நோக்கியா டூயல் சிம் போன்கள் அதிவேக விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2011
00:00

இந்தியச் சந்தையில் இரண்டு சிம் மொபைல் என்பது தரப்படுத்தப்பட்ட தேவை ஆகிவிட்ட நிலையில், நோக்கியா நிறுவனமும், இந்த சந்தையில் தன் இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டது. அவை, ராக்கெட் வேகத்தில் இங்கு விற்பனை யாவதாக, நோக்கியா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.
நோக்கியாவிற்கு முன்னரே, மேக்ஸ் மொபைல்ஸ், மைக்ரோமேக்ஸ், கார்பன் எனப் பல நிறுவனங்கள் அதிக அளவில் இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டு, விற்பனைச் சந்தையைப் பிடித்திருந்தாலும், நோக்கியாவின் போன்கள் வந்த பின்னர், அவை கணிசமான இடத்தைப் பெற்றுள்ளன. ஜூன் வரையிலான காலத்தில், நோக்கியா நான்கு இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டது. மியூசிக் போனாக நோக்கியா எக்ஸ்1-01, தொடுதிரையுடன் கூடிய ஸ்லைடர் போனாக, நோக்கியா சி2-03 மற்றும் நோக்கியா சி2-06, ஸ்டைலான மாடலாக நோக்கியா சி2 என அனைத்தும் இரண்டு சிம் இயக்க போன்களாக வந்தன. இவை அனைத்துமே, பட்ஜெட் விலை போனாக, சில அடிப்படை வசதிகளான, எப்.எம். ரேடியோ, அதிகப்படுத்தக் கூடிய மெமரி மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருந்தன.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன்கள் வருகையால், நோக்கியா நிறுவனம் உயர்நிலை போன்கள் சந்தையில் தன் இடத்தைச் சற்று இழந்திருந்தது. ஆனால், வரும் மாதங்களில், விண்டோஸ் போன், நோக்கியா 100 மற்றும் 101 மற்றும் பட்ஜெட் விலை டூயல் போன்கள் அறிமுகத்தால், இழந்த சந்தைப் பங்கு மீண்டும் கிடைக்கவுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Interviewtipsnow.in - Chennai,இந்தியா
29-செப்-201114:30:28 IST Report Abuse
Interviewtipsnow.in Very Good Model..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X