் நன்றி மனதிற்கு நிறைவு. இத்தனையும் தந்த தினமலருக்கு கோடி புண்ணியம்.
-கா.விஸ்வநாதன், கோவை.

சீரியல் நம்பர் கவனம் என்ற கட்டுரை, சரியான நேர சவுக்கடி. நம்மில் பலர், வாரண்டி கார்ட், மொபைல் தனி எண், ஒரிஜினல் ட்ரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை மறந்து விடுகிறோம். நினைவு படுத்தியமைக்கு நன்றி.
-உ.மஹாராஜன், திருப்பூர்.

இணைய தளம் முடங்கிப் போவதற்கான காரணங்கள் மிகவும் புதியனவாக இருந்தன. நேரம் தேதி சரியில்லை என்றால் கூட முடங்கிப் போகலாம் என்பது புதிய செய்தி. என்னதான் அதிக ஆண்டுகள் பரிச்சயம் இருந்தாலும், கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை எத்தனையோ அறியாத தகவல்கள் உள்ளன என்பதை இந்தக் கட்டுரை காட்டியுள்ளது.
-பேரா. செல்வகுமார், மதுரை.

டாகுமெண்ட்களைக் கையாள்வதில் புதிய நடைமுறையைத் தரும் வகையில், மாற்றங்களைப் பாதுகாக்கும் வழியைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
-சி. கண்ணதாசன், திண்டுக்கல்.

நெட் பேங்கிங் பயன்பாடு வளர்வது இருக்கட்டும். எந்த நேரத்தில் நம் பணத்தை வேறு யாராவது எடுத்து விடுவார்களோ என்ற பயம் உள்ளதே. இதனை முழுமையாக நீக்கினால், அல்லது தொலைந்து போன நிலையில், முழுமையான ஈடு செய்யப்படும் என்ற உத்தரவாதம் கிடைத்தால், வீட்டில் இருந்து கொண்டே அனைவரும் வங்கிப் பணிகளை மேற்கொள்ள்லாம்.
-எஸ். உஷா ராணி, வங்கி ஊழியர், சென்னை.

இன்டர்நெட்டில் ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக, தமிழ்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று வெட்டியாக அறிக்கை களைச் சந்தித்த நிலையில், உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறீர்கள். இனிமேலாவது நம் மொழியை இணையத்தில் அதிகம் பயன் படுத்துவோம். தமிழ் விக்கி பீடியா போன்றவற்றில் தமிழில் அறிவியல் கட்டுரைகளைப் படைப்போம், பதிப்போம்.
-முனைவர் சாலமோன், காரைக்கால்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X