வர்த்தக இணைய தளங்கள் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
00:00

கடந்த இரண்டு வாரங்களில், வர்த்தக இணைய தளங்களைக் குறி வைத்து மால்வேர் புரோகிராம் ஒன்று பரவி வருகிறது. வில்லிசி (Willysy) என அழைக்கப்படும் இந்த மால்வேர், வர்த்தக வகை இணைய தளங்களில் உள்ள ஓர் குறையைப் பயன்படுத்தித் தாக்குதலை நடத்துகிறது. இணைய தளங்களுக்குப் பாதுகாப்பு தரும், சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஆர்மரைஸ் (Armorize) என்னும் நிறுவனம் இந்த தாக்குதலைக் கண்டறிந்தது. ஜூலை 24 அன்று, இதனைக் காண்கையில் 90,000 வர்த்தக இணைய தளங்கள் பாதிக்கப் பட்டிருந்ததைக் கண்டது. மீண்டும் ஆகஸ்ட் 3 அன்று காண்கையில், இது 63 லட்சம் தளங்களாக இருந்தது.
இந்த மால்வேர் புரோகிராமினைத் தயாரித்து அனுப்பியது யாரெனக் குறிப் பிட்டு அறியமுடியாவிட்டாலும், இதனை அனுப்பியவர்கள் பயன்படுத்திய ஐ.பி. முகவரி உக்ரைன் நாட்டினைச் சேர்ந்தது என அறியப் பட்டுள்ளது.
வணிக இணைய தளங்களுக்கான ஓ.எஸ். காமர்ஸ் சிஸ்டத்தில் உள்ள குறையினை இந்த மால்வேர் பயன்படுத்துகிறது. கைப் பற்றிய தளப் பக்கத்தில், மோசமான ஜாவா ஸ்கிரிப்ட் குறியீட்டினை எழுதி வைக்கிறது. இதன் மூலம் அந்த தளங்களுக்கு வரும் வாடிக்கையாளர் களின் கம்ப்யூட்டருக் குப் பரவி தகவல்களைத் திருடுகிறது.
இந்த ஓ.எஸ். காமர்ஸ் என்னும் சிஸ்டம் ஓப்பன் சோர்ஸ் வகையைச் சேர்ந்தது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்கள் வணிக தளங்களுக்கு, அதிகக் கட்டணம் செலுத்தி ஓ.எஸ். வாங்க முடியவில்லை என்பதால், இந்த ஓப்பன் சோர்ஸ் சிஸ்டத் தினைப் பயன்படுத்து கின்றனர். அதனாலேயே இந்த வகை நிறுவனங்களின் வர்த்தக இணைய தளங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன என்று ஆர்மனைஸ் அறிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.