ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2011
00:00

ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி, அது இடையே சரிந்த பின்னரும், தூக்கி நிறுத்தி, வெற்றிப் பாதையில் அதனை நடத்திக் காட்டிய, மனித குலத்திற்கு ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சாப்ட்வேர் மூலம் பல நல்ல திருப்பங்களைத் தந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு நீங்கள் தந்திருக்கும் பாராட்டு மனதைத் தொட்டது. முன்பு பில் கேட்ஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போதும், அட்டைப்படத்தில் படத்தைப் போட்டு பாராட்டும் நன்றியும் தெரிவித்தீர்கள். எந்த இதழும் இதனைச் செய்திடவில்லை. உங்களுக்கு வாசகர்கள் சார்பாக என் பாராட்டுக்கள்.
-டாக்டர் கா. மோகனசுந்தரம், மதுரை.

அல்ட்ராபுக் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போனில் உள்ள குறைகளைக் களைந்து செயல்படும் கம்ப்யூட்டராக உயர்நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தாங்கள் அளித்துள்ள தகவல்கள் நல்ல அப்டேட்டட் கட்டுரையாக உள்ளது.
-டி.எஸ். எலிசபெத் மேரி, சென்னை.

விண்டோஸ் லோகோ கீயுடன் தரப்பட்டுள்ள ஷார்ட் கட் கீ பயன்பாடு தொகுப்பு புதிய பல செயல்பாடுகளைக் காட்டியுள்ளது. இது போல புதிதாய் வந்துள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகளைப் பட்டியலாகத் தரவும்.
-சி. மோகன்ராம், திண்டிவனம்.

பெர்சனல் கம்ப்யூட்டரின் 30 ஆண்டுகள், நல்லதொரு பாடக் கட்டுரை. தகவல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளதனைக் காட்டுகின்றன. நன்றி.
-கி.ரவீந்திரன், ஐ.டி. மாணவர்கள் சார்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர்.

பயர்பாக்ஸ் 6 ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாகக் கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது. நான் டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறேன். புதிய அம்சங்கள் ஓரளவு இருக்கின்றன.
-எஸ். சந்தியா, விருதுநகர்.

கேள்வி பதில் பகுதியில் ஆம்னிபாக்ஸ் குறித்து தகவல்கள் தந்த பின்னரே, அத்தகைய பாக்ஸ் எதனைக் குறிக்கிறது என்று அறிந்து கொண்டோம்.
-சி.மோகனவேல், விழுப்புரம்.

ரோட்கில் அன்டிலீட் மிகவும் பயனுள்ள புரோகிராமாக இருக் கிறது. தகவலுக்கு நன்றி.
-கே. ஆர். மாலா, சிதம்பரம்.

விண்டோஸ் எக்ஸ்பிக்கு எத்தனை வயதானாலும், அதனோடு இணைந்து செயலாற்றும் புரோகிராம்களுடன் தொடர்ந்து பயன்படுத்தத் திட்ட மிட்டுள்ளோம். இணைய இணைப்பு இல்லாமல், அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்தலாமே.
-கா. தென்றல், உடுமலை.

பயனுள்ள டவுண்லோட் புரோகிராம்கள் குறித்து இரண்டு வாரமாக செய்திகள் இல்லையே? அவசியம் தேடி எடுத்து உங்கள் வாசகர்களுக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-டி. கே. சின்னபூபதி, திருப்பூர்.

சமையல் குறித்த இணைய தளக் குறிப்பு எல்லாம் சரி. இதே போல தமிழில் ஏதேனும் இருந்தால், எங்கள் கவனத்திற்குக் கொண்டு வாருங்களேன். நீங்கள் கொடுத்த தளத்தில் தரப்பட்டுள்ள தகவல்களைச் சற்று நிதானித்து தேடி அறிய வேண்டியதுள்ளது.
-கே. தமிழரசி, தேவகோட்டை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X