இந்த வார இணைய தளம் பெண்களுக்கான உடற்பயிற்சி பாடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2011
00:00

அலுவலகங்களில் பணியாற்றி, வீடுகளில் தங்கள் கடமைகளை மேற்கொண்டு, ஓய்வின்றி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நலம் பாதுகாக்கத் தவறி விடுகின்றனர். உணவுப் பழக்கத்தினைச் செம்மைப் படுத்துவதன் மூலமும், தொடர்ந்து எளிதாகச் சில உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் மூலமும், உடல்நலத்தை இவர்கள் ஓரளவுக்காவது பாதுகாக்கலாம்.
உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், உடம்பில் எந்த பகுதியில் பிரச்னை உள்ளதோ அதற்கான பயிற்சிகளையும் கற்றுத் தரும் இணைய தளம் ஒன்று இலவசமாக இயங்கி வருகிறது. இந்த தளத்தின் பெயர் Exercise Finder. இதன் முகவரி http://www.divine.ca/en/fitnessandnutrition/exercisefinder/c_266. இது பெண்களுக்கு மட்டுமே உடற்பயிற்சிகளைக் கற்றுத் தரும் தளமாகும். இந்த தளத்தைத் திறந்தவுடன், உடம்பில் எந்த பகுதிக்கான உடற்பயிற்சி தேவையோ அதனைக் கிளிக் செய்தவுடன், அதற்கான உடற்பயிற்சிகள் பல பிரிவுகளாகக் காட்டப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, வயிற்றை ட்ரிம் செய்திட விரும்புபவர்கள், பெண்ணின் படத்தில் வயிற்றுப் பாகத்தில் கிளிக் செய்தால், அடுத்த திரையில், வயிற்றின் மேல் பாகம், நடுப்பாக, ஓரங்கள் என கூடுதலாகச் சில பிரிவுகளுக்கான ஆப்ஷன் விண்டோ கிடைக்கிறது.
பின் அவற்றைத் தேர்ந்தெடுத்தவுடன், அதற்கான பல்வேறு பயிற்சிகள் காட்டப்பட்டு, அருகே விளக்கமும் தரப்படுகின்றன.
இந்த பாடங்களின் ஒரு சிறப்பு, தண்ணீரில் இருந்தவாறு எவ்வாறு உடற்பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்று ஒவ்வொரு பிரிவிலும் கூறப்பட்டிருப்பதுதான். ஒவ்வொரு பயிற்சி முறைக்கும், இதனை மேற்கொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நீங்களும் கருத்தினைத் தெரிவிக்கலாம். இதில் காட்டப்படும் உடற்பயிற்சிகள் அனைத்துமே மிக எளிமையானதாகவும், எந்த இடத்திலும் மேற்கொள்ளக் கூடியதாகவுமாக உள்ளன. ஒருமுறை சென்று பார்த்தால், நிச்சயம் இதனை உங்கள் ஆசானாகக் கொள்வீர்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X