சாம்சங் அறிமுகப்படுத்திய மூன்று டூயல் சிம் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

தன்னுடைய மூன்று புதிய மொபைல் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது சாம்சங் நிறுவனம். இவை அனைத்தும் இரண்டு சிம் பயன்பாடு திறன் கொண்டவை. இவை Star II Duos, Metro DUOS மற்றும் Metro 3752 என அழைக்கப்படுகின்றன. இவற்றுடன் சாம்சங் நிறுவனத்திடம் 14 டூயல் சிம் போன்கள் விற்பனையில் உள்ளன.
Star II Duos: தொடுதிரை கொண்ட டூயல் சிம் போனாக இது உள்ளது. இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் கூடுதல் வசதிகளை நேரடியாகப் பெறும் வகையில் விட்ஜெட்டுகளும் இதில் தரப்பட்டுள்ளன. இதன் தொடுதிரை Touchwiz 3.0 interface தொழில் நுட்பம் கொண்டது. இதன் ஹோம் ஸ்கிரீனை விரிவுபடுத்தலாம். வழக்கமாக, ஸ்மார்ட் போன்களில் மட்டுமே காணப்படும் குயிக் பேனல் மற்றும் குயிக் டைப் இதில் தரப்பட்டுள்ளது.இசைப் பிரியர்களுக்கென SoundAlive என்னும் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பம், சாதாரண ஒலியை முப்பரிமாண ஒலியாக மாற்றித்தரும். மேலும் இதில் தரப்பட்டுள்ள என்னும் வசதி, இசைப் பாடலை எளிதாகத் தேடிப் பெற உதவுகிறது. 3.2 மெகா பிக்ஸெல் கேமரா, புளுடூத் 3.0., வை-பி இணைப்பு, 30 எம்பி நினைவகம், 16 ஜிபி வரை இதனை அதிகப்படுத்தும் வசதி, 1200 mAH திறன் கொண்ட பேட்டரி, புஷ் மெயில் ஆகியவற்றை இந்த மொபைல் போனின் சிறப்பு அம்சங்களாகக் குறிப்பிடலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.6,920.
Samsung Metro Duos / C3322 : இந்த மொபைலின் தோற்றம் எடுப்பாகவும் கம்பீரமாகவும் உள்ளது. மிகச் சிறப்பான முறையில் மீடியா வசதிகளைத் தேடுவோருக்கான மொபைல் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுக்கான நெட்வொர்க் இணைப்பு எளிதாக்கப்பட்டுள்ளது. யாஹூ, எம்.எஸ்.என்., ஜிடாக் மற்றும் பேஸ்புக் சேட் ஆகியவற்றிற் கான இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே திரை 5.6 செமீ; எட்ஜ், வாப், புளுடூத், யு.எஸ்.பி., எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 1000 mAH திறன் கொண்ட பேட்டரி ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த மொபைல் போன், டாட்டா டொகோமோ நிறுவனத்தின் இணைப்பில் இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.4,240.
Metro C3752: இது ஒரு ஸ்லைடர் போன். 3 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் டிஸ்பிளே திரை 6 செமீ அகலம் உள்ளது. இதன் பேட்டரி 900 mAH திறன் கொண்டது. மற்றபடி மேலே காட்டப் பட்டுள்ள போன்களின் திறன் அனைத்தும் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,270.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுரேஷ் - சென்னை,இந்தியா
09-செப்-201100:09:01 IST Report Abuse
சுரேஷ் ஒரு புதிய இணைய தளம் ஒன்று techhowknow புதியதாக திறந்து உள்ளார்கள் . அது எல்லாம் புதிய technology about computer servers இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X