கம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி ?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

பல வாசகர்கள் வெப் கேமரா, டிஜிட்டல் கேமரா, மொபைல் போன்கள் போன்ற துணை சாதனங்கள் வாங்கியபின் அவற்றை எப்படி இணைத்துப் பயன்படுத்துவது என்று போன் மற்றும் கடிதங்கள் மூலம் கேட்டு பதில் பெறுகின்றனர். அண்மையில் ஒரு வாசகர் பிளாஷ் ட்ரைவ் வாங்கியதாகவும் அதனை எப்படி இணைத்து பயன்படுத்துவது என்று கேட்டிருந்தார். அவர் எழுதிய கடிதத்திலிருந்து அவர் பென் ட்ரைவ் வாங்கியதில் பெற்ற உற்சாகத்தை உணர முடிந்தது. அவருக்கு மட்டுமின்றி இந்த வகையில் புதிய அனுபவம் பெறும் மற்றவர்களுக்கும் இந்த குறிப்புகளைத் தருகிறேன்.

முதலில் உங்கள் டெஸ்க் டாப் சென்று அதில் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடவும். அந்த போல்டர் திறந்தவுடன் அப்படியே அதனை விட்டுவிட்டு அடுத்த ஸ்டெப் செல்லவும். அடுத்தபடியாக பிளாஷ் டிரைவிற்கான யு.எஸ்.பி. போர்ட்டில் ட்ரைவினைச் செருகவும். நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் பிளாஷ் ட்ரைவினை இயக்க அதற்கான ட்ரைவர் எதனையும் இயக்கிச் சேர்க்க வேண்டியதில்லை. ட்ரைவினைச் செருகிவிட்டு திரையைப் பார்க்கவும். உங்கள் கம்ப்யூட்டர் புதிய பிளாஷ் ட்ரைவினைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதாக ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தி பெரும்பாலும் திரையின் வலது புறம் கீழாகக் காட்டப்படும். "Found New Hardware" என்ற செய்தி கிடைக்கும். இனி மை கம்ப்யூட்டர் விண்டோவிற்குச் சென்று அங்கே பார்த்தால் ஒரு புதிய ட்ரைவ் ஒன்றின் எழுத்து இணைக்கப்பட்டு அதில் "Removable"   என்ற சொல் இருக்கும். இந்த ட்ரைவ் எழுத்து கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் ஏற்கனவே உள்ள ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷனுக்கேற்ற வகையில் வேறுபடும். இந்த ட்ரைவினைக் கண்டுபிடித்து அதில் கிளிக் செய்திடவும். இந்த ட்ரைவிற்கான விண்டோ திறக்கப்பட்டு காலியாகத் தெரியும். பயப்பட வேண்டாம். உங்கள் பிளாஷ் ட்ரைவ் புதியதுதானே. அதில் தான் எதுவும் பைல் இல்லையே. அடுத்து இதில் பைல்களை சேவ் செய்திட விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் இன்னொரு விண்டோ திறந்து பைல்களை தேர்ந்தெடுத்து அப்படியே இழுத்து வந்து பிளாஷ் ட்ரைவ் விண்டோவில் விட்டுவிடலாம். அதே போல பின்னொரு நாளில் இதிலிருந்தும் பைல்களைத் தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் விட்டுவிடலாம். வேலை முடிந்த பின் சிஸ்டத்திலிருந்து எடுத்துவிடலாம். உங்களுடைய பிளாஷ் ட்ரைவில் மூடி தனியே எடுக்கப்படக் கூடியதாக இருந்தால் அதனைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து கம்ப்யூட்டரிலிருந்து எடுத்த பின் மூடி வைக்கவும். சில பிளாஷ் ட்ரைவ்களில் அதன் பின்புறத்தில் செருகி வைத்துப் பயன்படுத்தும் படி இருக்கும். சில பிளாஷ் ட்ரைவில் ஸ்லைடர் வசதி தரப்பட்டிருக்கும். மேலாக உள்ள பிளாஸ்டிக் பகுதியைத் தள்ளினால் பிளாஷ் ட்ரை வ் சற்று வெளியே நீட்டிப் பார்க்கும். அதனைச் செருகிப் பயன்படுத்தலாம்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.