ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
00:00

மூளைக்கென்று தனி வயதா என்று ஆச்சரியத்தோடு நீங்கள் குறிப்பிட்ட இணைய தளம் சென்று பார்த்த போது, வேடிக்கையாகவும், விபரமாகவும் நம் அறிவுத் திறனை அந்த தளம் சோதனை செய்தது விந்தையாக இருந்தது.
-எம். பால்ராஜ், மதுரை.

வீட்டில் இருக்கின்ற அண்ணன் அல்லது அப்பா கண்டிப்பது போல இருந்தது நீங்கள் எழுதிய பழக்கத்தை மாற்றுங்கள் என்ற கட்டுரை. என்ன தான் அட்வைஸ் செய்தாலும், நாம் சில பழக்க வழக்கங்களை மாற்ற தயங்குகிறோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இது இழப்பைத் தரும் என சுட்டிக் காட்டியது மிக நன்று.
-கா. செல்வராஜ், திருப்பூர்.

ஜிமெயில் தரும் எந்த வசதியும் நமக்கு லாபம் தான் -- அதுவும் இலவசமாகக் கிடைக்கிறதே. நீங்கள் சுட்டிக் காட்டி யுள்ளதற்கும் மேலாகவே உள்ள வசதிகளை, வாரந்தோறும் பட்டியலிடவும்.
-எஸ். திருமலை, தாம்பரம்.

சிடி குறித்து நீங்கள் தந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ள பழைய விஷயங்களும், முன்னேறி வரும் பயன்பாடும் நல்ல படிப்பினையைத் தருகின்றன. மாற்றங்கள் கம்ப்யூட்டர் உலகில் அதிக வேகத்தில் வருகின்றன என்று காட்டியுள்ளீர்கள்.
-எம். ஷைலஜா, சென்னை.

ரூட்கிட் வைரஸ் கட்டுரை படித்த பின்னர், என் கம்ப்யூட்டரிலும் அது உள்ளதோ என்ற அச்சம் என் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதனாலேயே மிக எச்சரிக்கையுடன் இன்டர்நெட் சென்று வருகிறேன்.
-சா. உதயராஜ், விருதுநகர்.

இந்தியாவில் கூகுள் மக்களின் சிறந்த தோழனாக, உலக அளவில் பயன்பாட்டில் முதல் இடத்தில் உள்ளது என்ற செய்தி, கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் எப்படி முன்னேறி வந்திருக்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடியாகும்.
-கே.சையத் உசேன், உத்தமபாளையம்.

இன்ஸெர்ட் கீ குறித்த விரிவான தகவல் கள், பயனின்றி எதுவும் கம்ப்யூட்டர் உலகத்தில் இருக்காது என்பதனை உறுதிப் படுத்தியுள்ளது.
-எம். மஹேஸ்வரன், உசிலம்பட்டி.

பி நோட்ஸ் இயங்கும் விதம், அளிக்கும் கூடுதல் வசதிகள் சூப்பராக உள்ளது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
-சி. கோபு, கோவை.

ஆன் லைன் இ புக் நூலகம் குறித்து நீங்கள் தந்த முகவரி மூலம் சென்று பதிந்து கொண்டேன். என் அறுபது நண்பர் களுக்குத் தெரிவித்தேன். அவர்களால், இன்று நான் பதினொன்று நூல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது. இவற்றை சிடியில் பதிந்து கேட்பவர் களுக்குக் கொடுத்து வருகிறேன். தங்கள் சேவைக்கு நன்றி.
-சி. திலகவதி, மதுரை.

சின்ன சின்ன பிட்டாகப் பக்கங்களில் காட்டப்படும் தகவல்கள் ஆர்வம் ஊட்டும் விஷயங்களாக இருக்கின்றன.
-கா. சுப்பிரமணியன், மேலூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.