இதப்படிங்க
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

வெப்சைட்டில் ஏதேனும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று மவுஸின் வீலை அழுத்தினால் அந்த தளம் புதிய டேப்பில் திறக்கப்படும்.


ஒரு வெப்சைட் தளத்தை மூட CTRL+W   அழுத்தவும். அவ்வாறு மூடிய தளத்தை மீண்டும் உடனே பெற வேண்டுமாயின்  ctrl+Shft+T  கீகளை அழுத்தவும். வெப்சைட்டின் பக்கம் ஒரு திரையைத் தாண்டி கீழாகச் செல்கிறதா? கீழே சென்று பார்க்க வேண்டுமா? ஜஸ்ட் Space bar  தட்டவும். கீழே போன பின் மீண்டும் அப்பக்கத்தின் மேல் பகுதிக்குச் செல்ல வேண்டுமா?  shft + space bar தட்டவேண்டும்.


* இணைய முகவரி


இன்டர்நெட் தளப் பெயர்களில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் com, .org, .gov மற்றும்  mil  போன்ற சில மட்டுமே இருந்தன. பின்னர் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி பெயர் ஒட்டுகள் தரப்பட்டன. மற்ற வகைகளிலும் அதிகமான எண்ணிக்கையில் பெயர்கள் அனுமதிக்கப் பட்டன. இந்தியாவிற்கென  .in அனுமதிக்கப் பட்டது. இப்போது  in  க்குப் பதிலாக .bharat என்ற பெயர் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக, இந்தியாவின் ஏழு மாநில மொழிகளில் இது அனுமதிக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு இதற்கான அனுமதி கிடைக்கலாம். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வங்காளி, உருது மற்றும் குஜராத்தி மொழிகளில் பெயர்களை அமைக்க இந்திய அரசு கேட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் அனைத்து 22 மொழிகளிலும் அமைக்கும் வகையில் அனுமதி பெறப்படும் என தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கோவிந்த் தெரிவித்துள்ளார்.


* லொகேஷன் பாருக்கு கர்சரைக் கொண்டு சென்று வேறு சைட்டுகளின் முகவரியை அமைக்க வேண்டுமா? அல்லது வேறு தேடல்களை மேற்கொள்ள வேண்டுமா? கர்சரை அட்ரஸ் பார் அல்லது லொகேஷன் பாருக்குக் கொண்டு செல்ல  CTRL + L  அழுத்தவும். இதே போல சர்ச் பாக்ஸ் கொண்டு செல்ல  CTRL + K  அழுத்தவும். பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை ரெப்ரெஷ் செய்திட  CTRL + R  அழுத்தவும்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.