கேள்வி-பதில்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

கேள்வி: டாகுமெண்ட் தயாரிப்பில் ஈடுபடுகையில், அவ்வப்போது அவை தாமாகவே சேவ் செய்யப்படும் வழியை உருவாக்க முடியுமா? என்னிடம் யு.பி.எஸ். இல்லை. –சி. நாகேந்திரன், அய்யம்பாளையம்


பதில்: மின்சார சப்ளை இல்லாமல், கம்ப்யூட்டர் நின்று போகும் நிலையில், நாமாக இறுதியாக சேவ் செய்த நிலையில் தான், டாகுமெண்ட்கள் கிடைக்கும். கண்ட்ரோல் + எஸ் அழுத்தி சேவ் செய்திட்டால் இதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் டாகுமெண்ட் களைத் தயாரிக்கும் சுவராஸ்யத்தில் இதனை மறந்து போகிறோம்.  இது போன்ற சம்பவங்களிலிருந்து டாகுமெண்ட்டைக் காப்பாற்ற வேர்ட் தானாக சேவ் செய்திடும் வழி ஒன்றினைக் கொண்டுள்ளது. இதனை செட் செய்திட  Tools, Options  சென்று  Save டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பார்க்கவும். ‘ ‘Save AutoRecover info every’  என்னும் ஆப்ஷனுக்கு எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதை உறுதி செய்திடவும். அதற்கு எதிராக ‘minutes’ என்னும் பாக்ஸ் இருப்பதைப் பார்க்கலாம். அதில் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட் சேவ் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனை டைப் செய்திடவும். இதற்கு அதனுடன் தரப்பட்டிருக்கும் மேல் மற்றும் கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தவும் செய்யலாம்.கேள்வி: மானிட்டர் திரையில் தோன்றும் வெவ்வேறு பார்களைப் பற்றி சுருக்கமாக விளக்கவும். ஒன்றுக்கொன்று குழப்பமாக உள்ளது. –ஆர். சுதாராணி, காட்டுமன்னார்கோவில்

பதில்: இதில் என்ன குழப்பம்? அடிக்கடி அனைத்தையும் பயன்படுத்தி வந்தால் பிரச்னையே இல்லை. உங்கள் மானிட்டர் திரையில் கீழாக நீளமாக நீலம் அல்லது சாம்பல் வண்ணத்தில் அமைந்துள்ளதுதான் டாஸ்க் பார். பொதுவாக இது கீழாகத்தான் அமைந்திருக்கும். இதனை திரையின் எந்தப் பக்கத்திலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதில் ஸ்டார்ட் பட்டன், சிஸ்டம் ட்ரே எனப் பல பிரிவுகளைக் காணலாம். இங்குதான் புரோகிராம் பட்டன்கள் அமர்கின்றன. இதில் ஸ்டார்ட் பட்டனுக்கு அடுத்து குயிக் லாஞ்ச் டூல் பார் அமைகிறது. உடனடியாக புரோகிராம்களை ஒரே கிளிக்கில் இங்கு உள்ள ஐகான்களைக் கிளிக் செய்து பெற முடியும். அதனைத் தொடர்ந்தோ அல்லது கீழாகவோ நீங்கள் திறந்து இயக்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் டேப்கள் காட்டப்படும். வலது ஓரமாக இருப்பது சிஸ்டம் ட்ரே. இங்கு வால்யூம் ஐகான், நேரம், மற்றும் நீங்களாக செட் செய்த புரோகிராம்களின் ஐகான்கள் இடம் பெறும். இதற்கு மாறாக டூல் பார் என்பது புரோகிராம்களுக்குத் துணை புரியும் ஐகான்கள் கொண்ட சிறிய ஸ்ட்ரிப் ஆகும். இப்போதெல்லாம் இந்த டூல்பார்களில் எவை எவை வேண்டும் என நீங்கள் தீர்மானித்து மற்றவற்றைத் திரையில் தோன்றாமல் செய்துவிடலாம். அதே போல இந்த ஐகான்கள் அடங்கிய ஸ்ட்ரிப்பினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று மற்ற டூல்பார்களுடன் ஒட்ட வைக்கலாம்.கேள்வி: கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது, தானாக இயக்கப்படும் புரோகிராம்களை அறிய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எழுதி இருந்தீர்கள். எனக்குச் சில பிரச்னைகள் உள்ளன. மீண்டும் அதனைத் தர் முடியுமா? –அ.மா. தேன்மொழி, காரைக்குடி, –சே. கமலேஷ் குமார், கோயம்புத்தூர்

