சோனியின் புதிய போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2011
00:00

சோனி நிறுவனம் சில மாதங்களுக்கு முன், 3ஜி மொபைலாக, எக்ஸ்பீரியா மினி ப்ரோ மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் தரும் வசதிகளுக்காகவும், விற்பனை விலைக்காகவும், இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. குவெர்ட்டி கீ போர்டு, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், மூன்று அங்குல தொடு திரை, எச்.டி. பார்மட்டில் வீடியோவினைப் பதிவு செய்திடும் 5 எம்பி திறன் கொண்ட கேமரா என அனைத்தும் உயர்நிலை வசதிகளாக அமைந்திருப்பது இந்த போனின் சிறப்பாகும். இதன் பரிமாணம் 92 x 53 x 18மிமீ. எடை 136 கிராம். கெபாசிடிவ் எல்.இ.டி. தொடுதிரையுடன் 3 அங்குல அகலத்தில், கீறல் விழாத திரை, அக்ஸிலரோமீட்டர் சென்சார் இயக்கம், மல்ட்டி டச் பாய்ண்ட், டைம்ஸ்கேப் யூசர் இன்டர்பேஸ் மற்றும் லவுட் ஸ்பீக்கர் எனப் பல அம்சங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. எத்தனை முகவரிகளையும் போட்டு வைத்திடும் அட்ரஸ் புக், போட்டோ வழி அழைப்பு, 512 எம்பி ராம் நினைவகம், 32 ஜிபி வரை நினைவகத்திறனை அதிகப்படுத்தும் வசதி, இணைப்பாக இரண்டு ஜிபி கார்ட், நெட்வொர்க் செயல்பாட்டிற்கு 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை–பி, A2DP இணைந்த புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், ஆட்டோ போகஸ், எல்.இ.டி.பிளாஷ் கொண்ட 5 எம்பி கேமரா, ஜியோ டேக்கிங், முகம் மற்றும் சிரிப்பு அறிந்து கிளிக் செய்திடும் தொழில் நுட்பம், ஜிஞ்சர் ப்ரெட் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்,. இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், எச்.டி.எம்.எல். பிரவுசர், சரவுண்ட் ஸ்டீரியோவுடன் எப்.எம். ரேடியோ, டிஜிட்டல் காம்பஸ், எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், ட்ரேக் ஐ.டி. மியூசிக் கண்டறிதல், கூகுள் சர்ச், மெயில், மேப்ஸ், டாகுமெண்ட் வியூவர், வாய்ஸ் மெமோ, முன்னதாகவே சொற்களைத் தரும் டெக்ஸ்ட் டைப் வசதி என அனைத்து நவீன அம்சங்களைக் கொண்டு, வாங்கிப் பயன்படுத்த சிறந்த மொபைல் போனாக இது உள்ளது. திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி, 340 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. 5.5 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் தருகிறது.
இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 15,700 எனக் குறியிடப்பட்டுள்ளது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X