மோட்டாரோலாவின் புதிய இரண்டு சிம் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2011
00:00

எப்போதும் மிகவும் குறைந்த தடிமனுடன் போன்களைத் தயாரித்து வெளியிடும் மோட்டாரோலா நிறுவனம், சென்ற மாதம் மூன்று இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது, அவை இப்போது விற்பனையில் உள்ளன. மோட்டாரோலா எக்ஸ் 212, மோட்டாரோலா எக்ஸ் 119 மற்றும் மோட்டாரோலா எக்ஸ் 109 என்ற பெயர்கள் கொண்ட இவை அனைத்துமே வழக்கமான மோட்டாரோலா நிறுவன போன்களின் அம்சங்கள் அனைத்தும் கொண்டிருந்தாலும், தனித்தன்மை கொண்டவையாகவும் உள்ளன.
மோட்டாரோலா எக்ஸ் 212 மொபைல் 13.9 மிமீ தடிமன் உடையது. ஓர வளைவு களுடன், இழுத்து திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2.4 அங்குல அகலம் கொண்ட எல்.இ.டி. திரை, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, எம்.பி.3 இயக்கும் ஆடியோ-வீடியோ பிளேயர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தும் போர்ட் ஆகியவை கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,190.
மோட்டாரோலா எக்ஸ் 119 குவெர்ட்டி கீ போர்டு மற்றும் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. முந்தையதைக் காட்டிலும் மிகக் குறைவாக 9.9 மிமீ தடிமன் கொண்டது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூகத் தளங்களுக்கு நேரடி இணைப்பு கொண்டது. இதில் 2.4 அங்குல டச் ஸ்கிரீன் திரை, 3 எம்.பி. திறன் கொண்ட கேமரா, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தும் போர்ட், யு.எஸ்.பி. 2 போர்ட், புளுடூத், வை-பி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புஷ் இமெயில் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,190.
மோட்டாரோலா எக்ஸ் 109 மொபைல் போனிலும் குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. இந்த மொபைல் போனிலும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூகத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது.
இதில் 2 அங்குல டச் ஸ்கிரீன் திரை, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தும் போர்ட், புளுடூத், எம்.பெக் 4 பார்மட் சப்போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,590.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தீரன் தனசேகரன்.கொ - ஈரோடு,கொங்குநாடு,இந்தியா
27-செப்-201116:55:31 IST Report Abuse
தீரன் தனசேகரன்.கொ    இ பேப்பர் தினமலர் மிகவும் நன்றாக உள்ளது,அந்நிய ஆதிக்க எதிர்ப்பு போரில் முதல் சுதந்திர போராட்ட வீரராக போராடி நமக்காக தம் இன்உயிரை தியாகம் செய்து மண்ணின் மானம் காத்த ***மாவீரன் தீரன் சின்னமலை***அவர்களின் வரலாற்றை இ பேப்பரில் வெளியிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X