பதில்: கம்ப்யூட்டர் மலரில் படித்தவுடன், அதனை நினைவு வைத்துக் கொள்ளும் வகையில் பதிந்து வைக்காமல் பலர், முன்பு எழுதியதனைக் கேட்கிறார்கள். அவற்றில் இந்த வேண்டுகோளும் ஒன்று. இது சற்று முக்கியமானதால் மீண்டும் தருகிறேன். சிஸ்டத்தில் இதனை செட் செய்திட முடியாது. இணையத்தில் கிடைக்கும் ஙிடச்tஐணகுtச்ணூtதணீ என்ற இலவச புரோகிராம் இதற்கானத் தீர்வினைத் தருகிறது. இதனை  http://www.nirsoft.net/utils/what_run_in_startup.html  என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து, ஸிப் பைலாகக் கிடைப்பதால், விரித்துப் பதிந்து, பின் இயக்கவும். ஸ்டார்ட் அப் நடக்கும்போது உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் புரோகிராம்கள், அவற்றின் தன்மை, கட்டளைச் சொற்கள், புரோகிராமின் பெயர், பைல் உருவாக்கப்பட்ட நாள், மாற்றம் ஏற்படுத்தப்பட்ட நாள், அந்த புரோகிராம் குறித்து ரெஜிஸ்ட்ரியில் உள்ள வரிகள் ஆகியவை காட்டப்படுகின்றன. இவற்றில் எது தேவையற்றவையோ, அவற்றை நீக்கிடலாம். அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். நீங்கள் அழித்த பின்னரும் மீண்டும் ஒரு பைல் இயக்கப்படுகிறது என்றால், அதனை இந்த பயன்பாட்டின் மூலம் நீக்கிவிடலாம். இந்த புரோகிராமின் சிறப்பு, இதனை ஒரு யு.எஸ்.பியில் வைத்து இயக்கலாம். இதற்கான வழிமுறைகளை மேலே காட்டியுள்ள இணைய தளத்திலிருந்து பெறுங்கள்.


கேள்வி: நான் ரிலையன்ஸ் நெட் கனெக்ட் யு.எஸ்.பி. ஸ்டிக் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வந்தேன். இப்போது அலுவலகத்தில் அதைக் காட்டிலும் வேகமாகப் பயன்படுத்தக் கூடிய ஸ்டிக் ஒன்று தந்துள்ளனர். இரண்டையும் பதிந்து பயன்படுத்த முடியுமா? –சி. மதிராணி, கடலூர்

பதில்: தாரளமாகப் பயன்படுத்தலாம். இரண்டிற்கும் வேறு வேறு ஐகான்கள் தரப்படும். எனவே எந்த ஐகானுக்கு எந்த இன்டர்நெட் ஸ்டிக் என்று சரியாகப் பொருத்தி இணைப்பு பெற்று பயன்படுத்தலாம். மாற்றிக் கொடுத்தால், பிரச்னை ஒன்றும் நேராது. குறிப்பிட்ட ஸ்டிக் கம்ப்யூட்டரில் இணைக்கப் படவில்லை என்ற செய்தி கிடைக்கும்.கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். அதன் ஹிஸ்டரி பட்டியலில் குறிப்பிட்ட நாட்கள், இணையத்தில் சென்ற தளங்கள் மட்டுமே காட்டப்படுகிறது. கூடுதலாகக் காட்டப்பட ஏதேனும் ஆட் ஆன் தொகுப்பு உள்ளதா? –டி. தன்ராஜ் சேவியர், புதுச்சேரி

பதில்: இதற்கு ஆட் ஆன் தொகுப்பு தேவையில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே இதற்கான செட்டிங்ஸை அமைத்துவிடலாம்.

1. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து "Tools"   கிளிக் செய்திடவும். இந்த பிரிவில் பின் “Oணீtடிணிணண்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


2.  "Options"   டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் அதில் "Privacy"   என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


3. இதில் உள்ள பிரிவுகளில் “ஏடிண்tணிணூதூ” என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு "Keep my history for at least"  என்ற பிரிவில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இங்கு எத்தனை நாட்கள் நீங்கள் பார்த்த வெப்சைட்கள் நினைவில் வைத்துக் காட்டப்பட வேண்டும் என்பதனை என்டர் செய்திடவும்.


