இந்த வார இணையதளம் டிஜிட்டல் நன்னெறிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
00:00

இமெயில், பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்கள், மொபைல் போன்கள், வீடியோ அழைப்புகள், அரட்டை கட்டங்கள், வலை மனைகள், தகவல்களுக்கான பதில்கள், டெக்ஸ்ட் குறிப்புகள் என நம் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் டிஜிட்டல் அம்சங்கள் கொண்டதாய் நிறைந்து இயங்குகின்றன. இந்த புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளும் பலர் இதில் எப்படி இயங்க வேண்டும் என அறியாமல் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பேஸ்புக் ஒன்றில், நம்மை ஒரு நண்பர் என்னுடன் தோழனாக இரு என்று அழைக்கிறார். இந்த அழைப்பினை ஏற்றுக் கொள்வதா? அல்லது புறக்கணிப்பதா என்று தெரிய வில்லை.
ஒரு போன் அழைப்பு பேசிக் கொண்டிருக்கையில் இணைப்பு அறுந்து போனால், யார் மீண்டும் அழைப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. நமக்கு வந்திருக்கும் மிஸ்டு கால் அனைத்தையும் நாம் அவற்றைப் பார்க்கையில் அழைக்க வேண்டுமா? என்பது ஒரு பெரிய மனப்போராட்டம். அழும் குழந்தையை கொண்டு வந்திருக்கும் ஒருவர், மற்றவர்கள் போனில் பேசுவதற்காக, குழந்தையை வெளியே அழைத்துச் செல்ல வேண்டுமா? அல்லது மற்றவர்கள் போனை அணைத்து வைக்க வேண்டுமா? யார் அரட்டைக்கு அழைத்துப் பேசினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும், நேற்று வாங்கிய சட்டை குறித்த தகவல் உட்பட, தர வேண்டுமா? வீடியோ அழைப்பில் இருக்கையில் மற்றவர்களைப் போட்டோவாக எடுக்கலாமா? மொபைல் போனில் கேமரா இருப்பதனாலேயே அடுத்தவர்களை சரமாரியாக போட்டோ எடுக்கலாமா? அவ்வாறு எடுத்ததனை அவரின் அனுமதியின்றி அடுத்தவருக்குக் கொடுக்கலாமா?
இப்படி எத்தனையோ தடுமாறும் விஷயங்களை, சூழ்நிலைகளை நம் டிஜிட்டல் வாழ்க்கை நமக்குத் தந்துள்ளது. இவை குறித்த தீர்வுகளைத் தருகிறது http://eetiquette.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம். இதில் சென்றால், முகப்புப் பக்கத்தில், ஒரு சில விளக்கங்கல் உள்ளன. கீழாக, ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி பல சூழ்நிலைகளுக்கான தீர்வுகள் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.
இன்றைய சூழ்நிலையில், நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் உள்ளன. கட்டாயம் பார்த்து, தெரிந்து பழக வேண்டிய இணைய தளம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijayakumar - tiruppur,இந்தியா
21-ஆக-201106:04:17 IST Report Abuse
vijayakumar நன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.