20 வயதான வேர்ல்ட் வேட் வெப்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
00:00

வைய விரி வலை (World Wide Web) என அழைக்கப்படும் இன்டர்நெட் வழிமுறைக்குச் சென்ற வாரம் இருபதாவது ஆண்டுவிழா. இணையம் என்ற இன்டர்நெட் இதற்கும் முந்தை யதாகும். தகவல்களைத் தாங்கிப் பரிமாறிக் கொள்ளும் சர்வர்களின் கட்டமைப்பும் மற்றும் அவற்றின் வழிகளும் இன்டர்நெட் – Internet என அழைக்கப்படுகின்றன. இதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வடிவமைக் கப்பட்ட ஒரு வழிமுறை (Protocol) தான் வைய விரிவலை.
இதனை உருவாக்கியவர் டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர். டாகுமெண்ட்களை ஒன்றுடன் ஒன்றினை இணைக்கும் ஹைப்பர் லிங்க் எனப்படும் சிஸ்டத்தை உருவாக்கி, அதனை ஒரு பிரவுசர் வழியாகக் காணும் வழிமுறை யை இவர் உருவாக்கித் தந்தார். ஏற்கனவே வேறு வழிமுறைகளில் இயங்கிக் கொண்டிருந்த இணையத் தினை அதனுடன் வெற்றிகரமாக இணைத்து செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் எளிதாகவும், வெற்றி கரமாகவும் டாகுமெண்ட் மற்றும் படங்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது பெரும் வழக்கில் பயன்படுத்தப்படும் எச்.டி.டி.பி. மற்றும் எச்.டி.எம்.எல். (HTTPHypertext Transfer Protocol, HTML Hypertext Markup Language) வழங்கு முறை தொழில் நுட்பங்கள் இதில் உருவானவையே.
தான் உருவாக்கிய இந்த வழிமுறை இருபது ஆண்டுகளையும் கடந்து பழக்கத்தில் உள்ளது குறித்து டிம் பெர்னர்ஸ் லீ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஓய்வாக இருக்கும் போது, இது குறித்துக் கூறுகையில், இந்த வழிமுறையை இன்னும் எளிமையாக, குறிப்பாக இரு முன்கோடுகள் (//forward slash) இல்லாமல் உருவாக்கி இருக்கலாம். ஆனால் அப்போது அது எனக்கு தோன்றவில்லை. இனி அதனை மாற்றுவது கஷ்டம் என்று குறிப்பிட்டார்.
பிரிட்டனைச் சேர்ந்த லீ, இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் விஞ்ஞானியாக இன்றும் செயல்பட்டு வருகிறார். வைய விரிவலை இயக்கத் தினைக் கண்காணிக்கும் மையத்தின் (world wide web consortium (W3C)) தலைவராகச் செயல்படுகிறார். 2003 ஆம் ஆண்டில், மனித சமுதாய முன்னேற்றத் தில் இவரின் பங்கினைப் பாராட்டி, இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.
இன்று, இந்த வைய விரி வலையினை மேம்படுத்த வேண்டும், கூடுதல் வேகத்துடன் செயல்படுத்த வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே இருக்கிறது. ஆனால், இதன் இடத்தில் இன்னொரு தொழில் நுட்பம் வர முடியாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனைக் கட்டாயமாக மாற்றியே ஆக வேண்டும் என்ற கால கட்டம் தோன்றும் வரை வேர்ல்ட் வைட் வெப் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கும்.
இந்த தொழில் நுட்பத்தினைத் தந்த டிம் பெர்னர்ஸ் லீ யை நாமும் வாழ்த்துவோம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.