4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் குறிப்பிட்ட நாட்களில் பார்த்த வெப்சைட் முகவரிகள் அனைத்தும் ஹிஸ்டரி பட்டியலில் காட்டப்படும்.கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரிக்கையில், அது தானாகவே, அடிக்கடி சேவ் செய்திடும் வகையில் அமைக்க என்ன செய்திட வேண்டும்? –எஸ். ராஜேஷ், மதுரை

பதில்: எக்ஸெல் தொகுப்பில் டிபால்ட்டாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தானாக சேவ் செய்திடும் வசதி தரப்படும். இப்போதெல்லம், கிடைக்கும் மின்சார சப்ளையும், யு.பி.எஸ். சாதனமும் காலை வாரிவிடுவதால், இது போன்ற கேள்விகள் நிறைய கிடைக்கின்றன. கவலைப்பட வேண்டாம். எக்ஸெல் தொகுப்பைத் திறந்து கொண்டு,  Options மெனு கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் Oணீtடிணிணண் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் குச்திஞு என்ற டேபில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில்  Save Auto recover in every என்று ஒரு வரியும் அதன் அருகே நிமிடங்களை செட் செய்திட எண்ணுடன் மேல் கீழ் அம்புக் குறிகளும் கிடைக்கும். இதில் 10 என்று இருப்பதை மாற்றுங்கள். எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை சேவ் செய்திட எண்ணுகிறீர்களோ அந்த எண்ணை அமைக்கவும். பின் அதன் கீழாக அதtணி ணூஞுஞிணிதிஞுணூ ண்ச்திஞு டூணிஞிச்tடிணிண என்று ஒரு வரியின் எதிரே எங்கு இந்த பைல் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனை காட்டும் கட்டம் இருக்கும். இங்கு நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேவ் செய்திடும் வகையில் மாற்றலாம். பின் ஓகே கொடுத்து வெளியேறவும்.கேள்வி: சர்ச் இஞ்சின்களில் கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் தவிர வெகுகாலமாக இயங்கி வரும், திறனுள்ள சர்ச் இஞ்சின் உள்ளதா? அதனைப் பயன்படுத்தலாமா? –டி. சாமிராஜ், திருவண்ணாமலை

பதில்: சர்ச் இஞ்சின்கள் நிறைய உள்ளன. நீங்கள் கேட்டபடி வெகுகாலமாக, இன்றைக்கும் சிறப்பாக இயங்கும் சர்ச் இஞ்சின் என்றால் கோபர்னிக் டெஸ்க் டாப் சர்ச் சாதனத்தைக் கூறலாம். இதன் சிறப்பு, பலவகையான அவுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், இடோரா, தண்டர்பேர்ட் போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களின் இமெயில்களையும் தேடிக் தேடல் விடைகளைக் கொடுப்பதுதான். அதிகமான எண்ணிக்கையில் ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை வகைப்படுத்துகிறது. இன்டர்நெட் பிரவுசர் தொகுப்புகளின் புக்மார்க், பேவரிட்ஸ் முகவரிகளையும் இன்டெக்ஸ் செய்கிறது. .doc, .pdf, .txt, rtf, .ppt  போன்ற வழக்கமான அனைத்து பைல்களையும் தன் கையாளும் திறனுக்குள் கொண்டு சென்று பட்டியலிடுகிறது. இந்த புரோகிராம் தேவைப்படுபவர்கள் அணுக வேண்டிய தள முகவரி:  http://www.copernic.com/en/products/desktopsearch/index.html 


கேள்வி: டெரா பைட் அளவிற்கு நம் டேட்டா அளவு கோல் சென்று விட்டது. மிகக் குறைந்த அளவு எது?  –ஆர். ஜெகதீஷ், திண்டிவனம்.


பதில்: ஒரு பிட் தான். இதனை 1 அல்லது 0 எனக் காட்டலாம். அடுத்து நான்கு பிட் சேர்ந்தது ஒரு நிப்பிள்  (Nybble). 8 பிட் சேர்ந்து ஒரு பைட்  (Byte BinarY digiT Eight  என்பதின் சுருக்கம்). எனவே நிப்பிள் என்பது அரை பைட். அதிக அளவு எப்படி அழைக்கப்படுகிறது என்று பார்க்கலாமா? யோட்டா பைட்  Yottabyte. . இது 10 டு த பவர் ஆப் 24. இதற்கு முந்தைய அளவு ஸெட்டா பைட் ஙூஞுttச்ஞதூtஞு. 1024 ஸெட்டா பைட்கள் சேர்ந்தது ஒரு யோட்டா பைட்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.