ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2011
00:00

தேடித்தரும் தகவல்களைப் பிரித்து வகைவகையாய் தரும் ஹீலியாட் சர்ச் இஞ்சின் நம் தேடல்களின் முடிவை எளிமைப்படுத்துகிறது. இதனால் வேகமாக முடிவுகளை அறிவதுடன், தேவையற்ற தளங்களை கிளிக் செய்வது தவிர்க்கப்படுகிறது.
-பேரா. சி. ஞானராஜ், மதுரை.

வெகுநாட்களாகவே நாங்கள் எதிர்பார்த்த விண்டோஸ் 7 டிப்ஸ் தொடர்ந்தமைக்கு நன்றி. இதனை வாரந்தோறும் வெளி யிடவும்.
-கா. சின்னத் தம்பி, தேவாரம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நோட்டி பிகேஷன் ஏரியா ஐகான் அமைப்பதற்கான வசதி, நமக்கு மிகவும் உதவுவதாய் உள்ளது. நீங்கள் விளக்கமாகத் தந்த பின்னரே, இது புரிந்தது. நன்றி.
-சா. ஜெயலஷ்மி, மதுரை.

கம்ப்யூட்டர் வேகமாகச் செயல்பட பல நேரங்களில் நீங்கள் கட்டுரை தந்தாலும், இந்த வாரம் தந்த டிப்ஸ்கள் புதிய தகவல்களைத் தந்தன. பிரவுசர் மற்றும் வீடியோ கார்ட் மாற்றுதல் முற்றிலும் புதிய கோணத்தில் பிரச்னைகளுக்குத் தீர்வாகத் தரப்பட்டுள்ளது. தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.
-டாக்டர் செ. உலகநாதன், கோவை.

சில சந்தேகங்களைக் கேட்டால் தவறோ என்று எண்ணியபடி இருந்த நிலையில், அரசின் கூடுதல் இயக்குநரே அவரின் சந்தேகத்தைக் கேட்டு, அதற்கான பதிலை நீங்கள் விவரமாகக் கட்டுரையாகத் தந்தது, என் தயக்கத்தைப் போக்கியது. கற்றுக் கொள்வது வயது மற்றும் நிலையைத் தாண்டியது என்பதை உணர்த்தியது.
-கா. மரியராஜ், தூத்துக்குடி.

கண்ட்ரோல் கட்டளைகள் அனைத்தை யும் வாய்ப்பாடு போல் அமைத்தது சரியான தொகுப்பு.
-ஏ. மஞ்சுளா தேவி, தாம்பரம்.

கேள்வி பதில் பகுதியில் தந்த ஷார்ட்கட் வேர்ல்ட் இணைய தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது குறித்து இன்னும் விபரமாக பெரிய கட்டுரையைத் தந்திருக்கலாம். இணைய தளத்தில் வெளியிடுவதால், பக்கங்களை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-சி. இன்பராஜ், ஓய்வு பெற்ற பொறியாளர், மதுரை.

ஜிமெயிலில் பல படங்களை இணைப்பது எனக்கும் தேவையாய் இருந்தது. குறிப்பாக வனங்களின் போட்டோவினை நண்பர்களுக்கு அனுப்புவேன். உங்கள் குறிப்பு மிக, மிக உதவியாய் உள்ளது. நெஞ்சார்ந்த நன்றி.
-அ. சோமசேகர், கம்பம் மெட்டு.

வெகுநாட்களாக பயர்பாக்ஸ் பயன் படுத்தி வருபவர்களில் நானும் ஒருவன். தொடர்ந்து இதில் கூடுதல் வசதிகள், ஷார்ட்கட் முறைகள் எனத் தாங்கள் அளித்துள்ளவற்றை உடனே பயன் படுத்திப் பார்த்தேன். இன்னும் வேகமாக பிரவுஸ் செய்திட முடிகிறது. குறிப்பாக, ஹோம் பேஜில் பல தளங்களை மொத்தமாக அமைப்பது ஒரு நல்ல வழி.
-சி. சூசைராஜ், புதுச்சேரி.

பைல்களின் அளவு அடிப்படையில், கிராபிக்ஸ் காட்டப்பட்டு, அவற்றை நீக்க உதவும் புரோகிராம் தயாரித்து அளிப்பவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வெகுநாட்களாக சிரமப்பட்ட எனக்கு இதன் மூலம் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னை தீர்ந்தது. இனிமேல், கவனமாக பைல்கள் தங்காமல் பார்த்துக் கொள்வேன்.
-என். சுமதி, திருப்பூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X