பெர்சனல் கம்ப்யூட்டரின் 30 ஆண்டுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

அண்மையில், ஐ.பி.எம்.நிறுவனம் தன் ஐ.பி.எம். மாடல் 5150 பெர்சனல் கம்ப்யூட்டர் அறிமுகமாகி, 30 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடியது. இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கென வரவில்லை என்றாலும், அதன் பின்னர் வந்த பெர்சனல் கம்ப்யூட்டரையும், தொடர்ந்து வந்த காலங்களில் வடிவமைக் கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், இந்த 5150 மாடல் வழி நடத்தியது என்றால், அது மிகையாகாது.
ஐ.பி.எம். நிறுவனம், இந்த மாடலை அடுத்து வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தத் தினை மேற்கொண்டது. ஏனென்றால், தான் வடிவமைத்த கட்டமைப்பைப் பின்பற்றி, மற்ற நிறுவனங்களும் கம்ப்யூட்டர்களை உருவாக்க வேண்டும் என ஐ.பி.எம். எண்ணியது. இதன் விளைவுதான், உலக அளவில் பல நிறுவனங்கள் தோன்றி, பெர்சனல் கம்ப்யூட்டரின் பல மாடல்களைக் கொண்டு வந்ததாகும். இவற்றைத் தயாரிக்க இன்னும் பல நிறுவனங்கள் புதிதாய்த் தோன்றி வந்து கொண்டுள்ளன.
30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஐ.பி.எம். மாடல் 5150 பெர்ச்னல் கம்ப்யூட்டர் தான் இவை அனைத்திற்கும் காரணம் என்பதை நாம் இன்று நினைவு கூற வேண்டும். 1982ல் தான் முதல் காப்பியாக வடிவமைக்கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் வெளியாகி தொடர் புரட்சிக்கு வழி அமைத்தது. அடுத்து, 1990ல் இணையம் உருவாக்கப்பட்டு, தகவல் பரிமாற்றப் புரட்சியில் புதிய பரிணாமத்தினை ஏற்படுத்தி, உலகின் சிந்தனைப் போக்கினையே மாற்றியது. இப்போது, பெர்சனல் கம்ப்யூட்டரின் அடுத்த சந்ததி என்ற பெயரில், புதிய தொழில் நுட்பத்தில் பல கம்ப்யூட்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டு காலத்தில், பெர்சனல் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் ஏற்பட்ட சாதனை மைல் கற்களைக் காணலாம்.
ஜூன் 1977: ஆப்பிள் நிறுவனம் Apple II என்ற கம்ப்யூட்டரைக் கொண்டு வந்தது.
1979: வேர்ட்ஸ்டார் என்னும் சாப்ட்வேர் அறிமுகமாகி, வர்த்தக ரீதியாக வெற்றி கரமாக விற்பனை செய்யப்பட்ட முதல் வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் என்ற பெயரைப் பெற்றது.
ஜூலை, 1981: 50 ஆயிரம் டாலர் பணம் கொடுத்து, மைக்ரோசாப்ட் Q DOS என்னும் சாப்ட்வேர் தொகுப்பினை வாங்கியது. தொடர்ந்து எம்.எஸ்.டாஸ் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியானது.
ஆகஸ்ட், 1981: ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டர் 5150 வெளியாகி, பெர்சனல் கம்ப்யூட்டர் புரட்சிக்கு வித்திட்டது.
ஜனவரி,1983: காம்பேக் நிறுவனத்தின் முதல் போர்ட்டபிள் பெர்சனல் கம்ப்யூட்டர் வெளியானது.
ஜனவரி, 1984: ஒரு மவுஸ் மற்றும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் கொண்டு ஆப்பிள் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர் வெளியானது.
ஜூன், 1985: பிலிப்ஸ் நிறுவனம் காம்பேக்ட் டிஸ்க் என்ற சிடி ராம் வட்டை உருவாக்கியது. சோனியுடன் இணைந்து தயாரித்தது.
அக்டோபர், 1985: இன்டெல் நிறுவனம் டி386 என்னும் 32 பிட் ப்ராசசரை வெளியிட்டது.
நவம்பர், 1985: விண்டோஸ் 1.0 வெளியானது.
ஜனவரி, 1986: பிரெய்ன் என்ற பெயரில், முதல் பெர்சனல் கம்ப்யூட்டர் வைரஸ் வெளியானது.
நவம்பர், 1988:இன்டர்நெட் வழியே பரவிய முதல் வைரஸ் மோரிஸ் வந்தது.
நவம்பர், 1989: சவுண்ட் ப்ளாஸ்டர் என்னும் ஆடியோ கார்ட் வெளியாகி மிகப் பெரிய வர்த்தக ரீதியான வெற்றியைப் பெற்றது.
ஆகஸ்ட், 1991: லினக்ஸ் சிஸ்டம் பிறந்தது.
ஆகஸ்ட், 1991: டிம் பெர்னர்ஸ் லீ, வேர்ல்ட் வைட் வெப் கட்டமைப்பை வெளியிட்டார்.
ஏப்ரல், 1992: விண்டோஸ் 3.1 வெளி யானது.
மார்ச், 1993: முதல் பென்டியம் சிப் 66 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியவகையில் வெளியானது.
ஜூலை, 1993: 32 பிட் புரோகிராம்களுக்கு சப்போர்ட் செய்திடும் வகையில், Windows NT 3.1 வெளியானது.
மார்ச், 1994: இன்டெல் 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப்பினை வெளியிட்டது.
அக்டோபர், 1994: நேவிகேட்டர் (Navigator) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை நெட்ஸ்கேப் நிறுவனம் வெளியிட்டது.
ஆகஸ்ட், 1995: விண்டோஸ் 95, பல புதிய தொழில் நுட்பத்துடன் வெளியானது. இன்டர்நெட் இணைப்பிற்கு புதிய வழி தரப்பட்டது. ஸ்டார்ட் பட்டனுடன் விண்டோஸ் இயக்கம் கிடைத்தது.
ஜனவரி, 1996: கூகுள் நிறுவப்பட்டது.
ஜூலை, 1996: ஹாட் மெயில், இலவச இமெயில் சேவையினைத் தொடங்கியது.
மே, 1997: உலக செஸ் சாம்பியன் காஸ்பரோவ், ஐ.பி.எம்.நிறுவன டீப் ப்ளூ கம்ப்யூட்டரிடம் தோல்வி அடைந்தார்.
ஜூன், 1998: விண்டோஸ் 98 வெளியானது.
ஜூலை, 1999: மைக்ரோசாப்ட் இன்டெலி மவுஸ் வெளியாகி, வெற்றிகரமான முதல் ஆப்டிகல் மவுஸ் என்ற புகழைப் பெற்றது.
ஆகஸ்ட், 1999: பிளாக்கர் (Blogger) நிறுவனம் வலைமனை அமைக்கத் தேவையான புரோகிராம் களைத் தந்தது.
மார்ச், 2000: ஏ.எம்.டி. மற்றும் இன்டெல் நிறுவனங்கள், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப்களை வெளியிட்டன.
ஜனவரி, 2001: விக்கிபீடியா முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.
மார்ச், 2001: மேக் ஓ.எஸ்.எக்ஸ் சிஸ்டத்தினை ஆப்பிள் வெளியிட்டது. இன்றைய மேக் கம்ப்யூட்டர், ஐ-போன் மற்றும் ஐ-பேட் ஆகியவற்றின் இதயத் துடிப்பாக இதுவே உள்ளது.
அக்டோபர், 2001: ஐ-பாட் வெளியானது.
பிப்ரவரி, 2004: பேஸ்புக் தளம் செயல் பாட்டிற்கு வந்தது.
ஏப்ரல், 2004: ஒரு ஜிபி கொள்ளளவுடன், ஜிமெயில் பயன்பாட்டிற்கு வந்தது.
ஏப்ரல், 2005: முதல் வீடியோ கூகுள் யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்யப் பட்டது.
மே, 2006: முதல் முதலாக, டூயல் கோர் ப்ராசசர்கள் வெளியாகின.
ஜூன், 2007: ஒரிஜினல் ஐ-போன் வெளியானது.
ஜூன், 2009: விண்டோஸ் 7 வெளியாகி, முன்பு தவறவிட்ட இடத்தைப் பிடித்தது.
ஆகஸ்ட்,2011: பெர்சனல் கம்ப்யூட்டரின் வயது 30.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X